WhatsApp Group Join Now
Telegram Group Join Now

June/July 2026 Hr. Sec. Supplementary Examination - Scan Copy Downloading & Revaluation / Re-total Applications

ஜூன் / ஜூலை 2026, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (2) மற்றும் 1ARREAR துணைத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 13.08.2026 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று Notification-ஐ Click செய்தவுடன் Hr. Sec. Supplementary Examinations, JUNE/JULY-2026 Scan Copy Download" στη வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் "Application for Retotalling Revaluation στ 5 Click வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து அதனை 14.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 11.00 மணி முதல் 17.08.2026 (திங்கட்கிழமை) அன்று மாலை 5.00 மணிக்குள் (15.08.2026 மற்றும் 16.08.2026 அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திலும், தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திலும் ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத் தொகையினை பணமாகச் செலுத்த வேண்டும்.

மறுமதிப்பீடு

பாடம் (ஒவ்வொன்றிற்கும்)

- Rs 505/-

மறுகூட்டல்

உயிரியல் பாடம் மட்டும்

- Rs.305/-

ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்)

ரூ.205/-

விடைத்தாள் நகல் பதிவிறக்கம் மற்றும் மறுகூட்டல்/ மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு 9498383075 / 9498383076 என்ற கைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Share:

0 Comments:

Post a Comment