12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு Book answer

 Samacheer book 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

Tamilnadu state board Syllabus based 12th Tamil Full Guide solutions book back answers guide PDF Download. 12th Tamil important Questions Reduced Syllabus 2020-2021, 12th tamil New reduced Syllabus Question bank 2020-2021 ,12th Tamil notes ,important Questions collection, 12th Tamil unit 1 one mark Questions PDF Download



    Tamilnadu Samacheer book 12th Tamil Solutions இயல் 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

    கற்பவை கற்றபின்

    Question 1.

    பாரதியின் வாழ்வினைக் காலக்கோடாக உருவாக்குக.

    Answer:



    Question 2.

    காலத்தை வென்ற மகாகவியான பாரதிக்குக் கற்பனைக்கடிதம் ஒன்றினை எழுதுக.

    Answer:

    தூத்துக்குடி,

    18 ஜுலை 2019.

    முறுக்கிய மீசையும், முறைத்த பார்வையும், முண்டாசுக் கட்டுக்கும் சொந்தகாரனே, செந்தமிழின் எழுச்சியே வணக்கம்.

    உனது பொன் எழுத்துகளால் தமிழ் அன்னைக்கு வைரக்கிரீடம் சூட்டி மகிழ்ந்தாய்.

    ஆனால், கடைசிவரை சாதாரண தலைப்பாகையினை நீ அணிந்திருந்தாய் என எத்தனைப் பேருக்குத் தெரியும்.பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா என்று பாடினாயே பாரதி. இன்றைய பாலியல் 12 வன்கொடுமையை முன்னரே சாடினாயே பாரதி.

    பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கைப் பெற்றுவிட்டபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று சுதந்திரத்தின் மேன்மையை மக்களின் மனதில் கொடியேற்றி வைத்தவன் நீ.

    .      தமிழில் ஓர் எழுத்துதான் ஆய்த எழுத்து. ஆனால் மற்ற 246 எழுத்துகளையும் ஆயுதமாக்கி வெள்ளையனை விரட்ட விடுதலைக் கவிகளைப் பாடி வேங்கையென விரட்டியவன் நீ.

             என் உள்ளமெனும் பெருங்கோவிலில் வீற்றிருக்கிறாய். என்றொரு நாளாவது உன்னோடு ஒரே மேடையில் கவிபாட நான் விரும்புகின்றேன்.

           நீவிர் சம்மதித்தால் வருகின்ற தமிழ்ப்புத்தாண்டு அன்று நாம் இருவரும் “தமிழே! உனக்குத் தலைவணங்குகிறோம்” என்ற தலைப்பில் ஒரு கவிதையை பொதிகை தொலைக்காட்சியில் பாடுவோம். உன் பதிலை உடன் எதிர்பார்க்கும் அன்பு நண்பன்.

    இப்படிக்கு,

    பாரதிநேசன்.

    பாடநூல் வினாக்கள்

    நெடுவினா

    Question 1.

    பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.

    Answer:

    மொழிப்பற்று :

    • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார். நெல்லையப்பரிடம் அவர் கூறும் போது, ‘நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும், தமிழை வளர்ப்பதை கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண் மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும்.
    • தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி பெற்று வளர வேண்டும். தாய்மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும். வடநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக்கொள்ள முயல வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண்டும் என்கிறார்.

    சமூகப்பற்று :

    • சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும். ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும். அந்நிலை மாறவே ஆணும் : 9 பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள்; அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை என்கிறார். பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார். பெண்ணை வீட்டிற்குள் அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி, ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார்.
    • சமூகம் வளர்ச்சி அடைய தொழில் பெருகவேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும், தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார். சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பூமி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும். அதனைக் கற்று நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும். அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.

    Question 2.

    “சொல்லோவியங்கள்” (கவிதை) என்னும் நூல் உங்கள் பள்ளி ஆசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி, நன்றியுரை ஒன்றை எழுதுக.

    Answer:



    நன்றியுரை:

    “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல

    தன்றே மறப்பது நன்று”

    • என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கு ஏற்ப எனக்கு வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு மாலை வணக்கம்.

    • எப்பொழுதெல்லாம் நம் பேனா தலை குனிகிறதோ அப்பொழுதெல்லாம் நீ வாழ்வில் தலை நிமிர்வாய் என்றபடி தன் பேனாவைத் தலைகுனிய வைத்து இந்த அவையில் தலை நிமிர்ந்து இருக்கும் தமிழாசிரியருக்கு நன்றி. இவர் சொல்லோவியங்கள் என்ற கவிதை நூலை அழகுபட செதுக்கியுள்ளார்.
    • சூர்யா – இளமைத்தமிழே இவர் செலுத்தியதை வர்ணம் தீட்டி குடமுழுக்கு விழா செய்து நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் நூலை வெளியிட்டு வாழ்த்துறை வழங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு நன்றி. இவ்வுலகில் பிறந்து இறந்து எந்தவித அறிமுகமும் இல்லாமல் செல்கின்றனர். அதற்கு மாறாக பிறையைத் தலையிலே சூடிய சிவனைப் போல் இவ்விழாவிற்கு வருகைத்தந்து நூல் அறிமுகவுரை தந்த ஐயா பிறைசூடனுக்கு நன்றி.
    • எந்த ஒரு செயலும் இன்றே தொடங்க இறையருள் தேவை அதோடு செல்வமும் தேவை என்பதற்கு ஏற்ப செல்வத்தின் நாயகனாம் தொழிலதிபர் அண்ணாமலை அவர்களின் கரங்களால் முதல் பிரதியைப் பெற்று துவங்கி வைத்தமைக்கு நன்றி, இவ்விழா நடைபெற முழு காரணமாக விளங்கிய தலைமை ஆசிரியர், ஆசிரிய நண்பர்கள், மாணவர்கள், ஏனைய உறவுகளுக்கு விழாக்குழு மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி! வணக்கம்!

    கூடுதல் வினாக்கள்

    பலவுள் தெரிக

    Question 1.

    தமிழ்நாட்டில் வீதி தோறும் இருக்க வேண்டியது எது எனப் பாரதியார் விரும்புகிறார்

    அ) ஆலயம்

    ஆ) தொழிற்சாலை

    இ) பள்ளிக்கூடம்

    ஈ) இவற்றில் எதுவுமில்லை

    Answer:

    இ) பள்ளிக்கூடம்

    Question 2.

    பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதங்களைப் பதிப்பித்தவர்

    அ) இளசைமணி

    ஆ) ரா.அ. பத்மநாபன்

    இ) கி. ராஜநாராயணன்

    ஈ) கவிகேசரி சாமி தீட்சிதர்

    Answer:

    ஆ) ரா.அ. பத்மநாபன்


    Question 3.

    கருத்து 1 : ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றார் பாரதி.

    கருத்து 2 : பரலி. சு. நெல்லையப்பர் பாரதியின் பாப்பாப்பாட்டைப் பதிப்பித்தவர்.

    அ) இரண்டு கருத்தும் தவறு

    ஆ) இரண்டு கருத்தும் சரி

    இ) கருத்து 1 தவறு, 2 சரி

    ஈ) கருத்து 1 சரி, 2 தவறு

    Answer:

    அ) இரண்டு கருத்தும் தவறு

    Question 4.

    சரியானதைத் தேர்க.

    அ) முரசுப்பாட்டு – குந்திகேசவர்

    ஆ) நெல்லைத் தென்றல் – வ.உ.சிதம்பரனார்

    இ) பாரதி கடிதங்கள் – ரா.அ. பத்மநாபன்

    ஈ) வம்சமணி தீபிகை – சு. நெல்லையப்பர்

    Answer:

    இ) பாரதி கடிதங்கள் – ரா.அ. பத்மநாபன்


    Question 5.

    சரியானதைத் தேர்க.

    அ) கவிகேசரி சாமி தீட்சிதர் – பாரதி கடிதங்கள்

    ஆ) இளசைமணி – சூரியோதயம்

    இ) கண்ணன்பாட்டு – ரா.அ. பத்மநாபன்

    ஈ) வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு – சு. நெல்லையப்பர்

    Answer:

    ஈ) வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு – சு. நெல்லையப்பர்

    Question 6.

    பொருந்தாததைத் தேர்க.

    அ) இளசை மணி – வம்சமணி தீபிகை நூலின் மறுமதிப்பு

    ஆ) வம்சமணி தீபிகை – கவிகேசரி சாமி தீட்சிதர்

    இ) பரலி சு. நெல்லையப்பர் – ஆசிரியர்

    ஈ) பாரதி வாழ்த்து – பரலி சு. நெல்லையப்பர்

    Answer:

    இ) பரலி சு. நெல்லையப்பர் – ஆசிரியர்


    Question 7.

    பொருத்துக.

    அ) வம்சமணி தீபிகை – 1. சு. நெல்லையப்பர்

    ஆ) பாரதி கடிதங்கள் – 2. ரா.சு. பத்மநாபன்

    இ) நெல்லைத் தென்றல் – 3. கவிகேசரி சாமி தீட்சிதர்

    அ) 1, 2, 3

    ஆ) 3, 2, 1

    இ) 2, 3, 1

    ஈ) 1, 3, 2

    Answer:

    ஆ) 3, 2, 1

    Question 8.

    பொருத்துக.

    அ) தமிழ் அழகியல் – 1. பரலி சு. நெல்லையப்பர்

    ஆ) நிலவுப்பூ – 2. தி.சு. நடராசன்

    இ) கிடை – 3. சிற்பி. பாலசுப்பிரமணியம்

    ஈ) உய்யும் வழி – 4. கி. ராஜநாராயணன்

    அ) 4, 3, 2, 1

    ஆ) 1, 4, 2, 3

    இ) 2, 4, 1, 3

    ஈ) 2, 3, 4, 1

    Answer:

    ஈ) 2, 3, 4, 1

    Question 9.

    பாரதி நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதிய இடம், நாள்

    அ) புதுச்சேரி, 19 ஜூலை 1915

    ஆ) நெல்லை , 14 ஜீலை 1914

    இ) கடலூர், 18 ஆகஸ்ட் 1914

    ஈ) காரைக்கால், 19 ஜீலை 1915

    Answer:

    அ) புதுச்சேரி, 19 ஜூலை 1915

    Question 10.

    நெல்லையப்பரை யார் காத்திட வேண்டும் என்கிறார் பாரதி?

    அ) சிவன்

    ஆ) முருகன்

    இ) பராசக்தி

    ஈ) துர்க்கை

    Answer:

    இ) பராசக்தி


    Question 11.

    நெல்லையப்பர் எதனைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று பாரதி கூறினார்?

    அ) பெற்றோரைக் காப்பதை

    ஆ) விடுதலைக்குப் போராடுவதை

    இ) தமிழ் வளர்ப்பதை

    ஈ) சமூக இழிவை களைவதை

    Answer:

    இ) தமிழ் வளர்ப்பதை


    Question 12.

    ‘தம்பி-உள்ளமே உலகம்’ என்று யார் யாருக்குக் கூறியது?

    அ) அறிஞர் அண்ணா , கலைஞருக்கு

    ஆ) பாரதி, நெல்லையப்பருக்கு

    இ) மு.வ., இளைஞர்களுக்கு

    ஈ) திரு.வி.க., தமிழர்களுக்கு

    Answer:

    ஆ) பாரதி, நெல்லையப்பருக்கு

    Question 13.

    உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ-என்பதில் ‘உனக்கு’ என்பது யாரை எதைக் குறிக்கிறது?

    அ) தமிழை

    ஆ) நெல்லையப்பரை

    இ) குயிலை

    ஈ) இளைஞர்களை

    Answer:

    ஆ) நெல்லையப்பரை

    Question 14.

    பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது-என்று கடிதம் எழுதியவர்

    அ) நெல்லையப்பர்

    ஆ) பாரதியார்

    இ) வாணிதாசன்

    ஈ) பாரதிதாசன்

    Answer:

    ஆ) பாரதியார்

    Question 15.

    நெல்லையப்பரைப் பாரதி ………….. என்று கூவு என்கிறார்.

    அ) வாழ்க வாழ்க

    ஆ) தொழில்கள் தொழில்கள்

    இ) மனிதர்கள் மனிதர்கள்

    ஈ) வெல்க வெல்க

    Answer:

    ஆ) தொழில்கள் தொழில்கள்


    Question 16.

    ஓருயிரின் இரண்டு தலைகள் என்பன

    அ) ஆணும் பெண்ணும்

    ஆ) அறிவும் அழகும்

    இ) வாழ்வும் தாழ்வும்

    ஈ) பிறப்பும் இறப்பும்

    Answer:

    அ) ஆணும் பெண்ணும்

    Question 17.

    தமிழ்ப் பள்ளிக் கூடங்களில் ……………… லாம் பயிற்சிப் பெற்று வளர வேண்டும் என்கிறார் பாரதி.

    அ) நவீன கலைகள்

    ஆ) விளையாட்டு

    இ) பாரம்பரிய கலைகள்

    ஈ) அறிவியல் கல்வி

    Answer:

    அ) நவீன கலைகள்

    Question 18.

    வம்சமணி தீபிகை என்னும் நூலை எழுதியவர் ………… வெளியிட்ட ஆண்டு …………….

    அ) கவிகேசரி சாமி தீட்சிதர், 1879

    ஆ) முத்து சாமி தீட்சிதர், 1879

    இ) இளசைமணி, 2008

    ஈ) சீனி விசுவநாதன், 2004

    Answer:

    அ) கவிகேசரி சாமி தீட்சிதர், 1879

    Question 19.

    வம்சமணி தீபிகை என்னும் நூல் யாரைப் பற்றியது?

    அ) சோழ மன்னர்களின் பரம்பரை வரலாறு

    ஆ) எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு

    இ) ஆங்கில ஆட்சியாளரின் அடக்குமுறைகளைக் கூறுவது

    ஈ) பாரதியின் வாழ்ககை வரலாற்றைக் கூறுவது

    Answer:

    ஆ) எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு


    Question 20.

    வம்சமணி தீபிகை நூலின் பதிப்பைத் திருத்தி வெளியிட ஆசை கொண்டு .6.8.1919இல் ஆட்சி செய்த வெங்கடேசர எட்டப்பருக்குக் கடிதம் எழுதியவர் ………..

    அ) பாரதியார்

    ஆ) சீனி. விசுவநாதன்

    இ) இளசைமணி

    ஈ) கவிகேசரி சாமி தீட்சிதர்

    Answer:

    அ) பாரதியார்

    Question 21.

    வம்சமணி தீபிகை நூலின் மூலவடிவம் மறுபதிப்பாக வெளியிட்டவர் …………… ஆண்டு ……………

    அ) கவிகேசரி சாமி தீட்சிதர், 1879

    ஆ) பாரதியார், 1919

    இ) இளசைமணி, 2008

    ஈ) சீனி. விசுவநாதன், 1921

    Answer:

    இ) இளசைமணி, 2008

    Question 22.

    பாரதி தனது பதினைந்து வயதில் எட்டயபுரம் அரசருக்கு எழுதிய கவிதைக் கடிதத்தில் வேண்டப்படும் செய்தி

    அ) ஆங்கில அரசை அகற்ற வேண்டி

    ஆ) பாரதி கல்வி கற்க உதவி வேண்டி

    இ) தன் நண்பன் கல்வி கற்க உதவி வேண்டி

    ஈ) எட்டயப்புரத்தில் கவியரங்கம் நடத்த வசதி வேண்டி

    Answer:

    ஆ) பாரதி கல்வி கற்க உதவி வேண்டி

    Question 23.

    பாரதியின் கடைசிக் கடிதம் யாருக்கு எழுதப்பட்டது?

    அ) எட்டயபுரம் அரசருக்கு

    ஆ) நெல்லையப்பருக்கு

    இ) குத்திகேசவருக்கு

    ஈ) சீனி. விசுவநாதனுக்கு

    Answer:

    இ) குத்திகேசவருக்கு

    Question 24.

    சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரயாக இருந்தவர்

    அ) நெல்லையப்பர்

    ஆ) கண்ண தாசன்

    இ) பாரதிதாசன்

    ஈ) சீனி. விசுவநாதன்

    Answer:

    அ) நெல்லையப்பர்


    Question 25.

    பாரதி நடத்திய இதழ்களில் துணையாசிரியாராக இருந்தவர்

    அ) நெல்லையப்பர்

    ஆ) கண்ண தாசன்

    இ) இளசை மணி

    ஈ) இளசை சுந்தரம்

    Answer:

    அ) நெல்லையப்பர்

    Question 26.

    பாரதியின் பல்வேறு பாட்டுகளை (கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு உள்ளிட்டவை) பதிப்பித்தவர்

    அ) நெல்லையப்பர்

    ஆ) சீனி. விசுவநாதன்

    இ) இளசை மணி

    ஈ) இளசை சுந்தரம்

    Answer:

    அ) நெல்லையப்பர்

    Question 27.

    நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களை எழுதியவர்

    அ) சீனி. விசுவநாதன்

    ஆ) நெல்லையப்பர்

    இ) இளசை மணி

    ஈ) இளசை சுந்தரம்

    Answer:

    ஆ) நெல்லையப்பர்

    Question 28.

    வ. உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்

    அ) சீனி. விசுவநாதன்

    ஆ) இளசை மணி

    இ) இளசை சுந்தரம்

    ஈ) நெல்லையப்பர்

    Answer:

    ஈ) நெல்லையப்பர்


    Question 29.

    லோகோபகரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர்

    அ) சீனி. விசுவநாதன்

    ஆ) இளசை மணி

    இ) இளசை சுந்தரம்

    ஈ) நெல்லையப்பர்

    Answer:

    ஈ) நெல்லையப்பர்





    Post a Comment

    கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

    குறிப்பு:

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
    -அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

    Previous Post Next Post