12th Next annoncement

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டு, 
முடிவுகள் வெளியிடப்பட்டன. 

உயர்கல்விக்காக பொதுத்தேர்வு முடிவுகளுக்கு காத்திருந்த மாணவர்களுக்கு தமிழக அரசின் திடீர் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து 12ஆம் வகுப்பு குறித்த அடுத்தடுத்து அறிவிப்புகளை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post