10th Tamil Refresher course module Answer key- Topic 2 வினாச் சொற்களை அறிந்து வினாக்களை உருவாக்குதல்

10th Tamil Refresher course module Answer key- Topic 2 

வினாச் சொற்களை அறிந்து வினாக்களை உருவாக்குதல் 

கற்றல் விளைவு :

தாம் பயன்படுத்தும் ம�ொழியின் நுட்பமான கூறுகளை அறிந்து பயன்படுத்துதல்.

கற்பித்தல் செயல்பாடு :

அறிமுகம்

 மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன?

கணிப்பொறி எவ்விதம் வேலை செய்கிறது?

- என்பவை வினாக்கள்.

  • இவ்வாறு ஒன்றைப்பற்றி அறிந்துகொள்ள ஒருவர், மற்றவரிடம் வினவுவது வினா எனப்படும்.
  •  சொற்களில்/தொடரில், வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர்.

விளக்கம் :

  • எ, யா, ஆ, ஓ, ஏ என்பவை வினா எழுத்துகள் என அறிவோம்.
  • பின்வரும் அட்டவணையைப் பாருங்கள். வினா எழுத்துகள் சொற்களின் எந்தெந்த இடங்களில் வந்து வினாப் பொருளைத் தருகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். 

எந்த, எது,

எப்படி, எங்கே,

எதனால்

எதற்காக

எதில்,

எப்போது 

 யா 

யார்,

யாவை,

யாது,

யாவர்,

யாரால்,

யாருடைய

ஆ 

அவனா,

அவளா,

அதுவா,

அதிலா,

அப்படியா

ஓ 

அவனோ,

அவளோ

அவரோ

அதுவோ

அவையோ 

ஏன், ஏது,

யானே,

அவனே,

அவரே 

  • இப்போது இவற்றைப் போன்ற வினாச்சொற்களை நாம் எங்கெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதையும் வினாக்கள் உருவாவதற்குரிய காரணங்களையும் பார்க்கலாம்.

 மாறன் தன்நண்பனிடம் "நாளை தேர்வு உண்டா?"என்று கேட்டான்.

இந்த வினாவுக்கான காரணம் என்ன தெரியுமா? நாளை தேர்வு உண்டு எனில்

இன்று பாடங்களைப் படிக்க வேண்டும், தேர்வுக்கு வேண்டிய பொருள்களை எடுத்து வைக்க வேண்டும்; இல்லையெனில் எதுவும் செய்யவேண்டாம் என்பன போன்றவையாக இருக்கலாம். அல்லது இன்று மழை பெய்வதால் நாளை தேர்வு உண்டா என்ற ஐயம் காரணமாகவும் வினா எழுப்பி இருக்கலாம். 

எந்தெந்தக் காரண காரியங்களுக்காக வினாக்கள் கேட்கப்படுகின்றன என்று பார்ப்போம்.

  •  கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்துக் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை ஆராயவும்.

சட்டமேதை அம்பேத்கர்

 அம்பேத்கர் லண்டனில் சட்டப்படிப்பை முடித்து இந்தியா திரும்பினார். இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்கப் போராடவேண்டும் என்றும் முடிவுசெய்தார். 1924ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ‘ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை' என்ற அமைப்பை நிறுவினார். இவ்வமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காகப் போராடினார். 1930ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படும்முன் "என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டும, அதற்காகப் போராடுவேன்; அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனத்துடன் ஆதரிப்பேன்" என்று கூறினார்.

வினாக்கள்:

1. அம்பேத்கர் எங்குப் படிப்பை முடித்து இந்தியா திரும்பினார்? (எங்கு)

2. அம்பேத்கர் இந்தியா திரும்பியபோது இந்தியாவில் யாருடைய ஆட்சி நடைபெற்றது?

(யாருடைய)

3. அம்பேத்கர் யாருக்கு எதிரான போராட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்?

(யாருக்கு)

4. அம்பேத்கர் எதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்? (எதில்)

5. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்ன கிடைக்கப் போராட வேண்டும் என்று முடிவு செய்தார்? (என்ன)

6. எந்த ஆண்டு ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவை நிறுவப்பட்டது? (எந்த)

7. எப்போது ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை நிறுவப்பட்டது? (எப்போது)

8. ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவையை நிறுவியவர் யார்? (யார்)

9. அம்பேத்கர் எதற்காகப் போராட வேண்டும் என்று முடிவு செய்தார்? (எதற்காக?)

10. அம்பேத்கர் எந்த அமைப்பின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காகப் போராடினார்? (எந்த)

1. மரக்கிளை எதனால் முறிந்தது? (முறிந்த காரணத்தை அறிய)

2. மரத்தை வளர்த்தது யார்? (செயல் செய்தவரை அறிய)

3. மரத்தில் உள்ளது குயிலா? காகமா? (ஐயத்தைத் தெளிவுபடுத்த)

4. மரத்தடியில் நிற்பவர் வேந்தனா? செழியனா? (ஐயம்)

5. நீ ஏன்மரத்தில் ஒளிந்தாய்? (காரணத்தை அறிய)

  • போன்ற வினாக்கள் எதன் பொருட்டுக் கேட்கப்பட்டிருக்கும் என்பதை அறியலாம்.

மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

1. கொடுக்கப்பட்ட விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.

(எ.கா.) ஆய்வு என்பது அறிவின்வெளிப்பாடு.

வினா: அறிவின்வெளிப்பாடு எது?

1. அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன.

வினா:எந்த  அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன?

2. உழைத்துச் சேர்த்த பணத்தைப் பெட்டியில் பூட்டி வைக்கும் பழக்கம் இன்று

இல்லை.

வினா:உழைத்துச் சேர்த்த எதைப்  பெட்டியில் பூட்டி வைக்கும் பழக்கம் இன்று இல்லை?

3. தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் திறன் அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன.

வினா: தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் எவ்வாறு  மாற்றப்பட்டுள்ளன?

4. உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று நன்னூலார் கூறுகிறார்.

வினா:உரிச்சொற்கள் எதற்க்கு  உரியன என்று நன்னூலார் கூறுகிறார்?

2. பத்தியைப் படித்துக் காரண காரிய அடிப்படையில் வினாக்கள் உருவாக்குக.

 பெரியாரின் சிந்தனைகள் தொலைநோக்கு உடையவை; அறிவியல் அடிப்படையில் அமைந்தவை; மனித நேயம் வளர்க்கப் பிறந்தவை. நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகளை அவர் எப்பொழுதும் கூறியதில்லை. மேலும், தமது சீர்திருத்தக் கருத்துகளுக்கேற்ப வாழ்ந்து காட்டினார்; தம் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்புரை செய்தார்; சமுதாயத்தை மூடப்பழக்கங்களிருந்து மீண்டெழ அரும்பாடுபட்டார்; அதற்காகப் பலமுறை சிறை சென்றார்; பலரின் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். இறுதி மூச்சுவரை சமூகச் சீர்திருத்தப் போராளியாகவே வாழ்ந்து மறைந்தார்.

வினாக்கள்

1.யாருடைய  சிந்தனைகள் தொலைநோக்கு உடையவை ?

2. பெரியாரின் சிந்தனைகள் எதன் அடிப்படையில் அமைந்தவை ?

3.பெரியாரின் சிந்தனைகள் எதனை வளர்க்கப் பிறந்தவை  ?

4. பெரியார் சமுதாயம்  எதிலிருந்து மீண்டெழ அரும்பாடுபட்டார்?

5. பெரியார் இறுதி மூச்சுவரை எப்படி  வாழ்ந்து மறைந்தார்?

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post