தமிழகத்தில், வரும், 16ம் தேதி பள்ளிகளை திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து, முதல்வர் இன்று(நவ.,12) முடிவை அறிவிப்பார்

 தமிழகத்தில், வரும், 16ம் தேதி பள்ளிகளை திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து, முதல்வர் இன்று(நவ.,12) முடிவை அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா பிரச்னையால், ஏழு மாதங்களாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு உள்ளன. வரும், 16ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகளை திறக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும், பெற்றோரின் கருத்துக்களை கேட்ட பின், பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி, கருத்து கேட்பு கூட்டம், தமிழகம் முழுதும், 9ம் தேதி நடந்தது.


பெற்றோரின் கருத்துகள், மாவட்டவாரியாக தொகுக்கப்பட்டு, தமிழக அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை, தலைமைச் செயலர், பள்ளிக் கல்வி, உயர் கல்வி மற்றும் சுகாதாரத் துறைச் செயலர்கள் அடங்கிய குழு பரிசீலனை செய்து, தன் பரிந்துரையை, அரசுக்கு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், வரும், 16ம் தேதி, பள்ளிகளை திறப்பதா, வேண்டாமா என்பதை, முதல்வர் இன்று அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகளை திறக்க, 40 சதவீதத்துக்கு மேற்பட்ட பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.


சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், பள்ளி திறப்பை தள்ளி வைக்குமாறு, அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.எனவே, பள்ளி திறப்பு, டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப் போகுமா அல்லது தீபாவளிக்கு பின் திறக்கப்படுமா என, இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
Send Your Materials This WhatsApp Number : 9095918266