பள்ளி பாடப் புத்தகத்தில் கொரோனா பற்றிய பாடம்

பள்ளி பாடப் புத்தகத்தில் கொரோனா பற்றிய பாடம்

சென்னை , மே 9- கொரோனா வைரஸ் குறித்த பாடம், வரும் கல்வி ஆண்டில், பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து, தற்போதைய மாணவர்களும், வருங் கால சந்ததியினரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்காக, பள்ளி பாடப் புத்தங்களில், இது குறித்த பாடம் சேர்க்கப்பட உள்ளது.

தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை யில், சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்திலும், ஆறு முதல், 10 வரை, அறிவி யல் பாடத்தி லும், கொரோனா வைரஸ் பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்கள் ளுக்கும், கொரோனா வைரஸ் பாடம் இடம் பெற உள்ளது.

நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு பதப்படுத்து தல், நுண் வேதியியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில், கொரோனா பாடங் கள் இணைக்கப்பட உள்ளன.

கொரோனா வைரஸ் தொடக்கம் அதன் வடிவம், அதில் இடம் பெற்றுள்ள புரத செல்களின் தன்மை, மிருகங்களிடம் பரவிய வைரஸ், மனிதனுக்கு பரவிய முறை, அத நாள், மனிதர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பு போன்ற அம்சங்கள், பாடங் களில் இடம்பெறும்.

இதற்காக, உயிரியல் பிரிவு ஆசிரியர்கள், கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை திரட்டி வருவதாக, பள்ளி கல்வி வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.
Previous Post Next Post