11th tamil Important 2 marks - Public Exam 2023 ( செய்யுள் )

11th tamil Important 2 marks - Public Exam 2023 ( செய்யுள் ) 

1.இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.

 • “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம் கூடில்லாத பறவை”

2.பாயிரம்’ பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?

 • நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து, நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும்.

3.ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின – தொடரின் பொருள் யாது?

 • மரங்கள் வெட்டப்பட்டன ,
 • மழை பெய்யவில்லை. 
 • மண்வளம் குன்றியது.
 •  வாழ்வதற்கான சூழல் இல்லாததால், ஆதரவற்றனவாய்க் குருவிகள், இருப்பிடம் தேடி அலைந்தன

4.வளருங் காவில் முகில்தொகை ஏறும் – பொன்

மாடம் எங்கும் அகிற்புகை நாறும் – அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன

 • கா- சோலை 
 • முகில் - மேகம் 
 • தென்கரை நாட்டின் உயர்ந்து வளர்ந்த சோலைகளில், மேகக்கூட்டம் தங்கிச் செல்லும் என்பதாகும்.

5.காற்றின் தீராத பக்கங்களில், எது எதனை எழுதிச் சென்றது?

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று, ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் சென்றது.

6.காவடிச்சிந்து என்பது யாது?

 • தமிழ்நாட்டில் பண்டைக்காலம்முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசை மரபே, ‘காவடிச்சிந்து’ . 
 • முருக பெருமானை வழிபட பால், காவடி முதலானவற்றை கொண்டு  செல்வோர் வழியிடை பாடலாக பாடிச் செல்வர்.

7.தமிழர்கள் புகழையும் பழியையும் எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?

புகழ்: புதன் புகழ் வரும் என்றால், தமிழர்கள் தம் உயிரையும் கொடுப்பர்.

பழி : பழி வரும் என்றால், உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

8.சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?

 • செயலின் வலிமை, 
 • தன் வலிமை, 
 • பகைவனின் வலிமை, 
 • துணையானவரின் வலிமை

9.மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்?

 • மருந்து : செல்வம்
 • மருந்து மரமாக இருப்பவர் : பெருந்தகையாளர் 

10.மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.

 • மேருமலைபோல் மதீனா நகரின் மேல்மாடங்கள் உயர்ந்திருந்தன.
 • அங்காடிகள் நிறைந்த தெருக்களில் எழுந்த பேரொலி, பெருங்கடல்போல் இருந்தது.

11.சாழல் – விளக்குக.

 • சாழல்’ என்பது, பெண்கள் விளையாட்டு. 
 • இந்த விளையாட்டின்போது ஒருத்தி வினாக் கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமையும். 
 • இறைவன் செயலைப் பழிப்பதுபோல் அந்த வினா இருக்கும். இறைவன் செயலை நியாயப்படுத்துவதுபோல் அந்த விடை இருக்கும்.

12.உழைப்பாளர்களின் தோள்வலிமையால் விளைந்தன யாவை?

 • உழைப்பாளர்கள் தங்கள் தோள்வலிமையால் பாழ்நிலத்தைத் பண்படுத்திப் புதுநிலமாக்கினர்.
 • அழகு நகர்களையும் சிற்றூர்களையும் உருவாக்கினர்.
 • வரப்பெடுத்து வயல்களையும், ஆற்றைத் தேக்கி நீர்வளத்தையும் பெருக்கி, உழுது விளைபொருள்களை உற்பத்தி செய்தனர்.

1 Comments

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post

POST ADS1

 

POST ADS 2

Half yeraly Question Paper 2023, Important
12th Half Yearly Question Paper 2023
11th Half Yearly Question Paper 2023
10th Half Yearly Question Paper 2023
9th Half Yearly Question Paper 2023
8th Half Yearly Question Paper 2023
7th Half Yearly Question Paper 2023
6th Half Yearly Question Paper 2023