12th Tamil Refresher Course Answer key - Topic 1-2

12th Tamil Refresher Course Answer key - Topic 1-2

Class: 12

Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022

கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 

மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.

தலைப்பு  : 1  அ. பகுபத உறுப்புகள்

பதம் என்பதன் வரையறை:

ஓர் எழுத்துத் தனித்தோ (அ) ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தோ பொருளைத் தந்தால் அது பதம் எனப்படும். பதம் - பகுபதம், பகாபதம் என இரண்டு வகைப்படும்.

“எழுத்து தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம்

அது பகாப்பதம், பகுபதம் என இருபாலாகி இயலும் ”

என்ப.(நன்னூல் –128)

பதம் = சொல், கிளவி, மொழி என்பர்

பகுத்தல் = பங்கிடுதல், கூறிடுதல், பிரித்தல் என பொருள் கூறலாம.

1. பகுதி: (முதனிலை)

  • " ஒரு சொல்லின் முதலில் வரும் அடிச்சொல்லே பகுதி ஆகும். இதனை வேர்ச்சொல் என்றும் அழைப்பர்.
  • " விகுதி பெறாத கட்டளை (அ) ஏவல் வினையே பகுதி.

சான்று :

  • " நடந்தான் = நட, ஓடினான் = ஓடு, படித்தான் = படி. 
இதில் நட, ஓடு,படி என்பன பகுதி.
  • " பெற்றேன் = பெறு (பெற்று இறந்த காலம் காட்டியது.) + ஏன்
பகுதி ஒற்று இரட்டித்துக் காலம் காட்டும்.

2. விகுதி: (கடைநிலை)

  • " சொல்லின் இறுதியில் வரும்.
  • " திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டும்.

சான்று :

  • படித்தான் = படி + த் + த் + ஆன் ( ஆன் - உயர்திணை, ஆண்பால், ஒருமை, படர்க்கை ஆகியவற்றைக் காட்டி நிற்கிறது)
  • வியங்கோள் வினைமுற்று விகுதி = க, இய, இயர் (எழுதுக = எழுது + க)
  • தொழிற்பெயர் விகுதி = தல் ( செய்தல் = செய் + தல் )
  • பெயரெச்ச விகுதி = அ, உம் ( உரைத்த = உரை + த் + த் + அ)
  • வினையெச்ச விகுதி = இ, உ ( படித்து = படி + த் + த் + உ )

(இதேபோல் தன்மை, முன்னிலை, படர்க்கை - ஒருமை, பன்மை வினைமுற்று விகுதிகளும் வரும்.

செயல்பாடு: 3

3. இடைநிலை:

" பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.

" காலத்தைக் காட்டும்.

" வினைச் சொற்களில் பெரும்பாலும் இடைநிலை வரும்.

  • 1. நிகழ்கால இடைநிலை - கிறு, கின்று, ஆநின்று
  • 2. எதிர்கால இடைநிலை - ப், வ்
  • 3. இறந்த கால இடைநிலை - த், ட், ற், இன்
  • 4. எதிர்மறை இடைநிலை - ஆ, அல், இல்

சான்று :

" நடந்தான் = நட+ த்(ந்)+த்+ஆன்

" பேசான் = பேசு + (ஆ) +ஆன்

 மதிப்பீடு 

1. பதம் என்பதன் வரையறை யாது?

  ஓர் எழுத்துத் தனித்தோ (அ) ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தோ பொருளைத் தந்தால் அது பதம் எனப்படும்.

சான்று :  மா 

                  மாமழை 

2. விகுதி என்றால் என்ன?

  • சொல்லின் இறுதியில் வரும்.
  • திணை , பால் , எண் , இடம் ஆகியவற்றைக் காட்டும்.

சான்று :

படித்தான் - படி + த் + த் + ஆன்

திணை : உயர்திணை

பால்       : ஆண்பால் 

எண்      : ஒருமை 

இடம்     : படர்க்கை

தலைப்பு  : 2   ஆ.  பகுபத உறுப்புகள்

செயல்பாடு: 1

4. சாரியை

" இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.

  • சான்று : பார்த்தனன் = பார் + த் + த் + அன் + அன்
  • " சந்தி வர வேண்டிய இடத்தில் உயிர்மெய் எழுத்து வந்தால் அதனை சாரியை என்று குறிப்பிடல் வேண்டும்.

சான்று :

  • " தருகுவென் = தா ( தரு) + கு + வ் + என்
  • " சாரியைக்குப் பொருள் இல்லை.

குறிப்பு :

  • " அன், அள், அர் விகுதிக்கு ’அன்’னே சாரியை.
  • " ஆன், ஆள், ஆர் விகுதிக்கு ’அன்’ சாரியை வராது.

செயல்பாடு : 2

5. சந்தி

  • " பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.
  • " சந்தி என்பதற்குப் புணர்ச்சி என்று பெயர்.
  • " சந்தியாக வரும் எழுத்துகள் - த், ப், க்
  • " உடம்படு மெய்களும் ( ய், வ் ) சந்தியாக வரும்.

சான்று :

  • " அசைத்தான் = அசை + த் + த் + ஆன்
  • " மயங்கிய = மயங்கு + இ (ன்) + ய் + அ

செயல்பாடு : 3

6. விகாரம்

  • பகுதி, விகுதி இடைநிலை ஆகியவை புணரும்போது அவற்றின் வடிவில் ஏற்படும் மாற்றம் விகாரம் ஆகும்.

சான்று

  • " நின்றான் = நில் (ன்) + ற் + ஆன் ( திரிதல் )
  • " வணங்கிய = வணங்கு + இ (ன்) + ய் + அ ( கெடுதல்)
  • " கண்டான் = காண் ( கண் ) + ட் + ஆன் ( நெடில் குறிலாகக் குறுகியது )

எழுத்துப்பேறு :

  • " பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் உறுப்பு
  • " காலம் காட்டாது
  • " எழுத்துப்பேறாக வரும் எழுத்து = த்

சான்று :

  • " பாடுதி = பாடு ( பகுதி ) + த் (எழுத்துப்பேறு) + இ (முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி)
  • " மொழியாதான் = மொழி+ய்+ஆ (எதிர்மறை இடைநிலை)+த் (எழுத்துப்பேறு) + ஆன்

                                                                மதிப்பீடு 

1. காண்பித்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

காண்பித்தான் - காண்பி + த் + த் + ஆன்

  • காண்பி - ( பிறவினைப் ) பகுதி 
  • த்  - இறந்த கால இடைநிலை 
  • த்  - சந்தி 
  • ஆன் - படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

2. எழுத்துப்பேறு வரையறு.

  • பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் உறுப்பு
  • காலம் காட்டாது
  • எழுத்துப்பேறாக வரும் எழுத்து = த்

சான்று :

  • பாடுதி = பாடு ( பகுதி ) + த் (எழுத்துப்பேறு) + இ (முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி)

3. பகுபத உறுப்புகள் எத்தனை ? அவை யாவை?

பகுபத உறுப்புகள் 6 : அவை

  • பகுதி 
  • விகுதி
  • இடைநிலை 
  • சாரியை 
  • சந்தி 
  • விகாரம்

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post