தமிழகத்தில் 1-8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பில் முக்கிய திருப்பம் – அக்.21 இல் கருத்துகேட்பு!

தமிழகத்தில் 1-8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பில் முக்கிய திருப்பம் – அக்.21 இல் கருத்துகேட்பு!

1-8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது தமிழக அரசு ஆசிரியர் சங்கங்களின் கருத்தை கேட்டறியவுள்ளது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

பள்ளிகள் திறப்பு :

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு வருடங்களுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் அரசு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு தொற்றை கட்டுப்படுத்தி உள்ளதால் நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் கட்டமாக 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறை களுடன் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக 1 – 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கள் பெறப்பட்டு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக அரசு ஆசிரியர் சங்கங்களின் கருத்துகளை கேட்டறியவுள்ளது. அதனால் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அக்டோபர் 21 ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார் . இக்கூட்டமானது சென்னை டிஜிபி வளாகத்தில் நடைபெறும் இதில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post