+1 தேர்வில் மறுக்கூட்டல், மறுமதிப்பீடு கோரியவர்களின் மதிப்பெண் பட்டியல் செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

+1 Result நாளை

 +1 தேர்வில் மறுக்கூட்டல், மறுமதிப்பீடு கோரியவர்களின் மதிப்பெண் பட்டியல் செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற +1 பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் நாளை மறுநாள் (செப். 16) பிற்பகல் வெளியாக உள்ளது. மதிப்பெண்களில் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர். பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இப்பட்டியலில் பதிவெண் உள்ள மாணவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள இணையத்தளத்தில் தங்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post