10th Science Refresher Course 4 Answer key - Tamil Medium

10TH SCIENCE - REFRESHER COURSE MODULE - 4 , QUESTION & ANSWER key

பத்தாம் வகுப்பு - அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - பாடம் 4 , காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்

  •  பத்தாம் வகுப்பு - அறிவியல் 
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 
  • செயல்பாடு : 4 
  • காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்

மதிப்பீடு: 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.

1. பின்வருவனவற்றுள் காந்தத்தால் கவரப்படும் பொருள் --------

அ) மரப்பொருள்கள்

ஆ) ஏதேனும் ஓர் உலோகம்

இ) தாமிரம்

ஈ) இரும்பு மற்றும் எஃகு

விடை : ஈ ) இரும்பு மற்றும் எஃகு 

2. கீழ்க்காணும் ஒன்று நிலைத்த காந்தத்திற்கு எடுத்துக் காட்டாகும்.

அ)மின்காந்தம்

ஆ) துப்பாக்கி உலோகம்

இ) தேனிரும்பு

ஈ) நியோடிமியம்

விடை : ஈ ) நியோடிமியம்

3. ஒரு சட்டக் காந்தத்தின் தென்முனையும், U வடிவ காந்தத்தின் வடமுனையும் --------

அ) ஒன்றையொன்று கவரும்

ஆ) ஒன்றையொன்று விலக்கும்

இ) ஒன்றையொன்று கவரவோ, விலக்கவோ செய்யாது

ஈ)மேற்சொன்னவற்றுள் எதுவுமில்லை

விடை :  அ ) ஒன்றையொன்று கவரும்

4. கற்பனையான புவிக் காந்தப்புலம் எந்த வடிவத்தினைப் போன்றது?

அ) வடிவகாந்தம்

ஆ)மின்னோட்டத்தைத் தாங்கும் நேர்க்கடத்தி

இ) வரிசுருள்

ஈ)சட்டக் காந்தம்

விடை : ஈ ) சட்டக்காந்தம் 

5. MRI என்பதன் விரிவாக்கம் ---------

அ ) Magnetic Resonance Imaging

ஆ) Magnetic Running Image

இ ) Magnetic Radio Imaging

ஈ) Magnetic Radar Imaging

விடை : அ ) Magnetic Resonance Imaging

6. காந்த ஊசி ---------  பயன்படுகிறது.

அ) காந்தவிசைக் கோடுகளை வரைய

ஆ) காந்தப்புலத்தின் திசையை அறிய

இ) கடல் பயணத்திற்கு

ஈ) மேற்காண் அனைத்தும்

விடை : ஈ ) மேற்காண் அனைத்தும்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. காந்தத்தின் வலிமை அதன் முனைகளில் ---------

விடை :  பெருமம்

2. ஒரு காந்தம் -------  முனைகளைக் கொண்டது.

விடை :  இரு 

3. மின்சார உற்பத்திக்குப் பயன்படும் காந்தங்கள் --------

விடை : டைனமோக்கள்

4. கனமான இரும்புப் பொருள்களை உயர்த்தப் பயன்படுவது ---------

விடை :  மின்காந்தம் 

5. தடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதும்  --------  முனைகளை நோக்கி இருக்கும்.

விடை : புவியின் வடதென்

6. காந்தத்தின் ஓரின முனைகள் ஒன்றையொன்று விலக்கும். வேறின முனைகள் -------

விடை : ஒன்றையொன்று ஈர்க்கும்

7. காந்தத்தின் முனைப் பகுதிகள் --------- பண்பினை உடையவை.

விடை :  அதிக அளவு கவரும் 

8. டைனமோக்கள் மூலம் ------- உற்பத்தி செய்ய காந்தங்கள்  பயன்படுகின்றன.

விடை : மின்னோட்டம் 

9. கணினியில் உள்ள சேமிக்கும் சாதனங்களான நிலைவட்டுக்களில் காந்தங்கள் பயன்படுகின்றன. அவை ----- அட்டைகளிலும் பயன்படுகின்றன.

விடை :  கடன் 

III.பொருத்துக

அ) மேக்னடைட்  - இயற்கை காந்தம்

ஆ) ஒரு சிறு சுழலும் காந்தம் - காந்த ஊசிப்பெட்டி

இ) கோபால்ட் - ஃபொ:ரோ காந்தப் பொருள்கள்

ஈ) வளை பரப்புகள் - காந்தவிசைக் கோடுகள்

உ) பிஸ்மத்  -  டயா காந்தப் பொருள்கள்

IV. ஒரு மாறுதிசை மின்னோட்ட (AC) மின்னியற்றியின் படம் வரைந்து பாகங்கள் குறிக்கவும் .

NS - நிலைக்காந்தம்

ABCD - செவ்வக வடிவக் கம்பிச்சுருள்

B1 B2  -  நழுவு வளையங்கள்

S1 S2   - நழுவு வளையங்கள்

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post