> TET தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என அறிவிப்பு ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TET தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என அறிவிப்பு

TET தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என அறிவிப்பு.

ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட்) ஒரு முறை தேர்ச்சி பெற்றால் போதும் அது ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழு அறிவித்துள்ளது.



ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே அதற்கான சான்றிதழ் செல்லும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டு அவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இனிவரும் நாள்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோருக்கு, ஆயுள் முழுவதும் செல்லும் வகையில் சான்றிதழ் அளிக்கப்படும்.

ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோருக்கு, ஆயுள் சான்றிதழ் நீட்டிப்பு வழங்குவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழு தெரிவிக்கப்பட்டுள்ளது.



Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel