தமிழக 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்வானது 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை மாதிரி வினாத்தாள் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
மாதிரி வினாத்தாள்:
- 10th Public Exam official Model Question Paper 2023 - Set 1 - PDF Download
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 2023 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அண்மையில் வெளியானது. அதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.
இந்த தேர்வானது ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்ததாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 6ம் தேதி தொடங்கும் இந்த 10ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறும்.மேலும் 10-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவும் வகையில் அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள் தொகுப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment