8th Tamil Bridge course worksheet 1 solution

 8th Tamil Bridge course worksheet 1 answer key

Tamilnadu state board samacheer kalvi 8th Tamil workbook- bridge course worksheet 1 solution 8th Tamil worksheet 1-37 click here

8th Tamil worksheet 1 answer - Bridge course workbook

1. 'சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க' - என்னும் பாடலடியில் 'கலி' என்பதன் பொருள் என்ன என்பதைக் கண்டறிந்து எழுதுக.

அ) இரவு

ஆ)அறியாமை இருள்

இ) இருட்டு

ஈ) அறிவுச்சுடர்

விடை : ஆ)அறியாமை இருள்

2. 'சிந்துக்குத் தந்தை' எனப் பாரதியாரைப் புகழ்ந்த கவிஞர் யார் எனத் தெரிவுசெய்க.

அ) வாணிதாசன்

ஆ)சுப்புரத்தினதாசன்

இ) பாரதிதாசன்

ஈ)கவிமணி தேசிய விநாயகம்

விடை : இ) பாரதிதாசன்

3. சரியா? தவறா? என எழுதுக.

அ) 'இசைகொண்டு வாழியவே' - இவ்வடியில் 'இசை' என்னும் சொல் புகழைக் குறிக்கிறது.

( சரி)

ஆ) தொல்லையகன்று - என்பதனைப் பிரித்து எழுதக் கிடைப்பது தொல்லை +யகன்று ஆகும். ( தவறு 乂)

இ) பாரதியார், தேசபக்திப்பாடல்கள்மூலம் விடுதலை உணர்வினை மக்களிடையே ஏற்படுத்தினார். (  ✔️ சரி )

ஈ) மொழி,மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. (✔️ சரி )

4. கோடிட்ட இடங்களை நிரப்புக.

அ) *வான மளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி வாழியவே!"

ஆ) 'வைப்பு' என்பதன் பொருள் மக்கள் வாழும் நிலப்பகுதி  ஆகும்.

5. பொருத்தமான நிறுத்தக்குறியிடுக.

பாரதியார் எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார் இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் ஆகும். இவர் பதினோரு வயதில் தமது கவித்திறமையால் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார் மேலும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், இதழாளர், சமூக சீர்திருத்தவாதி விடுதலைப் போராட்ட வீரர் எனப் பல்திறன் பெற்ற வித்தகர் ஆவார்.

விடை:

பாரதியார் எட்டைபுரம் என்னும் ஊரில் பிறந்தார் . இவரது இயற்பெயர் சுப்பிரணியன் ஆகும். இவர் பதினோரு வயதில் தமது கவித்திறமையால் ’பாரதி’ என்ற பட்டத்தைப் பெற்றார். மேலும், இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், இதழாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர் எனப் பலதிறன் பெற்ற வித்தகர் ஆவார். 

6. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.

அ) பாரதியார் நடத்திய இதழ்களின் பெயரினை எழுதுக.

விடை:

இந்தியா,விஜயா

ஆ) தமிழ்மொழி வாழ்த்துப்பாடலில் இடம் பெற்றுள்ள தமிழின் சிறப்புகள் இரண்டனைக் கூறுக.

விடை:

 1)எல்லாக் காலத்திலும் நிலைத்திருப்பது,         2) எல்லாவற்றையும் அறிந்துரைப்பது. 

7. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

அ) பாரதியார் எத்தகைய ஆற்றலைப் பெற்றிருந்தார்?

விடை:

அ)பாரதியார் இளமையிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார். 

ஆ) தமிழ்நாடு எவ்வாறு ஒளிர வேண்டுமெனப் பாரதியார் கூறினார்?

விடை:

 ஆ)பொருந்தாத பழங்கருத்தால் வரும் துன்பங்கள் நீங்கி ஒளிர வேண்டும் என்கிறார். 

8. பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

"செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்

நந்தா விளக்கனைய நாயகியே! - முற்

மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!

 எழில்மகவே! எந்தம் உயிர்",

 -து. அரங்கன்வினாக்கள்

வினாக்கள்;

அ) பிரித்து எழுதுக.

செந்தமிழ்

விடை : செம்மை + தமிழ்

செங்கரும்பு

விடை : செம்மை + கரும்பு

ஆ) தொகைச்சொல்லை விரித்தெழுதுக.

மூவேந்தர்

விடை : சேரர் ,சோழர்,பாண்டியர்

இ) முந்தை மொழிக்கெல்லாம் மூத்தவள் யார்?

விடை: தமிழ் மொழி

9. நீ அறிந்த கவிஞர் ஒருவரைப் பற்றி அரைப்பக்க அளவில் கட்டுரை வரைக. (குறிப்பேட்டில் எழுதுக.)

நான் அறிந்த கவிஞர்

முன்னுரை:

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"

  • 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ' திருக்குறள்'  என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர், உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர், இவர் உலக மக்களால், 'தெய்வப்புலவர்', 'பொய்யில் புலவர்'. 'நாயனார்', 'தேவர்', 'செந்நாப்போதர்', 'பெருநாவலர்', 'பொய்யாமொழிப் புலவர்' என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

பொருளுரை:

  • திருவள்ளுவர் அவர்களின் பிறப்பு மற்றும் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனென்றால், அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்றும், மதுரையில் பிறந்ததாகவும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் சிலரும் கூறுகின்றனர். மேலும், அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். ஆனால், இதுவரை இவை எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை.
  • திருவள்ளுவர் எழுதிய திருக்குறள். வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக 'உலகப் பொது மறை', 'முப்பால்', 'ஈரடி நூல்', ' உத்தரவேதம்', 'தெய்வநூல்', 'பொதுமறை', 'பொய்யாமொழி', 'வாயுறை வாழ்த்து', 'தமிழ் மறை', 'திருவள்ளுவம்' போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் உலக இலக்கிய அரங்கில் அவர் படைத்த சாதனைகள் கணக்கில் அடங்கா.
  •  திருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர். தன் அறிவாலும் மற்றும் சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குறள், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாக மாறி.தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நூல், சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண் கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில்இருக்கிறது. மேலும், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம்,மொழி,பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவதுபோல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக 'உலகப் பொது மறை', 'முப்பால்', 'ஈரடி நூல்', 'உத்தரவேதம்' 'தெய்வநூல்', 'பொதுமறை', 'பொய்யாமொழி', 'வாயுறை வாழ்த்து', 'தமிழ் மறை', 'திருவள்ளுவம்' போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்ககின்றனர்.

முடிவுரை:

"வள்ளுவன் வாக்குப்படி வாழ்வோம்!! 

வாழ்வு சிறக்க உயர்வோம்!!

  • திருவள்ளுவர் மறைந்தாலும், அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல், இக்கால மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழையும் உலகளவில் ஓங்கச் செய்கிறது.இத்தகைய பெருமைமிகு திருவள்ளுவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் அவர் கூறிய குறளின்படி வாழ்ந்து வீடுபேறு அடைவதாகும்

10.உனக்குத் தெரிந்த பாரதியார் பாடல் ஒன்றனை எழுதுக.

விடை:

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும். 

நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும் 

கைவசமாவது விரைவில் வேண்டும்

தனமும் இன்பமும் வேண்டும்

தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும் .

காரியத்தில் உறுதி வேண்டும்

பெண் விடுதலை வேண்டும்

பெரிய கடவுள் காக்க வேண்டும் .

மண் பயனுற வேண்டும்.

வானகம் இங்கு தென் பட வேண்டும்

உண்மை நின்றிட வேண்டும்.

-மகாகவி பாரதியார்.


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post

POST ADS1

 

About KALVIKAVI.COM

Kalvi Arts Youtube & Kalvi kavi.com

மாணவர்களுக்கு தேவையான Study Materials, Important Questions,Model Question Papers ,தினந்தோறும் கல்விச்செய்திகள் இங்கே கிடைக்கும்

POST ADS 2