அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் சூழ்நிலையை பொறுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிகள் திறப்பு தொடர்பான நிலையை வெளிப்படுத்துவர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 ஈரோட்டில் வைத்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.மத்திய அரசின் பள்ளிகள் திறப்பது தொடர்பான விஷயம், தமிழகத்தின் சூழ்நிலையை பொறுத்தே ஏற்றுக் கொள்ளப்படும்.

*முதல்வரின் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு பள்ளிகள் திறப்பு தொடர்பான அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்படும்.

*சந்தேகம் இருந்தால் பெற்றோரிடம் ஒப்புதல் வாங்கிய பின்னர் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்ற விஷயம் குறித்தும் முதல்வர் ஆய்வு செய்தே உத்தரவு பிறப்பிப்பார்.*பாடசுமை குறைக்கும் பணிகள் நிறைவுபெற்று முதல்வரிடம் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

*குஜராத்தில் தமிழக பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுகளை பரிசீலித்த பின்னர் தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பிப்பார்.

*கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு மிகவும் பாதுகாப்புடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது " என்று தெரிவித்தார்.

*அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் சூழ்நிலையை பொறுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிகள் திறப்பு தொடர்பான நிலையை வெளிப்படுத்துவர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
 Click Image - School Books Download