Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 1.4 சொற்பூங்கா book back question and answer

Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 1.4 சொற்பூங்கா book back question and answer

Tamilnadu state board 8th tamil unit9 book back question and answer ,important question and answer guide, notes term 1,2,3 pdf download

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 1.4 சொற்பூங்கா



    கற்பவை கற்றபின்


    Samacheer Kalvi book 8th Tamil Solutions Chapter 1.4 சொற்பூங்கா samacheerguide


    Question 1.
    ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.
    Answer:

    • பழங்காலத்தில் போர் தொடங்கும் முன் ஆநிரைகளைக் கவர்ந்து வருவர். (ஆ- பசு)
    “கனமான பொருளைத் தூக்காதே, வை” என்று தாய் மகனிடம் கூறினார்.
    கந்தனுக்கு முருகன் கை கொடுத்து உதவி செய்தான்.
    • தை மாதம் முதல் நாள் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படும்.
    “நீ எங்கே சென்றாய்?” என்று சீதா ராணியிடம் கேட்டாள்.
    பாடநூல் வினாக்கள்

    Question 1.
    தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
    Answer:
    முன்னுரை:
    • மொழி என்பதற்குச் சொல் என்பதும் ஒரு பொருள். மொழியை (சொல்லை) ஓர் எழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி என மூன்று வகையாக்குவர்.
    ஓரெழுத்து ஒரு மொழி:
    • உயிர் வரிசையில் ஆறு எழுத்துகளும், ம வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, ந என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும், க, ச, வ என்னும் வரிசையில் நான்கு நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ஒன்றும் ஆக நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.
    பூ-யா சொற்கள்:
    • பூ என்பது ஓரெழுத்து ஒரு மொழி. கா என்பதும் ஓரெழுத்து ஒரு மொழி. இவை இரண்டையும் இணைத்துப் பூங்கா எனக் கலைச்சொல் ஆக்கி வைத்துள்ளனர். யா என்பது வினா. யாது, யாவர், யாவன், யாங்கு, யாண்டு, யார், யாவை என்றெல்லாம் வினாவுவதற்கு முன் வந்து நிற்கும் எழுத்து ‘யா’ தானே!

    Samacheer Kalvi book 8th Tamil Solutions Chapter 1.4 சொற்பூங்கா samacheerguide

    ‘மா’ சொல்:
    • மா என்பதும் ஓரெழுத்து ஒரு மொழிகளுள் ஒன்று. நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை மாநாடு என்கிறோம். பல குறு நிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை மாநிலம் என்கிறோம். மா என்பது விலங்கையும் குறிக்கும். அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா என்றெல்லாம் வந்து விலங்கினப் பெயராகி நிற்கின்றது.
    ஈ-காரச் சொல்:
    • ஈ என்னும் பொதுப் பெயர் ஓயாது ஒலி செய்யும் ஒலிக்குறிப்பைக் காட்டி நிற்கிறது. மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்து வழங்கும் வழக்கம் உள்ளது. ஈ என்பது ஈக என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை. ஈ என்று பல்லைக் காட்டாதே என்று அறிவுரை கூறுவதும் உண்டு .
    கால மாற்றத்தில் கரைந்தவை:
    • இன்னொரு வகையாகவும் பார்க்கலாம். ஆன் என்பது ஆ ஆகியது; மான் என்பது மா ஆகியது; கோன் என்பது கோ ஆகியது; தேன் என்பது தே ஆகியது; பேய் என்பது பே ஆகியது இவையெல்லாம் கால வெள்ளத்தில் கரைந்து தேய்ந்தவை.

    ஏகாரச் சொல்:
    • எட்டத்தில் போகிற ஒருவனை ஏய் என அழைத்தனர். ஏய் என்பது என்னோடு கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை உடையது. ஏய் என்பது ஏ என வழக்கில் ஊன்றிவிட்டது. அம்பை ஏவு என்பர். ஏவுதல் என்பது ‘அம்புவிடுதல்’ ஏவும் அம்பு ‘ஏ’ என்றாகியது. அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ஏவலன் எனப்பட்டான். அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ். அதில் வல்லவனை ஏகலைவன் என்று பாராட்டியது.
     
    முடிவுரை:
    • தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பனவற்றைக் கையில் கனியாகக் காட்டும்.
    Samacheer Kalvi book 8th Tamil Solutions Chapter 1.4 சொற்பூங்கா samacheerguide

    தெரிந்து கொள்வோம்.

    ஓரெழுத்து ஒரு மொழிகள்:

    • உயிர் எழுத்து – ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
    • மகர வரிசை – மா, மீ, மூ, மே, மை, மோ
    • தகர வரிசை – தா, தீ, தூ, தே, தை
    • பகர வரிசை – பா, பூ, பே, பை, போ
    • நகர வரிசை – நா, நீ, நே, நை, நோ
    • ககர வரிசை – கா, கூ, கை, கோ
    • சகர வரிசை – சா, சீ, சே, சோ தகர
    • வகர வரிசை – வா, வீ, வை, வௌ
    • யகர வரிசை – யா
    • குறில் எழுத்து – நொ, து

    ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.

    Samacheer Kalvi book 8th Tamil Solutions Chapter 1.4 சொற்பூங்கா samacheerguide
    • தை – தை பிறந்தால் வழி பிறக்கும்.
    • மை – மாலா எழுதும்போது தாளில் மை சிந்தியது.
    • பா – பா நான்கு வகைப்படும்.
    • மா – முக்கனிகளுள் ஒன்று மா.
    • கை – மாரிக்கு, விளையாடும் போது கை உடைந்தது.

    Post a Comment

    கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

    குறிப்பு:

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
    -அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

    Previous Post Next Post