> 9th Social Science Guide தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் Book Back Answers ~ Kalvikavi

10,11,12th New Study Material 2025 - 2026

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

9th Social Science Guide தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் Book Back Answers

9th Social Science Guide தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் Book Back Answers

Lesson 3 : தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

 1.சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது?

அ) ஆங்கிலம்

ஆ) தேவநாகரி

இ) தமிழ்-பிராமி

ஈ) கிரந்தம்

விடை:

இ) தமிழ் – பிராமி

 2.தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும், குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?

அ) தீபவம்சம்

ஆ) அர்த்தசாஸ்திரம்

இ) மகாவம்சம்

ஈ) இண்டிகா

விடை:

இ) மகாவம்சம்

 3.காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?

அ) கரிகாலன்

ஆ) முதலாம் இராஜராஜன்

இ) குலோத்துங்கன்

ஈ) முதலாம் இராஜேந்திரன்

விடை:

அ) கரிகாலன்

 4.சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?

அ) புகளூர்

ஆ) கிர்நார்

இ) புலிமான்கோம்பை

ஈ) மதுரை

விடை:

அ) புகளூர்

 5.(i) பொருள் பரிமாற்றத்துக்கான ஊடகமாக நாணயங்கள் சங்க காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

(ii) மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் இருந்த சாதாரண மக்கள் பிராகிருத மொழி பேசினார்கள்.

(iii) ரோமானிய ஆவணமான வியன்னா பாப்பிரஸ் முசிறி உடனான வணிகத்தைக் குறிப்பிடுகிறது.

(iv) தமிழ் இலக்கண நூலான பத்துப்பாட்டில் திணைக்குறித்த கருத்து இடம்பெற்றுள்ளது.

அ) (i) சரி

ஆ) (ii) சரி

இ) (i) மற்றும் (ii) சரி

ஈ) (iii) மற்றும் (iv) சரி

விடை:

இ) (i) மற்றும் (ii) சரி

 6.(i) பதிற்றுப்பத்து பாண்டிய அரசர்களையும் அவர்களின் ஆட்சிப் பகுதிகளையும் குறித்துச் சொல்கிறது.

(ii) காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிக நடவடிக்கைகளை அகநானூறு விவரிக்கிறது.

(iii) சோழர்களின் சின்னம் புலி ஆகும்; அவர்கள் புலி உருவம் பொறித்த, சதுர வடிவிலான செம்பு நாணயங்களை வெளியிட்டார்கள். (iv) நெய்தல் என்பது மணற்பாங்கான பாலைவனப் பகுதி ஆகும்.

அ) (i) சரி

ஆ) (ii) மற்றும் (iii) சரி

இ) (iii) சரி

ஈ) (iv) சரி

விடை:

இ) (iii) சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 1.கற்கள், செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் ஆகியவற்றின் மீது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ______ ஆகும்.

விடை:

கல்வெட்டியல்

 2.கடந்தகாலச் சமூகங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகளாக உள்ள சில பொருட்களை மீட்டெடுப்பதற்கு ஓரிடத்தை முறைப்படி தோண்டுதல் _____ ஆகும்.

விடை:

தொல்லியல்

 3.மௌரியர் காலத்தில் ஆட்சிக்கலை மற்றும் பொருளாதாரம் குறித்து கௌடில்யர் எழுதிய நூல் _____ ஆகும்.

விடை:

அர்த்தசாஸ்த்ரா

 4.______ என்பது பிரிவு அல்லது வகை என்ற பொருளில் செய்யுள்களில் பயன்படுத்தப்பட்ட கருப்பொருள்; மேலும், இது ஒரு வாழ்விடத்தை அதன் தனித்தன்மை வாய்ந்த இயற்கைக்கூறுகளுடன் குறிப்பதாகவும் உள்ளது.

விடை:

திணை


 5.கிரேக்கர்கள், ரோமானியர்கள், மேற்கு ஆசியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மேற்கத்தியர்களை ____ என்னும் சொல் குறிக்கிறது.

விடை:

யவனம்

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

 1.அ) இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல், குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

ஆ) எரித்ரியன் கடலின் பெரிப்ளூஸ் இந்தியா உடனான மிளகு வணிகம் குறித்துக் கூறுகிறது.

இ)இந்தியாவில்தொடக்ககாலத்தில்பயன்படுத்தப்பட்டநாணயங்களில் உருவங்கள்பொறிக்கப்பட்டிருந்தன; நாணயங்கள் பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன.

ஈ) சங்க காலம் வெண்கலக் காலத்தில் வேரூன்றத் தொடங்கியது.

விடை:

அ) இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல், குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

 2.அ) சேரர்கள் காவிரிப்பகுதியை ஆட்சி செய்தனர். அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும்.

ஆ) மாங்குளம் தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகள் அரசன் கரிகாலனைக் குறிப்பிடுகின்றன.

இ) தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.

ஈ) உப்பு விற்றவர்கள் வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வணிகத்துக்காக மாட்டு வண்டியில் தங்கள் குடும்பத்தினருடன் பயணம் செய்தார்கள்.

விடை:

இ) தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.

V. சுருக்கமான விடை தருக.

 1.தொல்லியல் ஆய்வுக்களங்கள் கடந்த கால வரலாற்றுச் சான்றுகளை அளிக்கின்றன – உன் கருத்துகளை முன்வைக்கவும்.

விடை:

  • வரலாற்றின் தொடக்ககாலத்தைச் சேர்ந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வழியாக சங்ககால மக்களின் வாழ்க்கை முறை குறித்த சான்றுகள் கிடைத்துள்ளன.
  • அகழாய்வு நிகழ்விடங்கள்: அரிக்கமேடு, அழகன் குளம், கீழடி, கொடுமணல், உறையூர், கரூர், காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம்,கொற்கை, வசவ சமுத்திரம் மற்றும் கேரளத்தின் பட்டணம்.
  • சங்ககாலத் துறைமுகப்பட்டிணமான புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேட்டில் அகழ்வாய்வு நடந்தது. இவ்வாய்வில் சரக்குக் கிடங்கு, தொட்டிகள், உறை கிணறுகள், தெரு ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

 2.சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள நாணயங்கள் எந்தளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?

விடை:

  • சேர, சோழ, பாண்டிய அரசர்களின் நாணயங்கள், முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள், ரோமானிய நாணயங்கள் ஆகியன சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள உதவும் சான்றாகும். சங்ககாலத்தின் முதன்முதலாக செலவாணிக்குரிய பொருளாக நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன.

  • முத்திரை பொறித்த நாணயங்கள் கொடுமணல், போடிநாயக்கனூர் ஆகிய ஊர்களிலும், ரோமானிய நாணயங்கள் கோயம்புத்தூர் மண்டலத்திலும் கிடைத்துள்ளன.

3.சங்ககாலத்தில் விவசாயம் ஒருமுக்கியமானவாழ்வாதாரமாக இருந்தது. இதற்கானகாரணங்களைக் கூறுக.

விடை:

  • சங்க காலத்தில் விவசாயம் ஒரு முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது. ஏனெனில், நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன. ஆற்று வடிநீர்ப் பகுதிகளிலும், குளம், ஏரி போன்ற நீர்ப்பாசன வசதி பெற்ற பகுதிகளிலும் நெல் பயிரிடப்பட்டது. புன்செய் நிலத்தில் தானியங்கள் பயிரிடப்பட்டன.
  • செந்நெல், வெண்ணெல், ஐவனநெல் என நெல் வகைககள் குறித்து இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆதிச்சநல்லூர், பொருந்தல் ஆய்வுகளில் தாழிகளுடன் நெல்லும் கிடைத்துள்ளது. காடுகளில் இடம் விட்டு இடம் மாறி சாகுபடி செய்யும் முறை புனம் எனப்பட்டது.

4.அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.

விடை:

தமிழகமும் வெளிநாட்டுத் தொடர்புகளும்

அயல் நாடுகளுடனான தமிழகத் தொடர்புக்கான சான்றுகள்:

  • ரோமானியக் கப்பல்கள் பருவக்காற்று காலத்தில் மேலைக்கடலான அரபிக்கடலைக் கடந்து தமிழகக் கடற்கரைகளுக்கு வந்தன.
  • கிரேக்க ரோமானிய, மேற்கு ஆசிய மக்களான யவனர்களோடு வாணிபத் தொடர்பு இருந்தது. (யவனர் – கிரேக்க அயோனியா பகுதி சொல்)
  • செங்கடல் பகுதியில் உள்ள பெர்னிகே, குசேர் அல் காதிம், தாய்லாந்து நாட்டில் உள்ள குவான் லுக் பாட் ஆகிய இடங்களில் கிடைத்த அகழாய்வுப் பொருட்கள்.
  • தமிழ் இலக்கியங்கள் தென்கிழக்கு ஆசியாவை சுவர்ணபூமி என குறிப்பிடுகின்றன.

(ஏற்றுமதி : மிளகு போன்ற நறுமணம் பொருட்கள், நவமணிகள், யானைத் தந்தம். இறக்குமதி : தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட உலோகங்கள்).

VI. விரிவான விடையளிக்கவும்.

1.தமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின?

விடை:

  • இரும்புக் காலத்தில் மக்கள் குழுக்களின் தலைவர்கள் தங்கள் நிலப்பகுதியை தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். இவர்களிடமிருந்தே வேந்தர்கள் தோன்றினார்கள். இவ்வாறு சங்காலத்திற்கான அடித்தளம் வேர்கொண்டது.

சேரர்:

  • சேரர் ஆட்சிப்பகுதி தற்கால கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதி, தலைநகர் வஞ்சி, துறைமுகங்கள் முசிறி மற்றும் தொண்டி, பதிற்றுப்பத்து சேரர்கள் குறித்து குறிப்பிடுகிறது. மாலைபனம்பூ, இலச்சிளை வில் அம்பு. (சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகள் எழுதிய காப்பியம் சிலப்பதிகாரம்)

சோழர்:

  • சோழரின் ஆட்சிப்பகுதி காவிரி வடிநிலம் மற்றும் தமிழ்நாட்டின் வடபகுதி. தலைநகர் உறையூர், துறைமுகம் பூம்புகார் (காவிரிப்பூம்பட்டிணம்) பட்டினப்பாலை காவிரிப்பூம்பட்டினம் குறித்து குறிப்பிடுகிறது. இலச்சிளை புலி. (கரிகால் சோழன் கல்லணை கட்டினார்).

பாண்டியர்:

  • பாண்டியரின் ஆட்சிப்பகுதி தென் தமிழகம். தலைநகர் மதுரை, துறைமுகம் கொற்கை, தமிழ் இலக்கியங்கள், தமிழ்ச்சங்கங்கள் குறித்து குறிப்பிடுகின்றன. மாலை வேப்பம்பூ, இலச்சிளை மீன். (பாண்டியன் நெடுஞ்செழியன் குறித்து மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கூறுகின்றன

2.சங்க காலத்தில் தொழில்களும் கைவினைக் கலைகளும் எவ்வாறு பொருளாதாரத்தை மேம்படுத்தின?

விடை:

  • சங்ககாலப் பொருளாதார மேம்பாட்டுக்கு தொழில்கள் மற்றும் கைவினைக் கலைகளின் பங்கு.
  • வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வணிகம், பணப்பரிமாற்றம், வேட்டையாடுதல், மீன் பிடித்தல் என மக்கள் வாழ்ந்த நிலங்களுக்கு ஏற்ப தொழில்களும் அவை சார்ந்த பொருளாதாரமும் இருந்தன. வணிகம் கடல் கடந்து பல நாடுகளுடன் நடைபெற்றது.
  • உயிர் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதில் வேளாண்மை முதலிடத்தில் இருந்தது. நன்செய், புன்செய் நிலங்களில் நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன. மாடுகள், ஆடுகள் வளர்த்தல் மூலம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கினர்.
  • பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள் இருந்தனர். பொருள் உற்பத்தி செய்யும் அமைப்புகளாக தொழிற்கூடங்கள் இருந்தன.
  • அன்றாட வாழ்வுக்குத் தேவையான பலவித மட்கலங்கள் தயாரிக்கப்பட்டன. (கரிய நிறம், செந்நிற வண்ணம் பூசிய வெள்ளைக் கோடுகள், கருப்பு-சிவப்பு நிறத்தவை)
  • இரும்பை உருக்கும் உலைகள் இருந்தன (உழக்கருவிகள், வாள், ஈட்டி, கத்தி தயாரிக்கப்பட்டன)
  • பலவித அணிகலன்கள், தங்க ஆபரணங்கள் செய்யப்பட்டன. (சுட்ட களிமண், செம்பு, தங்கம், வெள்ளி, நவமணிகள், செவ்வந்திக் கல், செம்மணிக்கல் ஆகியவற்றில் ஆபரணங்கள் செய்யப்பட்டன.
  • கண்ணாடி மணிகள் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் தயாரிக்கப்பட்டன.
  • சங்குகளை அரிந்து வளையல் செய்யும் தொழிலும், முத்துக் குளித்தலும் நடைபெற்றள்ளது.

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. சங்க காலத் தமிழகம் மற்றும் அன்றைய தமிழ் அரசுகளின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளையும் தென்னிந்திய வரைபடத்தில் குறிக்கவும்.

2. அருங்காட்சியகத்துக்குச் சென்று, பழங்காலத் தமிழர்கள் குறித்த கல்வெட்டுச் செய்திகள், அவர்கள் பயன்படுத்திய நாணயங்கள், கருவிகளைப் பற்றிய செய்திகளை சேகரிக்க.

3. வரலாற்றின் தொடக்க காலத்தில் மக்கள் வாழ்ந்த அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், கீழடி போன்ற இடங்களுக்குச் சென்று பார்வையிடுக.

4. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த ஆய்வுக்களங்களிலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் பொருட்கள் மற்றும் தமிழ்-பிராமி எழுத்து முறை குறித்து ஓர் ஆய்வை மேற்கொள்க.


Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel