TN 12th tamil unit 7 அதிசய மலர் book back question and answer guide pdf download

TN 12th tamil unit 7.2 அதிசய மலர் book back question and answer guide pdf download

Tamilnadu state board samacheer book guide solution unit 1 to 8 book back question and answer guide .12th tamil samacheer guide solution book back and creative important questions,model questions,guide,notes

samacheer guide 12th tamil 7.2 அதிசய மலர் guide answers

கற்பவை கற்றபின்

Question 1.

போர்களுக்கு எதிரான குரல்கள் வெளிப்படும் புதுக்கவிதைகளைத் தொகுத்து வகுப்பறையில் படிக்க.

Answer:

போருக்கு எதிராக குரல்கள்…….

  • இன்று காலையும் போர் விமானங்கள் எங்கள் கிராமத்தின் மேல் சுற்றின. சிலர் பதுங்கு குழிக்குள் அடைக்கலம் சிலர் வெளியே நின்று வெறுத்துப் பார்த்தனர்.

குண்டுகள் வீழ்ந்தன

கிராமத்தின் மத்தியில் புகை மண்டலம்

சிலருக்குக் காயம்; சிலர் மாயம்

எத்தனை பேர் மாண்டனர்

பலருக்கு அந்தக் கணக்குதான் தேவை

பாழும் உலகம் பரிதாபப்படவில்லை .

எங்கள் மேல் விழுமோ கிழக்கில் வெள்ளி வருமோ!

மனிதம் விற்று மதி போற்றும்

மக்கள் வேடத்தில் மாக்கள் கூட்டம்

மதம் தன்னை ஆயுதமாய் ஏந்தி

பகுத்தறியாமல் பகை கொள்வதா

படைகொண்டு தாக்கினால் பாவம

நாங்கள் என்ன செய்வோம்

பாதி பேர் கைது பாதி பேர் காணோம்

பக்கத்து வீட்டில் அப்பா இல்லை

என் வீட்டில் என் அண்ணன் இல்லை

எதிர் வீட்டில் என் நண்பன் இல்லை

எங்கே போனார்கள் ஆண்டு

இரண்டாயிற்று சேதி இல்லை

இறைவனும் எங்கள் முன் வரவில்லை

ஏதேனும் கேட்கலாம் என்றால்

எதைக் கேட்பது எதை விடுவது

மீண்டு வருமா மாண்ட உயிர்கள்

மறு பிறவியிலாவது ஆண்டவா

என்னை படைப்பதை நீ மறந்து விடு.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

அதிசய மலரின் புன்னகையைப் பிடித்தவாறு தமிழ்நதி கடக்க சொல்வது

அ) கடந்தகால துயரங்களை

ஆ) ஆட்களற்ற பொழுதை

இ) பச்சயம் இழந்த நிலத்தை

ஈ) அனைத்தையும்

Answer:

ஈ) அனைத்தையும்


சிறுவினா


Question 1.

அதிசய மலரின் பூச்செடி எவ்வாறு முளைத்ததாக தமிழ்நதி கூறுகிறார்?

Answer:

  • (i) புலம் பெயர்ந்த மக்களின் எண்ணத்தில் மீதமிருக்கும் மரங்களில், நீரில்லா பொட்டல் வெளிப் பகுதியில், போருக்குப் பின் பிறந்த குழந்தை போல முகை (மொட்டு) அவிழ்ந்து மலர்ந்து சிரிக்கிறது அதிசய மலர் ஒன்று.
  • (ii) ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், உலாவிய யானையின் எச்சத்திலிருந்து வளர்ந்திருக்கலாம் இச்செடி.
  • (iii) எவரோ ஒருவருடைய கால் சப்பாத்தின் (காலுறை) பின்புறம் விதை ஒட்டிக்கொண்டு இங்கு வந்து உயிர் பெற்றிருக்கலாம் – என்று தமிழ்நதி கூறுகிறார்.


Question 2.

‘எங்கிருந்தோ வருகிறது

வண்ணத்துப் பூச்சியொன்று

பறவைகளும் வரக்கூடும் நாளை’ – இடம்சுட்டிப் பொருள் விளக்குக.

Answer:

இடம் :

  • தமிழ்நதியின் அதன் பிறகு எஞ்சும்’ கவிதைத் தொகுப்பில் அதிசய மலர்’ என்ற தலைப்பில் இப்பாடல் இடம்பெற்றுள்ளன.

பொருள் :

  • மலரைத் தேடி வண்ணத்துப் பூச்சியும், பறவையும் வரக்கூடும் என்பது பொருள்.

விளக்கம்:

  • மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் உலவிய யானையின் எச்சத்திலோ அல்லது காலனியின் பின்புறம் ஒட்டிக்கிடந்து முளைத்தது அதிசய மலர். அப்பூச்செடியின் அடையாளத்தைக் கண்டு எங்கிருந்தோ வண்ணத்துப்பூச்சியும், பறவையும் நாளை வரக்கூடும் என்று தமிழ்நதி கூறுகிறார்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

‘அதிசய மலர்’ என்னும் கவிதையின் ஆசிரியர்

அ) ஆத்மாநாம்

ஆ) நாகூர்ரூமி

இ) தமிழ்நதி

ஈ) இரா. மீனாட்சி

Answer:

இ) தமிழ்நதி


Question 2.

‘அதிசய மலர்’ என்னும் கவிதை இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு

அ) அதன் பிறகும் எஞ்சும்

ஆ) கானல்வரி

இ) சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பணி

ஈ) கைவிட்ட தேசம்

Answer:

அ) அதன் பிறகும் எஞ்சும்

Question 3.

கவிஞர் தமிழ்நதியின் இயற்பெயர்

அ) கலைச்செல்வி

ஆ) தமிழ்ச்செல்வி

இ) கலைவாணி

ஈ) வாணி

Answer:

இ) கலைவாணி


Question 4.

கவிஞர் தமிழ்நதியின் பிறப்பிடம்

அ) ஈழத்தின் திருகோணமலை

ஆ) கேரளத்தின் திருவனந்தபுரம்

இ) கர்நாடகாவின் மாண்டியா

ஈ) தமிழகத்தின் திருச்செந்தூர்

Answer:

அ) ஈழத்தின் திருகோணமலை


Question 5.

கவிஞர் தமிழ்நதி கலைத்துறையில் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம்

அ) சென்னை

ஆ) கொலம்பியா

இ) யாழ்ப்பாணம்

ஈ) அண்ணாமலை

Answer:

இ) யாழ்ப்பாணம்

Question 6.

கவிஞர் தமிழ்நதி புலம்பெயர்ந்து சென்றுள்ள நாடு

அ) சிங்கப்பூர்

ஆ) மலேசியா

இ) கனடா

ஈ) ஆஸ்திரேலியா

Answer:

இ) கனடா

Question 7.

பொருத்துக.

அ) நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது – 1. நாவல்

ஆ) சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பணி – 2. குறுநாவல்

இ) கானல்வரி – 3. கவிதைகள்

ஈ) பார்த்தீ னியம் – 4. சிறுகதைகள்

அ) 4, 3, 2, 1

ஆ) 3, 2, 1, 4

இ) 4, 1, 2, 3

ஈ) 2, 1, 4, 3

Answer:

அ) 4, 3, 2, 1


Question 8.

தமிழ்நதி எழுதிய ‘ஈழம்: கைவிட்ட தேசம்’ என்பது

அ) சிறுகதைகள்

ஆ) கவிதைகள்

இ) குறுநாவல்

ஈ) நாவல்

Answer:

ஈ) நாவல்


Question 9.

பச்சையம் இழந்த சாம்பல் நிலத்தில் மலரை அடையாளம் கண்டு வருவது.

அ) யானை

ஆ) வண்ணத்துப்பூச்சி

இ) எறும்பு

ஈ) ஈ

Answer:

ஆ) வண்ணத்துப்பூச்சி

குறுவினா

Question 1.

அதிசய மலர் என்ற கவிதை தமிழ்நதியின் எத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன?

Answer:

  • ‘அதன் பிறகு எஞ்சும்’ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

Question 2.

தமிழ்நதியின் மொழிநடை எதனை அடிப்படையாகக் கொண்டது?

Answer:

  • புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும், வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி இவருடையது.


Question 3.

அதிசிய மலரின் புன்னகை எங்கிருந்து தொடங்குகிறது?

Answer:

  • இதழ்களிலிருந்து தொடங்குகிறது.

Question 4.

அதிசய மலர் எப்போது சிரித்தது?

Answer:

  • போருக்குப் பிறகு முகையை அவிழ்த்துச் சிரித்தது.

Question 5.

‘எவருடையவோ

சப்பாத்தின் பின்புறம்

விதையாக ஒட்டிக்கிடந்து

உயிர் தரித்திருக்கலாம்’ – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

Answer:

இடம் :

  • தமிழ்நதியின் ‘அதன் பிறகு எஞ்சும்’ கவிதைத் தொகுப்பில் ‘அதிசய மலர்’ என்ற தலைப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளன.

விளக்கம் :

  • யாருடைய செருப்பின் பின்புறமாக விதையாக ஒட்டிக் கொண்டு வந்து தன் வாழ்வை உருவாக்கிக் கொண்டிருக்கலாம்.

சிறுவினா

Question 1.

கவிஞர் தமிழ்நதி குறிப்பு வரைக.

Answer:

  1. பெயர் : கலைவாணி
  2. பிறப்பு : ஈழம், திருகோணமலை.
  3. வசிப்பு : கனடா
  4. படிப்பு : யாழ்ப்பாணத்தில் கலைத்துறையில் பட்டம்
  5. நூல்கள் : சிறுகதை – நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது
  6. நாவல் – ஈழம், கைவிட்ட தேசம், பார்த்தீனியம்
  7. குறுநாவல் – சாலை வரி
  8. கவிதை – சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post