தங்கத்தின் விலை அதிரடியாக சரிவு நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

 தங்கத்தின் விலை அதிரடியாக சரிவு நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது. வாரத்தின் முதல் நாளிலேயே தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரம் குறித்து இப்பதிவில் காண்போம்.

தங்கம் விலை:

இந்தியாவில் அதிக அளவு தங்கத்தை பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆபரணத்தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்து வந்தது. இந்த விலை உயர்வால் பெண்கள் நகைகள் வாங்குவதில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.


இன்றைய (ஏப்.10) காலை நேர நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 320 சரிந்து ரூ. 44,800க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.5,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து வெள்ளி 20 காசுகள் குறைந்து 1 கிராம் ரூ.80.00க்கும் ஒரு கிலோ ரூ. 80.000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts