9th Tamil -திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.

திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க. 

நெடுவினா

 மொழிக்குடும்பம்: 

மனித இனம் வாழ்ந்த இட அமைப்பும், இயற்கை அமைப்பும் @வறுபட்ட ஒலிப்பு முயற்சிகளை உருவாக்கத் தூண்டின. இதனால் பல மொழிகள் உருவாயின. 

உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் அவற்றின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு, உறவு ஆகியவற்றின் 

அடிப்படையில் பல மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 

அவற்றுள் ஒன்று திராவிட மொழிக்குடும்பம். 

 திராவிட மொழிக்குடும்பம்: 

  • தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வடமொழிச் சொற்கள் மிகுந்து காணப்பட்டதால் இவை 
  • சமஸ்கிருத மொழியிலிருந்து உருவானவை என்ற கருத்து அறிஞர் பலரிடையே நிலவி வந்தது. 
  • முதன் முதலில் பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் @பான்ற 
  • மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்வு செய்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை 
  • என்ற கருத்தை முன் வைத்தார். இவற்றிற்குத் தென்னிந்திய மொழிகள் எனப் பெயரிட்டார். 
  • ஹோக்கன் என்பார் திராவிட மொழிகள் அனைத்தையும் இணைத்துத் தமிழியன் என்று 
  • பெயரிட்டதோடு ஆரிய மொழிகளிலிருந்து இவை மாறுபட்டவை என்று கருதினார். 

 திராவிடம்: 

  • தமிழ் என்ற சொல்லிலிருந்து தான் "திராவிடா" என்ற சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 
  • ஹீராஸ் பாதிரியார், இம்மாற்றத்தைத் தமிழ் , தமிழா , தமிலா ,டிரமிலா , ட்ரமிலா ,த்ராவிடா ,திராவிடா என்று விளக்குகிறார். 

 திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்: 

கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் திμõவிட மொழிகள் ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சமஸ்கிருத மொழிக்குள்ளும் சொல்வாக்குச் செலுத்தியுள்ளன என்பதையும் பல்வேறு இலக்கணக் கூறுகளைச் ”சுட்டிக்காட்டி விளக்கினார். 

 தலைமைச்சிறப்பு: 

  • திராவிட மொழிகள் அனைத்திற்கும் மூலமொழியாகத் திகழ்வது தமிழ்மொழி. ஏனைய திராவிட மொழிகள் தமிழிலிருந்து தோன்றி வளர்ந்தவை. 
  • எண்பது விழுக்காடு அளவுக்குத் திராவிட மொழிக்கூறுகளைக் கொண்டுள்ள ஒரு திராவிடமொழி 
  • தமிழ். இத்தகு தலைமைச் சிறப்பு வாய்ந்தது நம் தமிழ்மொழி. 

 சொல்லொற்றுமை: 

  • பிற திராவிட மொழிகளின் வேர்ச்சொற்களை ஆராய்ந்தால் அவை தமிழ்மொழியின் வேர்ச் சொற்களைச் சேர்ந்தே தோன்றியுள்ளன என்பதை அறியலாம்.

  • தமிழின் பல அடிச்சொற்களின் ஒலியன்கள் ஒலி இடம் பெயர்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளில் வடிவம் மாறியிருக்கின்றன. 

 முடிவுரை: 

  • திராவிட மொழிக்குடும்பத்தின் தொன்மையான மூத்த மொழியாகத் திகழ்கின்ற தமிழ் பிற திராவிட மொழிகளைவிட ஒப்பியல் ஆய்விற்குப் பெருந்துணையாக அமைந்துள்ளது. 
  • தமிழ்மொழி மூலத்திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப்பாதுகாத்து தனித்தன்மை மாறுபடாமல் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாக விளங்கிவருகிறது

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post