27-01-2023 திண்டுக்கல் மாவட்ட உள்ளூர் விடுமுறை - திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்!

27-01-2023 திண்டுக்கல் மாவட்ட உள்ளூர் விடுமுறை - திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பிரதான கோவிலான மலைக்கோவில் கும்பாபிஷேகம் 27-ந் தேதி நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 27-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு மாவட்ட கலெக்டர் கடிதம் எழுதியிருந்தார்.


திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பிரதான கோவிலான மலைக்கோவில் கும்பாபிஷேகம் 27-ந் தேதி நடைபெறுகிறது.

இந்த விழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வர இருப்பதால் 27-ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு அந்த மாவட்ட கலெக்டர் கடிதம் எழுதியிருந்தார். அவரது கோரிக்கையை அரசு ஏற்று, 27-ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) உள்ளூர் விடுமுறையை அறிவிக்க கலெக்டருக்கு அதிகாரத்தை வழங்கி அரசு உத்தரவிட்டிருந்தது .

தற்போது மாணவர்களுக்கான 27-01-2023 திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் செய்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post