பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் எடப்பாடி ஓரிரு நாட்களில் வெளியிடுவார்

 


மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பு வைக்கப்பட்ட போதிலும் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 


பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி தமிழகம் முழுவதும் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தை எழுத்து மூலம் தெரிவித்தனர். 


95 சதவீத பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து இருப்பதால் முதல்-அமைச்சர் இதுகுறித்த அறிவிப்பை ஓரிரு நாட்களில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
y
Please Wail material is Loading...