> தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் – தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு!! ~ Kalvikavi

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் – தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் - தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் – தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 3 ஆம் தேதி பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் விடைத்தாள்கள் குறித்த வழிகாட்டுதல்களை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திறக்கப்படவில்லை. இந்நிலையில் 10 மாதங்களுக்கு பின்னர் பொதுத்தேர்வு காரணமாக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் வகுப்புகள் திறக்கப்பட்டன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் பாடங்களை விரைவாக ஆசிரியர்கள் முடித்து திருப்புதல் தேர்வுகளும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பொதுத்தேர்வுக்கான முதன்மை விடைத்தாள்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

எனவே தேர்வுக்கான பணிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் விரைவாக கவனிக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள்களில் முதன்மை தாள்களை, மாணவர்களின் விவரங்கள் இடம்பெறும் முகப்பு சீட்டையும் ஒன்றாக இணைக்க வேண்டும். மொழி பாடங்களுக்கு, 30 பக்கங்களுக்கு புள்ளியிடப்பட்ட, கோடிட்ட வெற்றுத்தாள்கள் வழங்கப்படும். அதே போல மாணவர்களுக்கு கூடுதல் விடைத்தாள்களும் வழங்கப்படும். ஒவ்வொரு பாடப்பிரிவுகள் உள்ள மாணவர்களுக்கான விவரங்கள் பின்வருமாறு,

யிரியல் பாடப்பிரிவு – தாவரவியல், விலங்கியல் என தனித்தனி முதன்மை தாள்கள் ஒரே முகப்பு தாள்களுடன் வழங்கப்படும்.

கணக்கு பதிவியியல் பாடப்பிரிவு – கட்டங்கள் உள்ள விடைத்தாள்கள் வழங்கப்படும்.

வரலாறு தேர்வு – இந்திய வரைபடம் மற்றும் உலக வெளிப்புற வரைபட தாள் வழங்கப்படும்.

புவியியல் தேர்வு – ஒரு வெளிப்புற வரைபட தாள், வணிக கணிதம் மற்றும் புள்ளியியலுக்கு, வரை கட்ட தாள் வழங்கப்படும்.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts