6th Tamil unit 2 Assignment answer key - July 2021

6th Tamil unit 2 Assignment answer key - July 2021

ஒப்படைப்பு – விடைகள்

                          வகுப்பு  :  6               பாடம்: தமிழ்    அலகு 2

                         பகுதி – அ

1.ஒரு மதிப்பெண்வினா

1. கதிரவனின் மற்றொரு பெயர்?

அ) புதன்

ஆ) ஞாயிறு 

இ) சந்திரன்

ஈ)செவ்வாய்

விடை :  ஆ ) ஞாயிறு

2. வெண்குடை என்ற சொல்லை பிரித்தெழுதுக……..

அ) வெண்+குடை

ஆ) வெண்மை+குடை

இ) வெம்- குடை

ஈ) வெம்மை குடை

விடை : ஆ ) வெண்மை + குடை 

3. கிணறு என்பதைக் குறிக்கும் சொல் …….

அ) ஏரி

ஆ) கேணி

இ) குளம்

ஈ) ஆறு

விடை :  ஆ ) கேணி 

4. நில + ஒளி என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்………

அ) நிலா ஒளி       

ஆ) நில ஒளி

இ) நிலவொளி 

ஈ) நிலவு ஒளி

விடை : இ ) நிலவொளி 

5. வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரித்தெழுதுக

அ) வேதி+யுரங்கள்

ஆ) வேதி +  உரங்கள்

இ)வேதி + உரங்கள்

ஈ) வேதியு+ரங்கள்

விடை  : ஆ ) வேதி + உரங்கள்

6. நன் மாடங்கள் என்னும் சொல்லை பிரித்தெழுதுக

அ) நன் + மாடங்கள்

ஆ) நற்  + மாடங்கள்

இ) நன்மை +  மாடங்கள்

ஈ) நல் + மாடங்கள்

விடை : இ ) நன்மை + மாடங்கள் 

7. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி………..

அ) துருவப் பகுதி

ஆ) இமயமலை

இ) இந்தியா

ஈ) தமிழ்நாடு

விடை : அ ) துருவப் பகுதி 

8. வழி தடம் என்பதனைச் சேர்த்து எழுதுக

அ) வழிதடம்

ஆ) வழித்தடம்

இ) வழிதிடம்

ஈ) வழித்திடம்

விடை : ஆ ) வழித்தடம்

9. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது………..

அ) ஊக்கமின்மை

ஆ) அறிவுடைய மக்கள்

இ)வன்சொல்

ஈ) சிறிய செயல்

விடை : ஆ ) அறிவுடைய மக்கள்

10. ஒருவருக்குச் சிறந்த அணி………..

அ) மாலை

ஆ) காதணி

இ) இன்சொல்

ஈ)வன் சொல்

விடை : இ ) இன்சொல்

பகுதி-ஆ

IL. சிறுவினா

1. இயற்கை போற்றத்தக்கது ஏன்?

  • வெண்ணிலவு தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது.
  • கதிரவன் பொன் போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றி வருகிறது. 
  • மழை வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது.
  •   எனவே , இயற்கைப் போற்றத்தக்கது.

2. காணி நிலம் பாடலின் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக?

  • காணி – காணி  = கா
  • பத்துப் – பக்கத்திலே = ப
  • முத்துச் சுடர் – முன்பு   = மு

3. பறவைகள் எக்காரணங்களுக்கு இடம் பெயர்கின்றன? 

  •   உணவு  , இருப்பிடம் , தட்பவெப்பநிலை மாற்றம் , இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன.

4. சாண்டியாகோ குறித்து உங்கள் கருத்து யாது?

  •   சாண்டியாகோ வயது முதிர்ந்த மீனவர் .
  •   கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல் திரும்ப மாட்டார்.
  •    மனோலின் எனும் சிறுவன் அவருடன் மீன் பிடிக்க வந்தான். 
  •   சாண்டியாகோ விடாமுயற்சியும் , தன்னம்பிக்கை உடையவராகவும் திகழ்கிறார்.

5. எழுத்துக்களுக்குத் தொடக்கமாக அமைவது?

  • முதலெழுத்துகள்

  பகுதி – இ

III. பெருவினா

1 பறவை இனங்கள் அழியாமல் காப்பாற்றப்பட நாம் செய்ய வேண்டியவை பற்றி சிந்தித்து எழுதுக?

  •  ஆல் , அரசு போன்ற மரங்களையும்  அவரை , புடலை பொன்ற கொடிகளையும் வளர்க்க வேண்டும்.
  •   நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர்த் தாவரங்களையும் வளர்க்க வேண்டும்.
  •   தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள் , பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பகுதி-ஈ

IV.செயல்பாடு

1 சாண்டியாகோவைப் போன்று உனக்கோ அல்லது உன்னைச் சார்ந்தவர்களுக்கோசவாலாக இருந்த ஒருநிகழ்வை அரைப்பக்க அளவில் எழுதுக.

    

விடைத்தயாரிப்பு 

திரு. பா சிவசாமி MA BEd, 

தமிழாசிரியர் ,திண்டுக்கல் மாவட்டம்

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts