கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் வேண்டும்- இபிஎஸ் கடிதம்

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் வழங்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு முதல்வர் இபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.


கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டியது கட்டாயம் என பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி. அறிவித்தது. ஆனால், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக முதல்வர் இபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில்

‛கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும். செப்டம்பர் மாதத்தில் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் வழங்க வேண்டும். செமஸ்டர் தேர்வு குறித்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்,' என வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post