9th Social Science Guide செவ்வியல் உலகம் Book Back Questions and Answers

9th Social Science Guide செவ்வியல் உலகம் Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1._____ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.

அ) அக்ரோபொலிஸ்

ஆ) ஸ்பார்ட்டா

இ ஏதென்ஸ்

ஈ) ரோம்

Answer:

இ) ஏதென்ஸ்


2.கிரேக்கர்களின் மற்றொரு பெயர் _____ ஆகும்.

அ) ஹெலனிஸ்டுகள்

ஆ) ஹெலனியர்கள்

இ பீனிசியர்கள்

ஈ) ஸ்பார்ட்டன்கள்

Answer:

ஆ) ஹெலனியர்கள்

3.ஹன் அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் ______ ஆவார்.

அ) வு-தை

ஆ) ஹங் சோவ்

இ லீயு-பங்

ஈ) மங்கு கான்

Answer:

இ) லீயு-பங்

4.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _____ ஆவார்.

அ) முதலாம் இன்னசென்ட்

ஆ) ஹில்ட்பிராண்டு

இ முதலாம் லியோ

ஈ) போன்டியஸ் பிலாத்து

Answer:

ஈ) போன்டியஸ் பிலாத்து

5.பெலப்பொனேஷியப் போர் ______ மற்றும் ______ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றது.

அ) கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்கள்

ஆ) பிளேபியன்கள் மற்றும் பெட்ரீசியன்கள்

இ ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்

ஈ) கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள்

Answer:

இ) ஸ்பார்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1.கிரேக்கர்கள் _____ என்ற இடத்தில் பாரசீகர்களைத் தோற்கடித்தனர்.

Answer:

மராத்தான்

2.ரோமானியக் குடியரசில் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தவர் ______

Answer:

கிராக்கஸ் சகோதரர்கள் (டைபிரியஸ் கிராக்கஸ், காரியஸ் டோ கிராக்கஸ்)

3.______ வம்சத்தினரின் ஆட்சியின் போது தான் பௌத்தம் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வருகை தந்தது.

Answer:

ஹான்

4._______ ஐரோப்பியாவின் மிக நேர்த்தியான கட்டடம்.

Answer:

புனித சோபியா ஆலயம்

5._____ மற்றும் _____ ரோம நீதிபதிகள் ஆவார்கள்.

Answer:

மாரியஸ், சுல்லா

III. சரியான கூற்றினை தேர்வு செய்க.

1.i) கிரீஸின் மீதான முதல் பாரசீகத் தாக்குதல் தோல்வியடைந்தது.

ii) ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஜூலியஸ் சீஸர் ஒரு காரணமாயிருந்தார்.

iii) ரோமின் மீது படையெடுத்த கூட்டத்தினர் பண்பாட்டில் மேம்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர்.

iv) பௌத்தமதம் ரோமப் பேரரசை வலுவிழக்கச் செய்தது.

அ) (i) சரி

ஆ) (ii) சரி

இ (ii) மற்றும் (iii) சரி 

ஈ)(iv) சரி

Answer:

ஈ) (iv) சரி

2.i) யூகிளிட் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்து ஒரு மாதிரியை உருவாக்கினார்.

ii) எட்ரூஸ்கர்களை முறியடித்து, ரோமானியர்கள் ஒரு குடியரசை நிறுவினர்.

iii) அக்ரோபொலிஸ் புகழ்பெற்ற அடிமைச் சந்தை ஆனது.

iv) ரோமும் கார்த்தேஜும் கிரேக்கர்களைத் துரத்துவதற்கு ஒன்றிணைந்தன.

அ) (i) சரி

ஆ) (ii) சரி

இ (ii) மற்றும்(iv) சரி

ஈ) (iv) சரி

Answer:

ஆ) (ii) சரி

3.i) பட்டு வழித்தடம் ஹன் வம்ச ஆட்சியின்போது மூடப்பட்டது.

ii) வேளாண் குடிமக்களின் எழுச்சி, ஏதேனிய குடியரசுக்கு அச்சத்தைக் கொடுத்தது.

iii) விர்ஜில் எழுதிய ‘ஆனெய்ட்’ ரோம ஏகாதிபத்தியத்தைப் புகழ்வதாய் அமைந்தது.

iv) ஸ்பார்ட்டகஸ், ஜுலியஸ் சீஸரைக் கொன்றவர்

அ) (i) சரி

ஆ) (ii) சரி

இ (ii) மற்றும்(iv) சரி

ஈ) (iii) சரி

Answer:

ஈ) (iii) சரி

4.i) ரோமப் பேரரசர் மார்க்கஸ் அரிலியஸ் ஒரு கொடுங்கோலன்.

ii) ரோமுலஸ் அரிலிஸ், ரோமானிய வரலாற்றில் மிகவும் மெச்சத்தக்க அரசர்.

iii) பேபியஸ் ஒரு புழ்பெற்ற ஒரு கார்த்தேஜியப் படைத்தலைவர் ஆவார்.

iv) வரலாற்றாளராக, லிவியை விட, டாசிடஸ் மதிக்கத்தக்கவர்.

அ) (i) சரி

ஆ) (i) சரி

இ (ii) மற்றும்(iii) சரி

 ஈ)(iv) சரி

Answer:

ஈ) (iv) சரி

5.i) பௌத்தமதம் ஜப்பானில் இருந்து சீனாவிற்கு பரவியது.

ii) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர், புனித தோமையர் கிறிஸ்தவக் கொள்கைகளைப் பரப்பினார்.

iii) ஐரோப்பாவில் புனித சோபியா ஆலயம் மிக நேர்த்தியான கட்டடம் ஆகும்.

iv) டிராஜன், ரோமனின் மோசமான சர்வாதிகாரிகளில் ஒருவராவார்.

அ) (i) சரி

ஆ) (i) சரி

இ (iii) சரி

ஈ) (iv) சரி

Answer:

இ) (iii) சரி

V. சுருக்கமான Answerயளி

1.ரோமானிய அடிமை முறையைப் பற்றி எழுதுக.

Answer:

  • ரோம் போர்க்கைதிகளை அடிமைகளாக ஆக்கியதன் மூலம் பணம் படைத்தோர் சுரண்டுவதற்கு ஏதுவாகப் பெரும் உழைப்பாளர் கூட்டத்தை உருவாக்கியது. பெரும் நிலப்பிரபுக்கள் அடிமைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி வேளாண் பணிகளில் ஈடுபடுத்தினர்.
  • கி.மு. முதலாம் நூற்றாண்டில் சுதந்திர மக்களின் எண்ணிக்கை 3.25 மில்லியன், அடிமைகளின் எண்ணிக்கை 2 மில்லியன் அடிமைகளால் சுதந்திர மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வறியவரானார்கள். வறியவர்களின் குழந்தைகள் இறுதியில் அடிமைச்சந்தையை வந்தடைந்தனர்.

2.கான்ஸ்டன்டைனின் முக்கிய பங்களிப்பை சுட்டிக் காட்டுக.

Answer:

  • ரோமில் பேரரசருடைய உருவச்சிலைக்கு கிறிஸ்தவர்கள் மரியாதை செய்ய மறுத்தது, அரச துரோகமாகக் கருதப்பட்டது. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். சிங்கங்களின் முன் வீசப்பட்டனர். ஆனாலும் ரோமப் பேரரசு கிறிஸ்தவர்களை ஒடுக்குவதில் வெற்றிபெறவில்லை.
  • ரோமானியப் பேரரசரான கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவராக மதம் மாறியதால் கிறிஸ்தவம் ரோமப் – பேரரசின் அரச மதம் ஆயிற்று.

3.கார்த்தேஜ் ஹன்னிபால் குறித்து நீ அறிவது என்ன?

Answer:

கார்த்தேஜ் ஹன்னிபால் :

  • இத்தாலியில் ரோம், வட ஆப்பிரிக்காவில் கார்த்தேஜ் ஆகிய இரு சக்திகளிடையே நடைபெற்ற மூன்று போர்களே ‘பியூனிக் போர்கள்’ ஆகும். கார்த்தேஜ் தளபதி ஹன்னிபால் ரோமின் படையைத் தோற்கடித்தது. இத்தாலியின் பெரும்பகுதியை பாலைவனமாக்கினார்
  • இரண்டாம் பியூனிக் போரில் ஹன்னிபாலை எதிர்கொண்ட ரோமானிய படைத்தளபதி பாபியஸ், ஜாமா போர்க்களத்தில் ஹன்னிபாலை தோற்கடித்தார். ரோமானியர்களால் பின் தொடரப்பட்ட ஹன்னிபால் விஷமருந்தி மாண்டார். மூன்றாவது போரில் கார்த்தேஜ் அழிக்கப்பட்டது.

4.ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?

Answer:

  • பட்டு வணிக வழித்தடத்தை ஹன் பேரரசு திறந்துவிட்டதால் ஏற்றுமதிப்பண்டங்கள் குறிப்பாக பட்டு ரோமப் பேரரசைச் சென்றடைந்தது.
  • பண்பாட்டில் பின்தங்கிய வடபகுதி ஆட்சியாளர்களின் கைவினைஞர்கள், கால்நடை மேய்ப்பர்கள், குதிரைகளுக்கான காப்புக்கவசம், சேணம், அங்கவாடி போன்ற புதிய நுட்பங்களையும், பாலங்கள் கட்டுதல், மலைப்பகுதிகளில் சாலைகள் அமைத்தல், கடற்பயணம் செய்தல் ஆகியவற்றுக்கான தொழில் நுட்பங்களைக் கொண்டுவந்தனர். இப்புதிய தொழில்நுட்பங்களால் ஹன் பேரரசு பரப்பளவிலும், செல்வச் செழிப்பிலும் ரோமுக்கு நிகராக நின்றது.

5.புனித சோபியா ஆலயம் பற்றி எழுதுக.

Answer:

புனித சோபியா ஆலயம் :

  • ஐரோப்பாவின் மிக நேர்த்தியான கட்டடமான புனித சோபியா ஆலயம் கி.பி. 6-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டது. இது அதன் புதுமையான கட்டடக்கலை நுணுக்கங்களுக்கு பெயர்பெற்றது.
  • உதுமானிய துருக்கியர் கான்ஸ்டாண்டிநோபிளை கைப்பற்றியபோது ஆலயம் மசூதியாக மாற்றப்பட்டது.

VI. விரிவான Answerயளி

1.ஏதென்ஸின் எழுச்சி, வளர்ச்சி ஆகியவற்றையும் அதன் சிறப்புமிக்க கொடைகளையும் சுட்டிக் காட்டுக.

Answer:

ஏதென்ஸ் எழுச்சி:

  • ஏதென்சில் அடித்தள மக்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக மக்களாட்சி முறை நிறுவப்பட்டது. சட்டம் இயற்றும் அதிகாரம் அனைத்தும், மக்கள் மன்றத்தின் வசம் வழங்கப்பட்டிருந்தது.
  • நீதிபதிகளும் கீழ்நிலை அதிகாரிகளும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேல்தட்டு மக்கள் மக்களாட்சியை ‘கும்பலின் ஆட்சி’ எனக கருதினர்.

வளர்ச்சி:

  • பாரசீகப் படையெடுப்பின் அபாயன் கிரேக்கர்களை ஒற்றுமையுடன் இருக்கச் செய்தது. ஆபத்து நீங்கியவுடன் அவர்கள் மீண்டும் சண்டையினைத் தொடங்கினர். விதிவிலக்காக இருந்து ஏதென்ஸ் மட்டுமே அங்கு மக்களாட்சி முறை 200 ஆண்டுகள் நீடித்தது
  • 30 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த பெரிகிளிஸ் என்றும் மாபெரும் தலைவரை ஏதென்ஸ் பெற்றிருந்தது, ஸ்பார்ட்டாவோடு பகைமை, இடையூறுகள் ஆகியவற்றையும் மீறி ஏதென்ஸ், பிரமிக்கச் செய்யும் கட்டடங்களை கொண்ட உன்னத நகராக மாறியது. மாபெரும் கலைஞர்களும். சிந்தனையாளர்களும் இருந்த இக்குறிப்பிட்ட காலட் ‘பெரிகிளிசின் காலம்’ எனப்படுகிறது.

கொடைகள்:

  • சாக்ரடீஸ், பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் போன்ற சிந்தனையாளர்கள் உண்மையைக் கண்டடைவதற்கான புதிய பாரபட்சமற்ற அடிப்படை ஒன்றைக் கண்டறியும் முயற்சி மேற்கொண்டிருந்தனர்,
  • டெமோகிரைடஸ், எபிகியூரஸ் ஆகிய இரவரும் உலகம் பற்றிய பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தை வளர்த்தனர். புகழ் பெற்ற வரலாற்று அறிஞர்களான ஹெரோடோட்சும், தூசிடைபிதம் இக்காலத்தவர்கள்.


2.செவ்வியல் காலத்தில் இந்தியாவின் நிலை குறித்து எழுதுக.

Answer:

செவ்வியல் காலத்தில் இந்தியா:

  • குஷாணர்கள் காலம் ரோமானியப் பேரரசின் இறுதி காலகட்டமான ஜுலியஸ் சீசரின் ஆட்சி காலத்தின் சமகாலமாகும்.
  • ஜுலியஸ் சீசரின் காலத்துக்குப் பின் ஆட்சிக்கு வந்த அகஸ்டஸ் சீசர் அவைக்கு குஷாணர்கள் ஒரு தூதுக் குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
  • தென்னிந்தியாவில் களப்பிரர் காலம் செவ்வியல் காலத்தின் இறதிக்காலமாகும் (4 மற்றும் 5ஆம் நூற்றாண்டுகள்)
  • தேக்கு, மிளகு, மணிகள், தந்தம் போன்றவை மலபார் கடற்கரை வழியாக பாபிலோனியா, எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின.
  • பதினெண்மேல்கணக்கு என்றழைக்கப்படும் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் தொகுக்கப்பட்டன. சங்ககாலம் செவ்வியல் காலத்தின் சமகாலமாகும் (கி.மி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை).

VII. மாணவர்களுக்கான செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. ஐரோப்பிய வரைபடத்தில் மேலை மற்றும் கீழை ரோமானிய பேரரசுகளின் எல்லைகளைக் குறிக்கவும்.

2. ஆசிரியரின் உதவியோடு மாணவர்கள் கூகுள் இணையத்தில் கிரேக்கம், ரோம் மற்றும் சீனாவின் சிறப்புமிக்க அழகினைப் பார்க்கவும்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post