10ம் & பிளஸ் 2 பொதுத்தேர்வு 2026 – தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை மேலும் உயர்த்த, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
📅 பொதுத்தேர்வு தேதிகள் (2025 – 2026)
- பிளஸ் 2 பொதுத்தேர்வு : மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை
- 10ம் வகுப்பு பொதுத்தேர்வு : மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை
🏫 பள்ளிகள் & மாணவர் எண்ணிக்கை
மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்:
- 105 உயர்நிலைப் பள்ளிகள்
- 115 மேல்நிலைப் பள்ளிகள்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்:
- 10ம் வகுப்பு : 37,883 மாணவர்கள்
- பிளஸ் 2 : 34,966 மாணவர்கள்
📉 கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பள்ளிகள்
கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் சில அரசு பள்ளிகளில் 90% க்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பதிவாகியது.
85% க்குக் கீழ் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பள்ளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🎯 மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில்,
“2024ல் 96.97 ஆக இருந்த பிளஸ் 2 தேர்ச்சி விகிதம், 2025ல் 97.48 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் 10ம் வகுப்பு தேர்ச்சியும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதனை மேலும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாடங்களைப் புரிந்துகொள்ளத் தடுமாறும் மெல்லக் கற்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் அடைவு நிலையை தலைமையாசிரியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.”
For more education updates visit Kalvi Arts
0 Comments:
إرسال تعليق