தமிழகத்தில் இந்த கல்வியாண்டும் ‘ஆல்பாஸ்’–அமைச்சர் தகவல்...

தமிழகத்தில் இந்த கல்வியாண்டும் ‘ஆல்பாஸ்’–அமைச்சர் தகவல்...

கொரோனா பரவல் இப்படியே இருந்தால், பள்ளி மாணவர்களுக்கு வரும்  கல்வியாண்டிலும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டும் ‘ஆல்பாஸ்’:

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவதிலும் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். தற்போது தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக கட்சியின் சார்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஈரோடு மாவட்டம் ஜம்பை பகுதியில் நேற்று (04-04-2021) வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய அவர், ‘குழந்தைகளின் படிப்பை விட, உயிர் தான் முக்கியம் என முதலமைச்சர் கருதினார். அதனால் தான் கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு தேர்வில்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.

இந்த கல்வி ஆண்டிலும் கொரோனா பரவல் அதிகமாக இருந்தால், மாணவர்களுக்கு ஆல்பாஸ் செய்யப்படும். அதே போல ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வியை அறிமுகப்படுத்திய தமிழக அரசு, தற்போது மருத்துவ படிப்புகளுக்கும் பலவித வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது’ என பேசினார.

0/Post a Comment/Comments

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post