தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – திருப்புதல் தேர்வு கால அட்டவணை வெளியீடு..

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – திருப்புதல் தேர்வு கால அட்டவணை வெளியீடு..

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வானது திருப்புதல் தேர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

திருப்புதல் தேர்வு ( TN Revision Exam 2021-22)

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொற்று தொடர்ந்து அதிகரித்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை நீடிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் 1ம் தேதி முதல் 1- 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

Reduced Syllabus 2021-2022

கடந்த கல்வியாண்டில் கொரோனா அச்சம் காரணமாக 10,11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 2021 – 2022 ம் கல்வியாண்டில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சுமையை குறைக்க பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் காலாண்டு தேர்வுக்கு பதில் முதல் திருப்புதல் நடத்தப்பட்டு மாணவர்களின் கல்வி நிலை ஆய்வு செய்யப்பட்டது. இந்த மாதம் அரையாண்டு தேர்வு நடத்த வேண்டிய நிலையில், அந்த தேர்வானது திருப்புதல் தேர்வாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு திருப்புதல் தேர்வு கால அட்டவணை ( 10th Revision Exam time table 2021 December)

 • 17.12.2021 – தமிழ்
 • 18.12.2021 – ஆங்கிலம்
 • 20.12.2021 – கணிதம்
 • 23.12.2021 தொழிற்கல்வி பாடம்
 • 24.12.2021 – சமூக அறிவியல்

12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு கால அட்டவணை ( 12th Revision Exam time table 2021 December)

 • 17.12.2021 – தமிழ்
 • 18.12.2021 – ஆங்கிலம்
 • 20.12.2021 – இயற்பியல், பொருளியல், கணினி, தொழில்நுட்பம்
 • 21.12.2021 – கணக்குப்பதிவியல் , வேதியியல், புவியியல்
 • 22.12.2021 – கணிதம், விலங்கியல், வணிகவியல், வேளாண்மை
 • 23.12.2021 – உயிரியல், தாவரவியல், வரலாறு
 • 24.12.2021 – கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், அரசியல் அறிவியல்

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post