6th Social Lesson 10 - சாலை பாதுகாப்பு | Term 3

6th Social Lesson 10 - சாலை பாதுகாப்பு | Term 3


பாடம்.10 சாலை பாதுகாப்பு Book Back Answers

I. கீழ்க்கண்டவைகளுக்கு விடையளி

1. சாலை பாதுகாப்பு குறித்த முழக்கங்களை எழுதவும்.

• நடைபாதையில் நடப்போம்! நலமுடனே பயணிப்போம்!!

• சிக்னலை மதிப்போம்! சிக்கலை தவிர்ப்போம்!!

• கவனமாக ஓட்டுவோம்! காலமெல்லாம் வாழ்வோம்!!

• வாகனத்தை நிறுத்தி செல்போன் பேசுவோம்!

• தலைக்கவசம் அணிவோம்! சீட் பெல்ட் அணிவோம்!!

• படியில் பயணம்! நொடியில் மரணம்!!

• இடைவெளி காப்போம்! இன்னலை தவிர்ப்போம்!!

• போதையில் பயணம்! பாதையில் மரணம்!!

2. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை அடையாளம் காண்க.

 


    U திருப்பம்                         செல்லக்கூடாது                     குறுக்கு சாலை        மருத்துவமனை

3. குறியீடுகள் வகைகளை விவரி

கட்டாயக் குறியீடுகள்:

நாம் சாலைகளில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவைகள் பற்றிய விதிகளாகும். இவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை. இந்த குறியீடுகள் வட்ட வடிவில் காணப்படுகின்றன.

 


எச்சரிக்கைக் குறியீடுகள்:

 


சாலைகளின் சூழ்நிலைகள் குறித்த எச்சரிக்கைகளைச் சாலை பயன்பாட்டாளர்களுக்கு அறிவிப்பவை எச்சரிக்கைக் குறியீடுகள் ஆகும். இவை பொதுவாக முக்கோண வடிவத்தில் காணப்படுகின்றன.

அறிவுறுத்தும் குறியீடுகள்:

 


திசைகள் மற்றும் சேர வேண்டிய இடங்கள் குறித்த தகவல்களை அறிவுறுத்துவதாக அமைகின்றன. இவை பொதுவாக செவ்வக வடிவத்தில் காணப்படுகின்றன.

4. சாலை பாதுகாப்பு விளக்கு பற்றி சிறு குறிப்பு வரைக


 

சிவப்பு – நில்

• நிறுத்தக் கோட்டிற்கு முன் காத்திருக்கவும்

• நிறுத்தக்கோடு இல்லாத இடங்களில் சாலை போக்குவரத்து விளக்கு தெளிவாக தெரியும்படி சாலையில் நிற்கவும்.

• பச்சை நிற விளக்கு ஒளிரும் வரை காத்திருக்கவும்.

• சிவப்பு விளக்கு ஒளிரும் நேரத்தில் தடைசெய்யும் குறியீடுகள் இல்லாத போது இடப் பக்கம் திரும்பிச் செல்லலாம். ஆனால் பாதசாரிகளுக்கும், பிற போக்குவரத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்.

மஞ்சள் – கவனி

• நிறுத்தக் கோட்டைத் தாண்டிய பிறகு நிறுத்துவதால் விபத்து ஏற்படும் என்று எண்ணினால் மஞ்சள் விளக்கு ஒளிரும்போது தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ளலாம். எனினும் அதிக கவனத்துடன் செயல்படவும்.

பச்சை – செல்

• பாதை தடையற்று இருப்பதை உறுதி செய்து கொண்டு பயணத்தைத் தொடரலாம்.

• தடை செய்யும் குறியீடுகள் இல்லாதபோது நீங்கள் வலப் பக்கமாகவோ அல்லது இடப் பக்கமாகவோ திரும்பிச் செல்லலாம். ஆனாலும் மிகுந்த கவனத்துடன் இருந்து, பாதையைக் கடக்கும் பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

• பச்சை நிற அம்புக் குறி அது காட்டும் திசை நோக்கிப் பயணிக்கலாம் என்பதைக் குறிக்கிறது

5. பாதசாரிகள் செய்யவேண்டியன எவை?

• • நடைபாதை இருக்கும் இடங்களில் சாலைகளின் இரு பக்கங்களிலும் நடக்கலாம்.

• நடைபாதைகள் இல்லாத சாலைகளில் எதிர் வரும் வாகனங்களை நோக்கி வலப் பக்க ஓரத்தில் நடக்க வேண்டும்.

• ஜீப்ரா கிராஸிங்குகள், பாதசாரிகளுக்கான மேம்பாலங்கள் மற்றும் சுரங்க வழி பாதைகளைப் பயன்படுத்த வேண்டும்.

• இவ்வசதிகள் இல்லாத பகுதிகளில் சாலையைக் கடக்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

• 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெரியவர்கள் துணையோடு சாலைகளைக் கடக்க வேண்டும்.

• பாதுகாப்பான தூரத்தில் வாகனங்கள் வரும்போது சாலையைக் கடக்க வேண்டும்.

•  இரவு நேரங்களில் வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும்.

6. பாதசாரிகள் செய்யக்கூடாதவை யாவை?

• சாலைகளை ஓடி கடக்கக் கூடாது.

• நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு முன்புறத்திலோ அல்லது வாகனங்களுக்கு இடையிலோ சாலையைக் கடக்கக் கூடாது.

• வாகன ஓட்டுநருக்குத் தெளிவாக தெரியாத மூலகைளிலிருந்தும் வளைவுகளில் இருந்தும் சாலையைக் கடக்கக் கூடாது.

• சாலை தடுப்புகளைத் தாண்டிக் குதித்துச் சாலையைக் கடக்கக் கூடாது.

7. பள்ளி வாகனங்களில் பயணிக்கும்போது செய்ய வேண்டியவை

• காலையில் முன்கூட்டியே எழுந்து இல்லத்திலிருந்து முன்கூட்டியே கிளம்பிவிட வேண்டும்.

• பயணிக்க வேண்டிய பேருந்தில் நிர்ணயிக்கப்பட்ட இடத்திலிருந்து வரிசையில் நின்று ஏற வேண்டும்.

• பேருந்தில் ஏறிய பிறகு சரியான முறையில் நடந்து கொள்ளுதல் வேண்டும்.

• பேருந்தில் இருக்கும் பிடிமானங்களைப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

• நிர்ணயிக்கப்பட்ட நிறுத்தத்தில் மட்டுமே இறங்க வேண்டும்.

• பேருந்து முழுவதும் நின்றபிறகு மட்டுமே இறங்க வேண்டும்

• சாலை போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டுனர் கடைப்பிடிக்கவில்லை என்றால் அதனைப் பள்ளி நிர்வாகத்தினர்/ பெற்றோர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts