கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் – பிரதமர் மோடி அறிவிப்பு..

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் – பிரதமர் மோடி அறிவிப்பு..

கொரோனா தொற்றின் காரணமாக தனது பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நிதி உதவி மற்றும் சிறப்பு திட்டங்களையும் அறிவித்துள்ளார்.



பிரதமரின் அறிவிப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் கோரத்தாண்டவம் மக்களை உலுக்கி வருகிறது. நாளுக்கு நாள் தொற்றின் பாதிப்பும், அதனால் ஏற்படும் இழப்புகளும் அதிகரித்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றது. பல மாநிலங்களிலும் பல கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இருப்பினும் உயிரிழப்புகளை தடுக்க முடியவில்லை. இதனால் பல மாநில அரசுகளும் கொரோனா தொற்றினால் உயிரிழந்த குழந்தைகளுக்கு பல சிறப்பு திட்டங்களையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நாட்டின் பிரதமர் மோடி அவர்கள், கொரோனா காரணமாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் இருவரையும் இழந்த குழந்தைகள் ‘PM-CARES’ திட்டத்தின் கீழ் ஆதரிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். அவர்கள் 18 வயதை அடைந்தவுடன் மாதாந்திர உதவித்தொகையும், PM கேர்ஸில் இருந்து 23 வயதாகும்போது ரூ.10 லட்சம் நிதியும் வழங்கப்படும்.

கொரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வியும், உயர்கல்விக்கான கடனும் கிடைப்பதற்கு உதவியும் செய்யப்படும். மேலும், அந்த கடனுக்கான வட்டியும் PM கேர்சில் இருந்து வழங்கப்படும். 18 வயது வரை இந்த குழந்தைகளுக்கு ஆயுஷ்மான் பாரதத்தின் கீழ் ரூ .5 லட்சம் இலவச சுகாதார காப்பீடு மற்றும் அதற்கான தவணை தொகை PM கேர்சில் இருந்து வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post