6,7,8,9,10,11,12th Exam Question Paper 2025 - 2026 | Important | Answer key | Syllabus

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.!!!

 பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.!!


பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2023 - 24-ம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளில் சேருவதற்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிப்பது ஜூன் 19-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களும் இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. ஜூன் 28-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு பின்னரே, மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கப்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் இடம் கிடைக்காதவர்கள், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேருவார்கள் என்பதால் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு தொடங்காத நிலையில், மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு இன்று தொடங்குவது குறிப்பிடத்தக்கது.


Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel