TN 12th tamil unit 5.4 அகநானூறு book back question and answer guide pdf download

 

TN 12th tamil unit 5.4 அகநானூறு  book back question and answer guide pdf download

Tamilnadu state board samacheer book guide solution unit 1 to 8 book back question and answer guide .12th tamil samacheer guide solution book back and creative important questions,model questions,guide,notes

samacheer guide 12th tamil 5.4 அகநானூறு guide answers

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக one mark unit 5 12th tamil

Question 1.

‘விளியறி ஞமலி’ – இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது?

அ) எருது

ஆ) குதிரை

இ) நாய்

ஈ) யாழி

Answer:

இ) நாய்

12th tamil unit 5 book back samacheer guide.online


குறுவினா one mark unit 5 12th tamil

Question 1.

‘பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ தொடரில் உள்ள முரண் நயத்தைக் குறிப்பிடுக.

Answer:

 • பெருங்கடல் – சிறுகுடிப் பரதவர்.


சிறுவினா 4 mark unit 5 12th tamil

Question 1.

‘நெல்லின் நேரே வெண்கலம் உப்பு’ – இத்தொடரின் வழி பண்டமாற்று வணிகத்தை விளக்குக.

Answer:

 • உப்புக்குப் பதிலாக (மாற்றாக) நெல்லை விற்றனர் என்ற செய்தியின் மூலம் சங்கக் காலத்தில் பண்டமாற்று வணிகம் நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது.

விளக்கம் :

 • உமணர் ஒருவரின் மகள் அழகும் இளமையும் வாய்ந்தவள். தன் கைகளில் அணிந்திருந்த வளையல்கள் ஒலிக்க வீதிக்குச் சென்றாள். அப்போது அந்த வீதி வழியாக வந்த வணிகனை நோக்கி.

உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப்

பெற்றுக் கொள்ள வாரீரோ! என்று கூவினார்’.

‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனச்’

சேரி விலைமாறு கூறலின் மனைய்’

 • என்ற பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

இலக்கணக் குறிப்பு

 1. பெருங்கடல் – பண்புத்தொகை
 2. உழாஅது – செய்யுளிசை அளபெடை
 3. வெரீஇய – சொல்லிசை அளபெடை

பகுபத உறுப்பிலக்கணம்

 • செய்த = செய் + த் + அ

செய் – பகுதி

த் – இறந்தகால இடைநிலை

அ – பெயரெச்ச விகுதி

 • சாற்றி = சாற்று + இ

சாற்று – பகுதி

இ – வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதி

 • 1. பெருங்கடல் = பெருமை + கடல்
 • ஈறுபோதல்’ 

என்ற விதிப்படி, மை கெட்டு பெரு + கடல் என்றானது.

 • ‘இனமிகல்’ 

என்ற விதிப்படி, க-வுக்கு இனமான ங் தோன்றி, பெருங்கடல் என்று புணர்ந்தது.

12th tamil unit 5 book back samacheer guide.online

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக one mark unit 5 12th tamil

Question 1.

பொருத்திக் காட்டுக.

அ) வேட்டம் – 1. கானவன்

ஆ) செறு – 2. மீன்பிடித்தல்

இ) உமணர் – 3. வயல்

ஈ) புனவன் – 4. உப்பு வணிகர்

அ) 2, 3, 4, 1

ஆ) 4, 3, 2, 1

இ) 3, 4, 1, 2

ஈ) 2, 3, 1, 4

Answer:

அ) 2, 3, 4, 1

Question 2.

பொருத்திக் காட்டுக.

அ) ஞமலி – 1. சேறு

ஆ) பகடு – 2. விலை

இ) அள்ள ல் – 3. நாய்

ஈ) கொள்ளை – 4. எருது

அ) 3, 4, 1, 2

ஆ) 4, 3, 2, 1

இ) 2, 1, 3, 4

ஈ) 4, 2, 1, 3

Answer:

அ) 3, 4, 1, 2

12th tamil unit 5 book back samacheer guide.online

Question 3.

பொருத்திக் காட்டுக.

அ) என்றூழ் – 1. மலைவெடிப்பு

ஆ) விடர் – 2. சூரிய வெப்பம்

இ) கதழ் – 3. அஞ்சிய

ஈ) வெரீஇய – 4. விரைவு

) 4, 3, 2, 1

ஆ) 2, 1, 4, 3

இ) 4, 2, 1, 3)

ஈ) 1, 2, 3, 4

Answer:

ஆ) 2, 1, 4, 3

Question 4.

‘மதர்கயல் மலைப்பின் அன்ன’ – என்பதில் ‘கயல்’ என்னும் சொல்லின் பொருள்

அ) மீன்

ஆ) விழி

இ) விண்மீ ன்

ஈ) இவற்றில் எதுவுமில்லை

Answer:

அ) மீன்


Question 5.

பெரிய கடல் பரப்பில் மீன் வேட்டையாடுபவர்

அ) குறவர்

ஆ) ஆயர்

இ) எயினர்

ஈ) பரதவர்

Answer:

ஈ) பரதவர்

Question 6.

‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு’ என்பது யாருடைய கூற்று?

அ) பரதவரின் கூற்று

ஆ) உமணர் மகள் கூவியது

இ) தலைவியின் கூற்று

ஈ) தலைமகன் பாங்கற்கு உரைத்தது

Answer:

ஈ) தலைமகன் பாங்கற்கு உரைத்தது


Question 7.

உப்பு ஏற்றிச்செல்லும் வண்டி சிக்கிக் கொண்ட இடம்

அ) மணற்திட்டு

ஆ) கருஞ்சேறு

இ) வாய்க்கால்

ஈ) இவற்றில் எதுவுமில்லை

Answer:

ஆ) கருஞ்சேறு

12th tamil unit 5 book back samacheer guide.online

Question 8.

‘வெய்ய உயிர்க்கும் நோயாகின்றே’ என்று யார் யாரிடம் கூறியது?

அ) உமணர் மகள் தந்தையிடம்

ஆ) தந்தை உமணர் மகளிடம்

இ) தலைமகன் பாங்கனிடம்

ஈ) பாங்கன் தலைமனிடம்

Answer:

இ) தலைமகன் பாங்கனிடம்


Question 9.

உப்பு விளையும் களத்திற்கு ……………. என்று பெயர்.

அ) அளம்

ஆ) பாலம்

இ) நிலம்

ஈ) களி

Answer:

அ) அளம்


Question 10.

பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக விளங்கியது

அ) உப்பு

ஆ) முத்து

இ) துணி

ஈ) ஏலம்

Answer:

அ) உப்பு 

Question 11.

பொருத்திக் காட்டுக.

அ) பெருங்கடல் – 1. செய்யுளிசை அளபெடை

ஆ) உழாஅது – 2. சொல்லிசை அளபெடை

இ) வெரீஇய – 3. பண்புத்தொகை


அ) 3, 1, 2

ஆ) 3, 2,1

இ) 1, 2, 3

ஈ) 2, 1, 3

Answer:

அ) 3, 1, 2

Question 12.

பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல்

அ) அகநானூறு

ஆ) புறநானூறு

இ) குறுந்தாகை

ஈ) நற்றிணை

Answer:

அ) அகநானூறு

12th tamil unit 5 book back samacheer guide.online

Question 13.

அகநானூறு ………. நூல்களுள் ஒன்று

அ) எட்டுத்தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) நீதி

ஈ) பதினெண்கீழ்க்கணக்கு

Answer:

அ) எட்டுத்தொகை


Question 14.

அகநானூறு …………….. பிரிவுகளை உடையது.

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

Answer:

அ) மூன்று


Question 15.

பொருத்திக் காட்டுக.

அ) களிற்றியானை நிரை – 1) 100 பாடல்கள்

ஆ) மணிமிடை பவளம் – 2) 120 பாடல்கள்

இ) நித்திலக்கோவை – 3) 180 பாடல்கள்

அ) 2, 3, 1

ஆ) 1, 2, 3

இ) 3, 2, 1

ஈ) 1, 3, 2

Answer:

அ) 2, 3, 1

Question 16.

சரியானக் கூற்றைக் கண்டறிக.

i) அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்

ii) நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர் அம்மூவனார்.

ii) இவரது பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.

அ) i), ii), சரி

ஆ) i), iii) சரி

இ) iii) மட்டும் தவறு

ஈ) மூன்றும் சரி

Answer:

ஈ) மூன்றும் சரி

குறுவினா 2 mark unit 5 12th tamil

Question 1.

பரதவர்கள் தொழிலான வேட்டையாடுபவை, விளைவிப்பவை எவை?

Answer:

 1. வேட்டையாடுபவன் : கடல் பரப்பில் மீன் வேட்டையாடுபவர்
 2. விளைவிப்பன : உப்பளங்களில் உழவு செய்யாமல் உப்பு விளைவிப்பவர்


Question 2.

உமணப் பெண்ணின் தோற்றத்தை விவரி.

Answer:

 1. அழகும் இளமையும் வாய்ந்தவள்.
 2. அவள் தம் கைகளில் அழகிய வளையல்கள் ஒலிக்க தெருவில் கைவீசி நடப்பவள்.
 3. உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப் பெற்றுக்கொள்ள வாரீரோ!’ என்று கூவினாள்.

Question 3.

தலைமகன் பாங்கற்கு உரைத்ததை அகநானூற்றுப் பாடல் மூலம் விளக்குக.

Answer:

 • (i) வண்டியை இழுக்கும் எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது போல. தலைவியைக் கண்டதனால் எனக்கேற்பட்ட துன்பத்தை நீ போக்குதற்கு உரியவன் என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.
 • (ii) எருதைத் தலைவனுக்கும் தந்தையைப் பாங்கனுக்கும் உப்பின் எடையால் எருது வருந்தும் நிலைய காதல் வருத்தத்திற்கும் உள்ளுறை வைத்துப் பாடப்பட்டுள்ளது.

Question 4.

உப்பங்கழி என்றால் என்ன?

Answer:

 • கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கி இருக்கும் பகுதிக்கு உப்பங்கழி என்பர்.

Question 5.

கல் உப்பை எவ்வாறு விளைவிப்பர்?

Answer:

 1. உப்பங்கழிகளில் உள்ள கடல் நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்புப் படிவதற்கு ஏற்ற வகையில் அமைப்பர்.
 2. இவ்வாறு அமைக்கப்பட்ட பகுதி ஆடைபோல் படியும் இந்த உப்பைக் கூட்டிச் சேகரித்துப் : பக்குவப்படுத்தி விற்பனை செய்வர்.
12th tamil unit 5 book back samacheer guide.online

Question 6.

உப்பளம் என்றால் என்ன?

Answer:

 • கடல் நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்பு படிவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்ட இடத்தை உப்பளம் என்பர்.

சிறுவினா 4 mark unit 5 12th tamil

Question 1.

அகநானூறு – குறிப்பு வரைக.

Answer:

 1. அகம் + நான்கு + நூறு.
 2. எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த நூல்.
 3. நெடுந்தொகை என்றும் அழைப்பர்.
 4. 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்டது.
 5. மூன்று பெரும் பிரிவுகளை உடையது:
 6. களிற்றியானை நிரை – 120; மணிமிடைப் பவளம் – 180; நித்திலக் கோவை – 100
 7. திணை அமைப்பு:

பாலை – 1, 3, 5, 7;

மருதம் – 6, 16, 26;

குறிஞ்சி – 2, 8, 12, 18

நெய்தல் – 10, 20, 30;

முல்லை – 4, 14, 24

 • என்ற முறையில் திணை அமைப்பு அமைந்துள்ளது.

Question 2.

அகநானூற்றுப் பாடலில் வரும் நெய்தல் திணையின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் விளக்குக.

Answer:

 1. திணை – நெய்தல்
 2. பெரும்பொழுது : ஆறு பெரும்பொழுதுகளும்; சிறுபொழுது : எற்பாடு
 3. முதற்பொருள் : கடலும் கடல் சார்ந்த இடமும்

கருப்பொருள்:

 1. தெய்வம் – வருணன்
 2. மக்கள் – பரதன், பரத்தியர்
 3. உணவு – மீன் உப்புக்குப் பெற்றபொருள்
 4. விலங்கு – முதலை, சுறா
 5. பூ – நெய்தல், தாலை
 6. மரம் – புன்னை
 7. பறவை – கடற்காகம்
 8. ஊர் – பட்டினம், பாக்கம்
 9. பறை – மீன் கோட்பறை
 10. யாழ் – விளரியாழ்
 11. பண் – செவ்வழிப்பண்
 12. தொழில் – மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்

உரிப்பொருள் : 

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

 • சான்று: ‘பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்’ எனத் தொடங்கும்

 • 12th tamil unit 5 book back samacheer guide.online அகநானூற்றுப் பாடல்.

நெடுவினா 12th tamil unit 5 neduvina

Question 1.

அகநானூற்றுப் பாடல் வழியாகத் தலைமகன் பாங்கற்கு உரைத்த செய்தியை விளக்குக.

Answer:

 • பழந்தமிழர்களின் தொழில் நிலத்தின் இயல்பைச் சார்ந்து அமைந்திருந்தது.
 • கடற்கரையில் வாழும் மக்கள் மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் போன்ற தொழில்கள் செய்து, அப்பொருட்களை பண்டமாற்று முறையில் உப்பு வணிகத்தைச் செய்தனர்.
 • பரதவர் கடலில் மீன் வேட்டையாடுவர்.
 • உப்பளங்களில் உழவு செய்யாமலே உப்பு விளைவிப்பர்.
 • வெண்மையான உப்பை வண்டியில் ஏற்றுவர்.
 • எருதுகளை விரட்ட தாழ்கோல் வைத்திருப்பர்.
 • கோடைக்காலத்தில் வெப்பத்தால் பிளவுபட்ட குன்றைக் கடந்து தொலைவில் உள்ள ஊர்களில் விற்பனைச் செய்வர்.
 • அத்தகைய உமணரின் பெண் அழகும், இளமையும் வாய்ந்தவள்.
 • அழகிய வளையல்கள் ஒலிக்கத் தெருவில் நடந்து சென்று உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பைப் பெற்றுக் கொள்ள வாரீரோ! என்று கூவுகிறார்.
 • கூவுவதைக் கேட்டு நாய் குரைக்கிறது.
 • எதிர்பாராத அப்பெண் அச்சம் கொண்டு மீன்கள் போர் செய்வதுபோல் கண்கள் மருண்டன.
 • மருண்ட அப்பெண்ணின் கண்களை நான் கண்டேன்.
 • தினைப்புனம் அமைக்கும் கானவர் பழைய புனத்தைத் தீயிட்டு அழிக்கும்போது உருவாகும் புகையால் பெண்ணின் தந்தையின் வண்டியானது சேற்றில் சிக்கிக் கொண்டது.
 • துன்பத்தில் உள்ள எருதுக்குத் தந்தை உதவி செய்தார்.
 • எருது அடைந்த துன்பம் போல் பெண்ணின் கண்களால் நான் துன்பம் அடைந்தேன்.
 • வண்டியை இழுக்கும் எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது போல் எனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீ போக்க வேண்டும் என்று தலைமகன் பாங்கற்கு உரைத்தான்.

உள்ளுறை :

 • எருதைத் தலைவனுக்கும்
 • தந்தையைப் பாங்கனுக்கும்
 • என உப்பின் எடையால் எருது வருந்தும் நிலையைக் காதல் வருத்தத்திற்கு உள்ளுறை வைத்துப் பாடப்பட்டுள்ளது.

கற்பவை கற்றபின்

Question 1.

தற்காலத்தில் வணிகத்தில் சிறந்து விளங்கும் மகளிர் குறித்து ஒரு கட்டுரை எழுதுக.

Answer:

 1. ஒரு பெண் நம் சமூகத்தில் வெற்றி பெற வேண்டுமானால் 100 சதவீதம் வேலை செய்தால் போதாது. 200 சதவீதம் உண்மையான கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் இன்றையக் காலத்தில் திருவாரூரில் பெண்கள் தங்கள் வாழ்க்கையை வணிகத்திலும் : ஈடுபடுத்தி, சிறந்து விளங்குகின்றனர்.
 2. அவ்வகையில் திருவாரூரில் பிறந்து சென்னையில் பிழைப்புத் தேடி வந்த பெண் இன்று வணிகத்தில் சிறந்து விளங்குகிறாள். அவரைப் பற்றி சில வரிகள்
 3. வறுமை, கல்வி, பொருளாதாரம், கவலை, சோகச்சூழல் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய சூழலில் சென்னை வந்த பெண் ஏதாவது செய்யத் துடிக்கிறாள்.
 4. முன் அனுபவம் இல்லாத நிலையில் வடமாநில தோழி மூலம் பினாயில் தயாரிக்க ஆரம்பித்தார். பிறகு 500 ரூபாய் கடன் வாங்கி மூலப்பொருள் மூலம் பொருட்கள் வாயிலாக தாமே தனியாக தொழில் செய்ய ஆரம்பித்தார். தான் தயாரித்த பினாயிலை, அரசு அலுவலகங்கள், தபால் நிலையங்கள், உணவகங்களில் நேரிடையாகச் சென்று விற்க ஆரம்பித்தார். போதிய வருமானம் கிட்டியது. வியாபாரத்தை மேலும் சிறக்கச் செய்ய அதிக மூலதனம் வைத்து இரண்டு பெண்களை உதவிக்கு வைத்துக் கொண்டார்.
 5. தரம் உயர்தரம் என்ற நோக்கத்தோடு உழைத்த பெண்மணி இன்று தன்னிடம் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களையும் வணிகத்தில் ஈடுபடச் செய்தார். தன் நிறுவனத்துக்கு நிலை ஏஜென்ஸி என்ற பெயர் வைத்து பினாயில் வணிகத்தில் சிறந்து விளங்குகிறார் என்றால் மிகையாகாது.
 6. ஆணுக்குப் பெண் சமம் என்று மகளிர் தற்காலத்தில் வணிகத்தில் சிறந்து விளங்குகின்றனர் என்பதற்கு இதுவே சான்றாகும்.

Question 2.

பழங்காலத் தொழில்கள் குறித்துக் கருத்தரங்க உரை உருவாக்குக.

Answer:

 1. பழந்தமிழ் மக்கள் வாழ்வதற்காகப் பொருள் தேடுவதைக் கடமையாகக் கொண்டனர். அதற்காகப் பற்பல தொழில் வகைகளை மேற்கொண்டனர். தம் வாழிடங்களுக்கு ஏற்ப : ! தொழில்களை தேர்ந்தெடுத்தனர். மலைநாட்டு மக்கள் தேனெடுப்பது தினை விதைப்பது, காட்டுப் பகுதியில் வாழ்பவர் நிரை மேய்ப்பது; பால் கடைவது; வயல்வெளியில் உள்ளோர் உழவு செய்து நகர் அமைத்து ஆட்சி செய்வது போன்ற பணிகளையும் செய்தனர். கடற்கரைப் பகுதியில் வாழ்வோர் உப்பு விளைத்தல்; முத்து குளித்தல்; அலை கடல் ஏறி வாணிகம் செய்தல்.
 2. தொழில் செய்தே பொருள் தேடுவதே அவர் கொள்கை. பசுக்களுக்கு நீர் வேண்டும் என்று கருதி இரத்தல் கூட இழிவான செயலாகக் கருதினர். தாமே முயற்சி செய்து நீரைப்பெற்றுப் தர வேண்டும் என்றனர்.
 3. தாமே முயன்று தேடும் பொருளையே தமக்குரியதாகக் கருதினர். எளிய முயற்சியில் வருவதை ஏற்க மறுத்தனர்.
 4. முயற்சி உடையார் இகழச்சியுடையார் என்பதற்கு ஏற்ப இயன்று பழந்தமிழர் தொழில்கள் செய்தனர்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post

POST ADS 2

எங்களது Kalvikavi & TNTET Arts YouTube telegram , Whatsapp இணைந்திடுங்கள் 
y
Please Wail material is Loading...