10th Tamil Second Revision Answer key - March 2022

10th Tamil Second Revision Answer key - 28-03-2022

குறிப்பு : 

(i)அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

Also Available here
  •  10th Tamil second Revision Question paper 2022 - Download here
  • 10th English second Revision Question paper 2022 - Download here

(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 

1..'உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரிடம் யார் கூறியது?

(அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் 

(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார் 

(இ) மருத்துவரிடம் நோயாளி 

(ஈ) நோயாளியிடம் மருத்துவர்

விடை : ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார் 

-2. வித்துவக்கோடு - என்னும் ஊர் உள்ள மாநிலம் :

(அ) ஆந்திரா 

(ஆ) கேரளா 

(இ) தமிழ்நாடு 

(ஈ) கர்நாடகா 

விடை : ஆ) கேரளா

3."வாடா கண்ணா" என்று தன் மகளை தாய் அழைப்பது :

(அ) பால் வழுவமைதி 

(ஆ) திணை வழுவமைதி 

(இ) இட வழுவமைதி 

(ஈ) மரபு வழுவமைதி 

விடை : (அ) பால் வழுவமைதி 

4.“மாளாத" – என்ற சொல்லின் பொருள் :

(அ) ஓயாத

(ஆ) முறியாத 

(இ) தீராத

(ஈ) ஆகாத

விடை : (இ) தீராத

5. தன்மை; முன்னிலை, படர்க்கை என்பன________ ஐ குறிப்பனவாகும். -

(அ) மூன்று காலங்கள் 

(ஆ) மூன்று பால்கள் 

(இ) மூன்று நிலைகள் 

(ஈ) மூன்று இடங்கள் 

விடை : ஈ) மூன்று இடங்கள் 

6.“ஒரு பேனா எழுதக்கிடைக்குமா"? என்று நீங்கள் கேட்கும்போது "இந்தப் பென்சிலை எடுத்துக்கொள்” என உங்கள் நண்பன் கூறுவது ?

(அ) வினா எதிர் வினாதல் விடை 

(ஆ) உற்றது உரைத்தல் விடை

(இ) இனமொழி விடை 

(ஈ) உறுவது கூறல் விடை

விடை : (இ) இனமொழி விடை 

7.அருந்துணை என்பதைப் பிரித்தால் :

(அ) அருமை + துணை 

(ஆ) அரு + துணை 

(இ) அருமை + இணை 

(ஈ) அரு + இணை 

விடை : அ) அருமை + துணை 

8.''பொருள்கோள்'' என்பது சொற்களை பொருளுக்கு ஏற்றவாரு சேர்த்து அல்லது ______பொருள் கொள்வதாகும்.

(அ) உருவாக்கி 

(ஆ) எழுதி

(இ) மாற்றி

(ஈ) திருத்தி

விடை : (இ) மாற்றி

9.கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?

(அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால் 

(ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

(இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

 (ஈ) அங்கு வறுமை இல்லாததால்

விடை :(ஈ) அங்கு வறுமை இல்லாததால்

10. மருத நிலப்பகுதிக்கு அழகு சேர்ப்பன:

(அ) புல்வெளிகள் 

(ஆ) விலங்கினங்கள் 

(இ) நீர் நிலைகள் 

(ஈ) மரம் செடிகள்

விடை : (இ) நீர் நிலைகள்

11. இளவேனிற் காலம் என்பது :

(அ) சித்திரை, வைகாசி 

(ஆ)ஆனி, ஆடி 

(இ) ஆவணி, புரட்டாசி 

(ஈ) ஐப்பசி, கார்த்திகை

விடை : (அ) சித்திரை, வைகாசி 

12.பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடை தருக. 

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை 

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம் 

பொருந்துவதும் கல்வியென்றே போற்று. -

வினாக்கள்:

12. 'மருளை அகற்றி' என்பதில் 'மருள்' என்ற சொல்லின் 

(அ) மயக்கம்

(ஆ) மகிழ்ச்சி 

(இ) மனத்திட்பம்

(ஈ) இருள்

விடை : அ) மயக்கம்

13.இப்பாடலில் 'மதி'என்ற சொல் குறிப்பது: 

(அ) பண்பு

(ஆ) பணிவு

(இ) அறிவு

 (ஈ) மகிழ்வு 

விடை : (இ) அறிவு

14. "கல்வியென்றே" - என்ற சொல்லை பிரிக்கக் கிடைப்பது: 

(அ) கல்வி + என்றே 

(ஆ) கல்வி + யென்றே 

(இ) கல்வி + அன்றே 

(ஈ) கல்வி + யன்றே 

விடை : (அ) கல்வி + என்றே 

15.இப்பாடலில் பெருமைப்படுத்தப்படுவது

(அ) தமிழ்

 (ஆ) அறிவியல்

(இ) கல்வி 

(ஈ) இலக்கியம்

விடை : (இ) கல்வி

பகுதி - II (மதிப்பெண்கள் - 18) 

பிரிவு - 1

குறிப்பு : எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். வினா எண் 21-க்கு கட்டாயமாக விடையளிக்கவும். 

16. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.

(அ) தமிழர், பண்டைய நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக்காணும் இயல்புடையவர்கள். 

விடை : தமிழர்கள் எத்தகைய இயல்புடையவர்கள் ?

(ஆ) "கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்" என்று பாரதி பெருமைப்படுகிறார். 

விடை : 

"கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்" என்று யார் பெருமைப்படுகிறார் ?

17. செய்குதம்பி பாவலரின் கல்வி பற்றிய கருத்துக்களில் இருந்து இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

விடை : 

கற்போம்! கற்போம்!

அருளைப் பெருக்க கற்போம்!

கற்போம்! கற்போம்!

அறிவினைப் பெற கற்போம்!

கற்போம்! கற்போம்!

மயக்கம் விலக்க கற்போம்!

கற்போம்! கற்போம்!

உயிருக்குத் துணையாக கல்வியைக் கற்போம்!

18. கம்பனைப் பற்றிய புகழ்மொழிகள் இரண்டினை எழுதுக. 

விடை : 

  1. கல்வியில் பெரியர் கம்பர்.
  2. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.

19. உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய் எழுந்திராய் காலதூதர் கையிலே 'உறங்குவாய் உறங்குவாய்' கும்பகன்னனை என்ன சொல்லி' எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்க சொல்கிறார்கள்? 

விடை : 

  • ‘கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்கத் தொடங்கி விட்டது. அதனைக் காண்பதற்கு எழுந்திடுவாய்’ என்று சொல்லி எழுப்பினார்கள்.
  • வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே படுத்து உறங்கச் சொல்கிறார்கள்.

20. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக

அ) உழவர்கள் மலையில் உழுதனர்'

(ஆ) முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாரே. பரதவர் கடலுக்குச் சென்றனர்

விடை : 

அ)உழவர்கள் வயலில் உழுதனர்.

ஆ.நெய்தல்பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர். 

(அல்லது) 

தாழைப்பூச் செடியைப் பார்த்தவாரே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர்.

21. 'உலகு' என நிறைவுறும் திருக்குறளை எழுதுக." 

விடை 

குற்றம் இலானாய்க் குடிசெய்து வாழ்வானைச் 

சுற்றமாச் சுற்றும் உலகு

பிரிவு - 2 

  • குறிப்பு : எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்,

22. கலைச்சொற்கள் தருக. 

(அ) Terminology - கலைச்சொல்

(ஆ) Intellectual - அறிவாளர்

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா-

22.தனிப்பெயர்களை எழுதுக. 

(அ) மாடுகள்  - மாடு

(ஆ) செங்கற்கள்  - செங்கல்

23.தன்மைப் பெயர்களை அட்டவணைப்படுத்துக?

விடை :

நான், யான், நாம், யாம் 

24. "எய்ட் தேர்ட்டி பஸ் ஐ மிஸ் பண்ணிட்டேன்டா, ஃபிரண்டை பைக்ல ஸ்கூல்ல டிராப் பண்ண சொல்லி இருக்கேன். ஸ்கூலுக்கு நைன் தேர்ட்டிக்கு ரீச் ஆயிடுவேன்னு சார்கிட்ட சொல்லிடு""... 

அயல்மொழிச் சொற்களை நீக்கி சரியான தமிழ் சொற்களை இட்டு பத்தியை சரி செய்க

விடை :

." 8.30  பேருந்தை  தவற விட்டு விட்டேன், நண்பர்களை இருசக்கர வாகணத்தில் பள்ளியில் விடச் சொல்லி இருக்கேன். பள்ளிக்கு 9.30 க்கு வந்து விடுவேன் ஆசிரியரிடம் சொல்லிடு""... 

25. உறங்குவாய் - பகுபத உறுப்பிலக்கனம் தருக. 

உறங்கு + வ் + ஆய்

  • உறங்கு - பகுதி
  • வ் - எதிர்கால இடைநிலை
  • ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

26. கொண்டு கூட்டு பொருள்கோள் - குறிப்பெழுதுக.

விடை : 


27. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.

பகலவன் பட்டொளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு இல்லையெனும்படி மறைந்துவிட இடையே இல்லையெனும்படியான நுண்ணிய இடையாள் சீதையொடும் இளையவன் இலக்குவனொடும் போனான் அவன் நிறம் மையோ பச்சைநிற மரகதமோ மறிக்கின்ற தீலக்கடலோ கார்மேகமோ ஐயோ ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவு கொண்டவன் இராமன் 

விடை : 

28. சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக. 

மரம், சந்தனம், கொடி, முல்லை, காடு, மணம்

விடை :  

முல்லைக்கொடி

சந்தனக்காடு

சந்தனமரம்

பகுதி - II (மதிப்பெண்கள் -18)

பிரிவு - 1 

  • குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்

29. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.. 

ஆழமும் பெரிய அலைகளையும் உடைய கங்கை ஆற்றைக் கடந்து செல்வார்களா? யானைகள் கொண்ட சேனையைக் கண்டு. புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோ நான்! தோழமை என்று இராமர் சொன்ன சொல், ஒப்பற்ற சொல் அல்லவா?தோழமையை எண்ணாமல் இவர்களை கடந்து போகாவிட்டால் அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என உலகத்தார் என்னைப் பழி சொல்லமாட்டார்களா? 

(அ) கங்கை ஆற்றினை ஏன் கடந்து செல்ல முடியாது ?

விடை : கங்கை ஆழமும் பெரிய அலைகளையும் உடையது

(ஆ) உலகத்தார் எவ்வாறு பழிப்பர் என வேடன் கூறுகிறார் ? 

விடை : அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என உலகத்தார் பழிப்பர் என வேடன் கூறுகிறார்

(இ) வீரர்கள் புறமுதுகு காட்டுவதற்கான காரணமாக சுட்டப் பெறுவது என்ன?

விடை : யானைகள் கொண்ட சேனையைக் கண்டு.

30. அறிவினா, அறியாவினா, ஐயவினா - ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டுகள் தருக. 

31. 'தண்டலை மயில்களாட தாமரை 'விளக்கந் தாங்க' - இடம் சுட்டிப் பொருள்

விடை : 

பிரிவு - 2

  • குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். - 34-க்கு. கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

32. செயற்கை அறிந்த கடைத்தும் - உலகத் தியற்கை அறிந்து செயல் -

(அ) அடி எதுகை சொற்களை எடுத்தெழுதுக.

(ஆ) திருவள்ளுவர் ஒரு செயலை எவ்வாறு செய்ய வேண்டும் எனக் கூறுகிறார் 

(இ) 'இயற்கை' என்ற சொல்லைக் கொண்டு தொடர் ஒன்றை உருவாக்குக.

33. மருத்துவர். மருத்துவம், மருத்துவமனை ஆகியவற்றின் அக்கால, இக்கால நிலைகள் பற்றி மூன்று தொடர்கள் எழுதுக.

34. அடிபிறழாமல் எழுதுக. 

(அ) “வெய்யோன் ஒளி தன் மேனியில்" எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல் 

அல்லது 

(ஆ) "வாளால் அறுத்துச்'' எனத் தொடங்கும் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி பாடல்

பிரிவு - 3

  • குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 
35. 'என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?' - வினா வகையினையும், விளக்கத்தையும் எழுதுக. 

36. நிரல் நிறை பொருள்கோள் - எடுத்துக்காட்டுடன் விளக்குக.

37. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். 

-இக்குறட்பாவினை அலகிட்டு வாய்ப்பாடு தருக.

பகுதி - IV (மதிப்பெண்கள் : 25) 

  • குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்,

38. (அ) நயங்களைப் பாராட்டி எழுதுக.

நிலாவையும் வானத்து மீனையும் 

காற்றையும் நேர்ப்பட வைத்தாங்கே 

குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு

கோல வெறிபடைத்தோம் 

உலாவும் மனச்சிறு புள்ளினை 

எங்கனும் ஓட்டி மகிழ்ந்திடுவோம்

பலாவின் கனிச்சுளை வண்டியில் 

ஓர் வண்டு பாடுவதும் வியப்போ?

அல்லது

(ஆ) கல்வியே எல்லாம் தரும் - என்பதை கா.ப.செய்குதம்பி பாவலரின்"நீதிவெண்பாவழி விளக்குக. 

39.(அ) கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் பெற்றோர் உற்றோர் நலன்களுக்காக உங்கள் நேரத்தினை செலவிட்டத்தை விவரித்து நண்பனுக்குக் கடிதம் எழுதுக. 

அல்லது

(ஆ) "பள்ளி விளையாட்டு விழா நிறைவுற்றப்பின், விளையாட்டு மைதானத்தின் நிலை பற்றியும் தூய்மையைப் பராமரித்தல் நிலை பற்றிய தங்கள் தலைமை ஆசிரியருக்கு கடிதமாக எழுதுக.

40.காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. (பக்க எண். 97 படம்)

41.திருவாரூர் மாவட்டம் - நன்னிலம், வள்ளலார் நகர், சேக்கிழார் தெரு 210 ஆம் இலக்க வீட்டில் வசித்து வரும் இனியவன் மகள் யாழினி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். அவர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராகச் சேர்ந்து வாள்வீச்சு விளையாட்டில் பயிற்சி பெற விரும்புகிறார். தேர்வர் தம்மை யாழினியாகக் கருதி கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக. 

42. (அ) இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம்' என்ற நிலையில் இருந்து 'வெடிப்பு' என்ற நிலைக்கு மாற்றம் பெற்று உள்ளது. 'முப்பது கோடி முகமுடையாள்' என பாடிய பாரதியின் கவிதை வரிகளை நாளும் நினைவு கூர்ந்தே வருகிறோம். நூறு ஆண்டுகளில் நூற்று முப்பத்தாறு கோடி மக்கள் தொகையினை எட்டி உள்ளோம். நிலப்பரப்பினை விரிவு செய்ய இயலாத நிலையில் மக்கள் பயன்படுத்துகின்ற பொருட்கள் - கழிவுகள் - குப்பைகள் காணுமிடமெல்லாம் நிறைந்து கிடக்கின்றன. இவற்றை அகற்றுவது சவாலானப் பணியாகவே உள்ளது. மிகுந்து ஓடும் கழிவு நீர் ஓடைகள், வீதியெங்கும் வீசி எறியப்படும் நெகிழிக் குப்பைகள், எப்போதும் புகைந்து கொண்டே இருக்கும் குப்பை மேடுகள் - இவைகளை காணும் போது உங்கள் மனதில் ஏற்படும் வினாக்கள் என்னென்ன? அவற்றிற்கான தீர்வுகள் என்னென்ன? என்பதை பட்டியலிடுக. 

அல்லது 

(ஆ) மொழிப் பெயர்க்க:

Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the streets. It is performed by rural artists. There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Artists - dress themselves with heavy costumes and bright makeup. Koothu is very popular among rural areas. 

விடை :

தெருக்கூத்து அதன் பெயருக்கு ஏற்றாற்போல் தெருவில் நடக்கும் ஒரு மிகச் சிறந்த கலை. இதில் கிராமப்புற கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இதன் கதைகள் பழங்காவியமான இராமாயணம், மகாபாரதம் மற்றும் பழைய புராணங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இதில் பழைய பாடல்களை உரையாடலுடன் கலைஞர்கள் உருவாக்குகிறார்கள். பதினைந்து முதல் இருபது கலைஞர்கள் சிறிய இசைக்குழுவாக சேர்ந்ததுதான் தெருக்கூத்து கூட்டம். இசைக்குழுவில் பல பாடல்கள் இருந்தபோதும் கலைஞர்கள் தங்கள் குரலிலேயே பாடுவார்கள். கலைஞர்கள் மிகச் சிறந்த உடையலங்காரமும் ஒப்பனையும் செய்திருப்பர். கிராமப் புறங்களில் கூத்துமிகவும் பிரபலமானது.

பகுதி - V (மதிப்பெண்கள் : 24)

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும், 

43. (அ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன்-என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக. 

அல்லது

(ஆ) 'தமிழ் நீதி நூல் - திருக்குறள் - எனும் தலைப்பில் தங்கள் மனம் கவர்ந்த பத்து திருக்குறளை ஆய்வு செய்க. 

44. (அ) உடல் நோயைத் தீர்க்கும் மருத்துவத்திற்கும் உள்ளத்து நோய் தீர்க்கும் கடவுள் பற்றிற்கும் உள்ள ஒற்றுமைகளை குலசேகராழ்வார் வழி நின்று விளக்குக.

அல்லது

(ஆ) கல்வியே நலம் தரும் செல்வம்' என்பதனை நீதி வெண்பா வழியாக செய்குதம்பி பாவலர் வழி நின்று விளக்குக.

45. குறிப்புகளைப் பயன்படுத்தி கட்டுரை எழுதுக.' (அ) முன்னுரை - திண்ணைப் பள்ளிக்கூடம் - அரசுப் பள்ளிகள் - மேல்நிலைக் கல்வி ,கல்லூரி, பல்கலைக் கழகங்கள் - அறிவியல் தொழிற்நுட்பப் பயன்பாடு - கல்வி இணை செயல்பாடுகள் - இலவச படிப்புதவிப் பொருட்கள், நிதி உதவிகள், மாணவர் மேம்பாடு - முடிவுரை. 

அல்லது

(ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதித் தலைப்பிடுக. முன்னுரை - செய்திகள் அறிதல் - பயன்பாடு - செய்திகள் பெறும் வகைகள் செய்தித்தாள்கள் - வார மாத இதழ்கள் - வானொலிப் பயன்பாடு குழு விவாதங்கள் வாழ்வியல் மாற்றங்கள் - வாசிப்பை நேசிப்போம் - இல்லம் தோறும் நூலகம்  - முடிவுரை.

Previous Post Next Post