12th Tamil Refresher Course Online Test 1

 12th Tamil Refresher Course Online Test 1

  • பொதுத்தமிழ்
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
  • இயங்கலைத்தேர்வு - 1 ( ஒரு மதிப்பெண் )
  • ( பகுபத உறுப்புகள் , இலக்கணக்குறிப்பு , புணர்ச்சி விதிகள் , திணை , துறை ) 

12th Tamil Basic Quiz online test 1

Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

1) விகுதி பெறாத கட்டளை அல்லது ஏவல் வினையே ------

அ) இடைநிலை

ஆ) பகுதி

இ) சந்தி

ஈ) சாரியை

விடை : ஆ ) பகுதி 

2) திணை , பால் , எண் , இடம் ஆகியனவற்றைக் காட்டுவது -----


அ) பகுதி

ஆ) இடைநிலை

இ) விகுதி

ஈ) விகாரம்

விடை : இ ) விகுதி

3) வேர்ச்சொல் , முதனிலை என அழைக்கப்பெறுவது ------

அ ) விகுதி

ஆ) பகுதி

இ ) சாரியை

ஈ) இடைநிலை

விடை : ஆ ) பகுதி

4) இடைநிலை -------வகைப்படும்.

அ) 6

ஆ) 3

இ) 4

ஈ) 5

விடை : இ ) 4

5) வருவான் என்பதில் 'வ்' என்பது ------

இடைநிலை

அ) இறந்தகால

ஆ) நிகழ்கால

இ) எதிர்கால

ஈ ) எதிர்மறை

விடை : இ ) எதிர்கால


6) எழுத்து தனித்தும் , தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம். அது பகுபதம், பகாப்பதம் என இருபாலாகி இயலும் எனக் குறிப்பிடுவது -----


அ) நன்னூல்

ஆ) தொல்காப்பியம்

இ ) தொன்னூல் விளக்கம்

ஈ) இலக்கண விளக்கம்

விடை : அ ) நன்னூல்

7) கீழ்க்காண்பனவற்றுள் உடம்படு மெய்களாவன ------

அ) க்,ச்

ஆ)த் .ப்

இ) ய், வ்

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : இ ) ய் , வ்


8) பொருள் அற்றது -------


அ) பகுதி

ஆ) விகுதி

இ) சாரியை

ஈ) விகாரம்

விடை : இ ) சாரியை 

9) ' நின்றான் ' என்பதில் ' நில்' என்பது -------விகாரம்.

அ) திரிதல்

ஆ) கெடுதல்

இ) குறில் நெடிலாக மாறிய

ஈ) நெடில் குறிலாக மாறிய

விடை : அ ) திரிதல்

10 ) எழுத்துப்பேறாக வரும் எழுத்து ------

அ) ப்

ஆ) ம்

இ) ய்

ஈ )த்

விடை : ஈ ) த் 

11 ) இரண்டு ----- சொற்கள் ஒட்டி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை

அ) வினை

ஆ) பெயர்

இ) இடை

ஈ) உரி

விடை : ஆ ) பெயர்

12 ) காலம் கரந்த பெயரெச்சம் ------

அ) பண்புத்தொகை

ஆ) வினைத்தொகை

இ) உவமைத்தொகை

ஈ) உம்மைத்தொகை

விடை : ஆ ) வினைத்தொகை

13) போல , போன்ற என்னும் உவம உருபு மறைந்து வருவது ------

அ) உவமைத்தொகை

ஆ) பண்புத்தொகை

இ) வினைத்தொகை

ஈ) வினையாலனையும் பெயர்


விடை : அ ) உவமைத்தொகை


14) சேரனும் சோழனும் - என்பதன் இலக்கணக்குறிப்பு -----


அ) உவமைத்தொகை

ஆ) பண்புத்தொகை

இ) உம்மைத்தொகை

ஈ) எண்ணும்மை


விடை : ஈ ) எண்ணும்மை


15 ) ' உயிர்முதல் ' என்பதன் சான்று -----


அ) மணிமாலை

ஆ) வாழை இலை

இ) தமிழ் நிலம்

ஈ) பொன்வண்டு


விடை : ஆ ) வாழை இலை


16 ) ' வாயொலி' - எவ்வகைப் புணர்ச்சி விதி என்பதைச் சுட்டுக.

அ) ஈறுபோதல்

ஆ) இனமிகல்

இ) ஆதிநீடல்

ஈ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

விடை : ஈ ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

17) பொருள் பாகுபாட்டின் அடிப்படையில் திணை - வகைப்படும்.

அ) 2

ஆ)6

இ ) 4

ஈ) 3

விடை : அ ) 2

18)' தொல்காப்பியம்' குறிப்பிடும் திணைகள் ( புறம்சார்ந்தவை) -----

அ) 11

ஆ) 5

இ) 7

ஈ ) 12

விடை : இ ) 7

19) புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர்; அயர்விலர் - எனும் புறப்பாட்டு சுட்டும் திணை --

அ) வெட்சித்திணை

ஆ) கைக்கிளை

இ) பொதுவியல்

ஈ) பாடாண்திணை

விடை : இ ) பொதுவியல் திணை


20 ) அரசன் செய்யவேண்டியகடமைகளை முறை தவறாமல்செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்துதல் துறை -----

அ) செவியறிவுறூஉத்துறை

ஆ)பொருண்மொழிக்காஞ்சி

இ) பரிசல்துறை

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : அ ) செவியறிவுறூஉத்துறை

12th std Tamil Refresher Course based Tamil online Preparation test . You Can study and Write these 12th Tamil refresher online Exam.

1 Comments

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post