12th Tamil Unit Test Question With Answer 2021-2022

12th Tamil Unit Test Question With Answer 2021-2022

பள்ளிக் கல்வித்துறை- விழுப்புரம் மாவட்டம் அலகுத் தேர்வு 1 - நவம்பர் 2021

பாடம் : தமிழ் வகுப்பு: Xll

மதிப்பெண்:5(),

T)அனைத்துவினாக்களுக்கும் விடை தருக.

I) பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்க.

அ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. 

ஆ வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது

 இ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்

ஈ) மயில்கள் விறலியரைப்போல் ஆடுகின்றன 

2) பொருத்துக

அ) ஒரு கிராமத்து நதி - 1) அய்யப்ப மாதவன்

ஆ) திறனாய்வுக்கலை - 2) பாலசுப்பிரமணியம் 

இ) உய்யும் வழி -3) தி.சு. நடராஜன்

ஈ நீர்வெளி - 4) பரலி.சு. நெல்லையப்பர்

அ) 4321 

இ)24 13 

ஈ )2 ,3,4, 1

 3) நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்பமாதவன் குறிப்பிடுவது.

அ)மழைமேகங்கள் 

ஆ)மழைத்துளிகள் 

இநீர்நிலைகள் 

ஈ)சூரிய ஒளிக்கதிர்

4) பொருந்தாத இணையைத் தேர்க.

 அ) ஒவ்வொரு-ஒருமை

ஆ சொல்+துணை- சொற்றுணை

இ) வியர்வைவெள்ளம் - வினைத்தொகை

ஈ) செம்பரிதி - ஈறுபோதல்

5) 'வந்து' -சரியான உறுப்பிலக்கணம் பிரிப்பு முறை

அ) வா+த்(ந்)+த்+உ 

ஆவா+ந்+த்+உ 

இ)வ+ந்(த்)+த்+உ 

ஈ)வா(வ)+த்(ந்)+த்+உ 

6 ) கருத்து 1: இயல்பு வழக்கில் தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதேமரபு

கருத்து 2 தொடரமைப்பு. சங்கப்பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்துவருகிறது.

அ) இரண்டு கருத்தும் சரி 

இ) இரண்டு கருத்தும் தவறு 

ஈ) கருத்து / தவறு 2சரி.

ஆ) கருத்து 1 சரி 2 தவறு

7) யார்?' எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து உணர்த்தும் திணைகள்

அ) அஃறிணை, உயர்திணை 

ஆ) உயர்திணை, அஃறிணை

இ) விரவுத்திணை,அஃறிணை 

ஈ) விரவுத்திணை,உயர்திணை 

8) தண்டியலங்காரம் எந்த இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது.

அ) வீரசோழியம் 

ஆமுத்துவீரியம் 

இ)காவியதர்சம் 

ஈசூரியோதயம்

II.அ) எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

9) கவிஞர் சிற்பி எவற்றை வியந்துபாட தமிழின் துணை வேண்டுகிறார்? 

 • செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி

10) ஒலிப்பின்னல் என்றால் என்ன

 • தொன்மையான மொழிகள் யாவும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும்தான் தொடங்குகிறது. ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன. இதையே, அந்தப் பனுவலின் – பாடலின் ஒலிப்பின்னல் என்கிறோம்.

11)"நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரம் ஆகிறது" விளக்குக.

 • மழை மேகத்தால் நகரம் இருள் சூழ்ந்தது. பெய்யென மழை பெய்தது.
 • திடீரென சூரியன் தோன்ற மழைமேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கிறது.
 • சில மழைத்துளிகளின்மீது படுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கிறது.

12) அணி இலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?

 1. தண்டியலங்காரம், 
 2. மாறனலங்காரம், 
 3. குவலயானந்தம்.

ஆ)எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

(3) உளப்பாட்டுத் தன்மை பன்மை என்றால் என்ன?

உளப்பாட்டுத் தன்மைப் பன்மை

 • பேசுபவர் முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டுப் பேசுவது.

சான்று: நாம் முயற்சி செய்வோம்.

14) இரண்டனுக்குப் புணர்ச்சி விதி கூறுக

அ) சுவரெங்கும் ஆ) வெங்கதிர் இ) உன்னையல்லால்

அ) சுவரெங்கும் 

 • சுவர் + எங்கும் 
 • விதி : உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே 
 • சுவ(ர் + எ)ங்கும் = சுவறெங்கும் 
ஆ )வெங்கதிர் 

15) தாமரை இலை நீர்போல உவமைத்தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.

16) "விலை, விளை, விழை"- மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

III. அ)எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

17) செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப்பூக்காடாம்

வானமெல்லாம்"- தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

 • கதிரவன் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டு மேற்கு நோக்கி மறைவது இயற்கை.
 • ஆனால் கவிஞர் செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் தன் தலை சாய்க்கிறான் என்கிறார்.
 • கதிரவனின் கதிரொளி பட்டு வானமெனும் காடெல்லாம் பூக்காடாய் மாறின என்று சிற்பி நயம்பட விளக்குகிறார்.

I8) கவிதைத்தனம் அல்லது இலக்கியத்தனம் குறித்துத் தி.சு. நடராஜன் உரைக்கும் கருத்துகள் யாவை

 • மொழியின் தனிச்சிறப்பான கூறுகளும், அவற்றைக் கையாளுகின்ற வகைமைகளும் கவிதையின் உந்து சக்தியாக அமைகின்றன. மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது

19)"பிறகொருநாள் கோடை" கவிதை வழியாக அய்யப்ப மாதவன் கூறும் கருத்துகள் யாவை?

20)பொருள்வேற்றுமை அணியைச்சான்றுடன்விளக்குக

அணி இலக்கணம் :

செய்யுளில் கவிஞர் இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறியப்பின் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும். இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.

சான்று :

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது

தன்னேர் இலாத தமிழ்.

அணிப்பொருத்தம் :

கதிரவனும், தமிழ்மொழியும் மலையில் தோன்றுகின்றன என ஒப்புமையைக்கூறி, அவற்றுள் தமிழ்மொழிக்கு நிகராக வேறெந்த மொழியும் இவ்வுலகில் இல்லை என்று வேறுபடுத்திக் காட்டியதால் இப்பாடல் பொருள் வேற்றுமையணி ஆகும்

கதிரவன் புற இருளை அகற்றும்;

தமிழ்மொழி அக இருளை அகற்றும்.

விளக்கம் :

கதிரவன் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றும் : கதிரவன் உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றும்.

தமிழ்:

குளிர்ச்சிப் பொருந்திய பொதிய மலையில் தோன்றிய தமிழ்மொழி மக்களின் அறியாமை என்னும் அக இருளை அகற்றும் அத்தமிழ்மொழிக்கு நிகராக வேறெந்த மொழியும் இல்லை.

ஆ) எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.

21) தமிழாக்கம் தருக

1. Learning is a treasure that will follow its owner everywhere. (Chinese Proverb).

கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

2. A new language is a new life. (Persian Proverb).

புதிய மொழி புதிய வாழ்க்கை.

3. Knowledge of languages is the doorway to wisdom. (Roger Bacon).

மொழிகளின் அறிவு ஞானத்தின் வழித்தடம்.

4. The limits of my language are the limits of my world. (Willgenstin).

என் மொழியின் எல்லை என் உலகத்தின் எல்லை.

22) கீழ்வரும் பாடலைப் படித்துணர்ந்து மையக்கருத்தோடு .ஏற்புடைய நயங்கள் நான்கினை எழுதுக

வெட்டி யிடிக்குது மின்னல்-கடல் வீரத் 

திரைகொண்டு விண்ணை யிடிக்குது

கொட்டி யிடிக்குது மேகம்-கூ

கூவென்று விண்ணைக் குடையுது காற்று

சட்டச்சடசட்டச்சட டட்டா என்று

தாளங்கள் கொட்டி கனைக்குது வானம்

எட்டுத் திசையும் இடிய- மழை

எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!

பாரதியார்

23) "மழை" அல்லது "தமிழ்' என்னும் தலைப்பில் கவிதை எழுதுக.

மழை :

மரம் இலை துளிர் விட..

என் தேகம் முழுவதும் நனைத்திட..

வானின் கரு மேகங்களே

இடி மின்னலுடன் போர் புரிந்து

உங்கள் வியர்வை துளிகளை

சிந்துங்கள்

தமிழ் :

தன்னலமில்லா தமிழ் மொழியே

உன்னிலிருந்து பிறந்தது பல மொழியே

கடல் கொண்ட தாய் தமிழ் நிலமே உனக்கு

மடல் அனுப்புகிறேன் அனுதினமே

இப்பொழுது வாழும் இன் நிலமே

இனி எப்போதும் வேண்டும் இறைவா

பழகு தமிழ் தெறிந்தவனுக்கு

பாத்திரமாகிறாய்

அழகு தமிழ் அறியாதவற்கு

புது மொழியாகிறாய்

தமிழே உயிரே

உயிர்களின் முதல் மொழியே

உலகின் தலைமொழியே

உன்வழியே வாழ்க்கிறோம்

ழி வழியே 

IV) ஏதேனும் ஒன்றனுக்கு விடை தருக

24) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று மற்றும் சமூகப்பற்றினை விவரிக்க

மொழிப்பற்று :

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார். நெல்லையப்பரிடம் அவர் கூறும் போது, ‘நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும், தமிழை வளர்ப்பதை கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண் மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி பெற்று வளர வேண்டும். தாய்மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும். வடநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக்கொள்ள முயல வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண்டும் என்கிறார்.

சமூகப்பற்று :

சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும். ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும். அந்நிலை மாறவே ஆணும் : 9 பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள்; அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை என்கிறார். பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார். பெண்ணை வீட்டிற்குள் அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி, ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார்.

சமூகம் வளர்ச்சி அடைய தொழில் பெருகவேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும், தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார். சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பூமி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும். அதனைக் கற்று நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும். அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு. நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.

25) கவிதையைக்கட்டமைக்கும் நடையியல் கூறுகளைச்சான்றுடன் விளக்குக

கவிதையின் நடையைக் கட்டமைப்பன:

பாட்டு அல்லது நடை அழகியியல் கூறுகளில் ஒலிக்கோலங்களும் சொற்களின் புலமும் தொடரியல் போக்குகளும் முக்கியமானவை.

கவிதை – நடையியல்:

மொழியின் தனிச்சிறப்பான கூறுகளும், அவற்றைக் கையாளுகின்ற வகைமைகளும் கவிதையின் உந்து சக்தியாக அமைகின்றன. மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. கவிதையின் இயங்காற்றல்தான் நடை. நடைபெற்றியலும் (கிளவியாக்கம் – 26) என்று தொல்காப்பியம் கூறுகிறது.

ஒலிக்கோலங்கள்:

தொன்மையான மொழிகள் யாவும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும்தான் தொடங்குகிறது. ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன. இதையே, அந்தப் பனுவலின் – பாடலின் ஒலிப்பின்னல் என்கிறோம்.

சான்று: “கடந்தடு தானை மூவிருங்கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே”

இப்பாடலில் க, த, ட, ற முதலிய வல்லின மெய்கள் பிற மெல்லின் இடையின மெய்களைக் காட்டிலும் அதிகமாக வருகிறது. இதன் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்து ஒலிக்கோலத்தின் வலிமையை அறியலாம்.

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை

கடாஅ யானைக் கலிமான் பேக (புறம் – 145)

இதில் பல உயிர் ஒலிகள் வருகையும் திரும்பவரல் தன்மையும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் இங்கே கவனத்திற்குரியன. ஒலிக்கோலம் சங்கப்பாடல்களின் ஒரு முக்கியப்பண்பு.

சொற்புலம் :

சொல்வளம் என்பது ஒருபொருள் குறித்த பல சொல், பல பொருள் குறித்த ஒரு சொல், பலதுறை, பலசூழல், பல புனைவுகளுக்கும் உரியதாய் வருதலும், உணர்வும், தெளிவும் கொண்டதாய் : 2 வருதலும், எனப் பலவாறு செழிப்பான தளத்தில் சொற்கள் விளைச்சல் கண்டிருப்பதைக் குறிக்கும். சான்றாக, முல்லைக்கலியில் காளைகளில் பல இனங்களைக் காட்டுகின்ற சொற்கள் உள்ளன. சொல்வளம் ஒரு பண்பாட்டின் அடையாளம். சொல்வளம் என்பது தனிச்சொற்களாய் நிறைந்து அமைவதையும் குறிக்கும்.

தொகைநிலை :

சங்க இலக்கிய மொழியின் அடையாளமாக உள்ள ஒரு பண்பு இது. இதனைத் தொகைநிலை என்று தொல்காப்பிய எச்சவியல் பேசுகிறது. தொகைமொழி என்பது செறிவாக்கப்பட்ட ஒரு : வடிவமைப்பு.

அது வாக்கிய அமைப்பில் ஒரு சொல் போலவே நடைபெறும்.

சான்று: வைகுறுவிடியல், கவினுறு வனப்பு, தீநீர் என்பன.

தொடரியல் போக்குகள் :

ஒலிக்கோலமும், சொற்புலமும் சொற்றொடர் நிலையும் பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் போகின்றன என்றால், பாத்தி கட்டி வரப்புயர்த்தும் பணிகளைத் தொடரியல் வடிவம் செய்கின்றது. பரிமாறப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள் ஏறியும் இறங்கியும் திரும்பியும் சுழன்றும் இயங்குகின்றன.

கவிதை மறுதலைத்தொடர் :

தொடரமைப்பு என்பது எழுவாய் + செயப்படுபொருள், அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை என்று வருவது மரபு. இது சங்கப்பாடல்களில் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.

சான்று: பேரெயின் முறுவலாரின், நம்பி நெடுஞ்செழியனுடைய சாவுச்சடங்கு பாடல்

“இடுகவொன்றோ, சுடுகவொன்றோ

படவழிப்படுக இப்புகழ் வெய்யோன் தலையே” (புறம் – 239)

இதன் இறுதி அடி பிறழ்வோடு அமைந்துள்ளது. ஏனைய 20 அடிகளில் தொடர் வரிசையாகவும் நேர்படவும் செல்கின்றன. ஒவ்வோர் அடியும் வினைமுற்றுகளோடும், தன்னிறைவோடும் முடிகின்றன. இப்படி 18 பண்புகளை வரிசைப்படுத்திய பிறகு, தொகுத்துச் சொல்வதுபோல, : – (ஆங்குச் செய்பவையெல்லாம் செய்தனன் ஆதலின்) கூறிவிட்டுப் போடா போ – புதைத்தால் புதை; சுட்டால் சுடு என்று அலுத்துக் கொள்கிறது.

நிரைவுரை :

நடையியல் என்பது வடிவமைப்பின் பகுதிகளையும் முழுமையினையும் சார்ந்தே இருக்கிறது. அத்தகைய நடை அழகியலைக் கட்டமைப்பதற்குச் சங்க இலக்கியமே முதன்மை ஆதாரம். மேலும் : வ சங்க இலக்கியம் அதனுடைய தனித்துவ மிக்க சமூக – பண்பாட்டுத்தளத்தில் குறிப்பிட்ட சில பண்புகளையும் போக்குகளையும் சொந்த மரபுகளாகக் கொண்டுவிட்டது. எனவே, கவிதையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் சங்க இலக்கியங்களில் பரவிக் காணப்படுகின்றன.

V) அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக 

26,"ஓங்கலிடை வந்து"- என்னும் தண்டியலங்கார மேற்கோள் பாடல்.

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது

தன்னேர் இலாத தமிழ்.

Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post