தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் இன்று ( அக்.2 ) ஈரோட்டில் பேட்டி அளித்தார்.


தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் அருகே மகளிர் சுய உதவி திட்டத்தின் கீழ் ஆவின் பாலகத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

அதனைதொடர்ந்து, சுமார் 11 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்த பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post