10 மாவட்டங்களில் இரு நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு

10 மாவட்டங்களில் இரு நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு!


சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஞாயிற்றுக்கிழமை (டிச.18) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் சில நேரங்களில் 55 கி.மீ. வேகத்தில் காலை வரை வீசக்கூடும்.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் திங்கள் கிழமை (டிச.19) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் இடையிடையே 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் இப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் (டிச.20, 21) 10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக திங்கள் கிழமை (டிச.19) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.செவ்வாய்க்கிழமை (டிச. 20) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இட மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதன்கிழமை (டிச.21) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஞாயிற்றுக்கிழமை (டிச.18) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் சில நேரங்களில் 55 கி.மீ. வேகத்தில் காலை வரை வீசக்கூடும்.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் திங்கள் கிழமை (டிச.19) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் இடையிடையே 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் இப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts