> 8th Tamil worksheet 3 answer key -bridge course workbook ~ Kalvikavi

10,11,12th New Study Material 2025 - 2026

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

8th Tamil worksheet 3 answer key -bridge course workbook

8th Tamil worksheet 3 answer key -bridge course workbook

Back to 8th All subjects workbook page - Click here

Class - 8thTamil

Subject     - Tamil

Board.       - TN State board

8th Tamil Work sheet -3 answer 

1st to 9th All subjects workbook answers - Click here


8th tamil bridge course workbook - worksheet 3 answer

பலவுள் தெரிவு வினா

1.உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது எவ்விடங்களில் பொருந்தி வருவதனால் எழுத்துகள் பிறக்கின்றன?

அ) இதழ்,நாக்கு, மார்பு, கழுத்து

ஆ) இதழ்,நாக்கு, பல், மேல்வாய்

இ)மார்பு,வாய், நாக்கு, கழுத்து

ஈ)மார்பு, தலை, கழுத்து, மூக்கு 

விடை:ஈ)மார்பு, தலை, கழுத்து, மூக்கு 

2. எழுத்துகள் வேறு வேறு ஒலிகளாகத் தோன்ற காரணமான உறுப்புகள் யாவை?

அ) இதழ்,நாக்கு,பல், மேல்வாய்

ஆ) மார்பு,தலை, கழுத்து, மூக்கு 

இ)இதழ்,நாக்கு,கழுத்து, மூக்கு

ஈ)மார்பு, தலை, பல், மேல்வாய்

விடை:அ) இதழ்,நாக்கு,பல், மேல்வாய்

 3. கோடிட்ட இடங்களை நிரப்புக.

அ) மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால்______________என்னும் எழுத்துப் பிறக்கிறது.

விடை : வ்

ஆ) 'ய்' என்னும் எழுத்தின் பிறப்பிடம்_____________ ஆகும்.

விடை : கழுத்து

4. சரியா? தவறா? என எழுதுக.

அ) எழுத்துகளின் பிறப்பினை இடப்பிறப்பு,முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர். ( சரி)

ஆ) சார்பெழுத்துகள் முதலெழுத்துகளைச் சாராமல் தனியாகப் பிறப்பதற்குரிய முயற்சிகளைக் கொண்டு பிறக்கின்றன. (தவறு)

5.பொருத்துக.

எழுத்துபிறக்குமிடம்விடை
அ) அ1.இதழ் குவித்தல்2.வாயைத் திறத்தல்
ஆ) உ2.வாயைத் திறத்தல்1.இதழ் குவித்தல்
இ) க3.இதழ்கள் ஒட்டுதல்4.நாக்கின் முதற் பகுதி மேல் அண்ணத்தில் ஒட்டுதல்
ஈ)4.நாக்கின் முதற் பகுதி மேல் அண்ணத்தில் ஒட்டுதல்3.இதழ்கள் ஒட்டுதல்

6. படத்தில் உள்ள பேச்சுறுப்புகளின் பெயர்களை எழுதுக.

ஆ)

விடை:அண்பல்,அடி நா.நுனி நா,இடை நா,அடியண்ணம்,நுனியண் ணம்,இடையண்ணம்,மேலுதடு, கீழுதடு.

7. அட்டவணையில் 'தமிழ்' என்னும் சொல்லிலுள்ள எழுத்தின் வகை, அது பிறக்கும்

விடை : 

த - வகை:உயிர்மெய் ,பிறக்குமிடம்:மார்பு.

மி - வகை: உயிர்மெய், பிறக்குமிடம் :மூக்கு.

ழ் - வகை :மெய், பிறக்குமிடம்: கழுத்து

8. உயிரெழுத்துகளின் முயற்சிப்பிறப்புப் படங்கள் கீழே தரப்பட்டுள்ளன. அப்படத்தின் முயற்சியோடு பிறக்கும் உயிரெழுத்துகளை அதற்குப் பக்கத்திலுள்ள கட்டங்களில் எழுதுக.

முயற்சிப்பிறப்புப் படங்கள்        பிறக்கும் உயிரெழுத்துகள்

விடை : 

படம் 1 க்கான விடை - அ, ஆ


படம் 2 க்கான விடை - இ.ஈ,எ,ஏ.ஐ


படம் 3 க்கான விடை - உ,ஊ.ஒ.ஓ..ஔ.

9. உரைப்பகுதியைப் படித்து விடைக்கேற்ற வினாக்களை உருவாக்குக.

எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக்கொண்ட உயிர் பிறக்கின்றன. வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.

விடைகள்

அ) உயிரெழுத்துக்கள் 12

வினா: அ)கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்துகள் யாவை?அவை எத்தனை?

ஆ) மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

வினா: ஆ)வல்லின மெய்யெழுத்துகள் ஆறும் எதை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?

இ)மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

வினா:இ)மெல்லின மெய்யெழுத்துகள் ஆறும் எதை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?

ஈ)இடையின மெய்யெழுத்துகள்

வினா:கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும் மெய்எழுத்துகள் யாவை?

உ) ஆய்த எழுத்து

வினா:உ)தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து யாது?

10. மெல்லின எழுத்துகளின் முயற்சிப்பிறப்பு குறித்து எழுதுக.

(குறிப்பேட்டில் எழுதுக)

விடை :

ங் - முதல் நா அடி அண்ணத்தைப் பொருந்துவதால் பிறக்கும்

ஞ்-இடை நா இடை அண்ணத்தைப் பொருந்துவதால் பிறக்கும்.

ண் - நுனி நா நுனி அண்ணத்தைப் பொருந்துவதால் பிறக்கும்.

ந் - மேல்வாய்ப்பல்லின் அடியை நாவின் நுனி பொருந்துவதால் பிறக்கும்.

ம்-மேல்,கீழ் உதடுகள் பொருந்துவதால் பிறக்கும்.

ன் - மேல்வாயை நாக்கின் நுனி மிகப்பொருந்துவதால் பிறக்கும்.

Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel