ஆசிரியர்களுக்கு 3 மாதத்திற்ககான NISHTHA பயிற்சி பாடநெறிகளுக்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வெளியீடு. • 👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group
 •  உலகில் ஒவ்வொரு நாளும் அறிவியலிலும் , தொழில் நுட்பத்திலும் மற்ற துறைகளிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ச்சியும் பெருகிக்கொண்டே வருகின்றன . 
 • ஆசிரியர்கள் தற்போதைய மாற்றங்களை அறிந்துக் கொண்டு தங்களது கற்பிக்கும் திறனையும் , தொழில் நுட்ப அறிவையும் அவ்வப்போது பெருக்கிக் கொள்வதும் , கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளுதலும் இன்றியமையாததாகும் . 
 • எனவே ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து கற்றல் , கற்றுக் கொண்டே இருத்தல் , அறிவைப் புதுப்பித்தல் ஆகியன மிக அவசியம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது .
 •   2019-20 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அரசு பள்ளி Ariunite 6. & NISHTHA- National Initiative for School Heads and Teachers ' Holistic Advancement என்ற ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கப்பட்டது . அப்பயிற்சி வெற்றி பெற்றதன் தொடர்ச்சியாக இக்கல்வியாண்டில் இணைய வழியாக ( Online ) கட்டணமில்லா NISHTHA பாடநெறிகள் ( courses ) பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு , அரசு உதவி பெறும் பள்ளி , Matric மற்றும் Nursery & Primary பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு வழங்க மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது . 
 • கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற NISHTHA பயிற்சியில் வழங்கப்பட்ட ஒவ்வொரு தலைப்பின் கீழும் உள்ள கருத்துக்களில் தற்பொழுது இணைய வழியில் வழங்கும் விதமாக பல்வேறு மாற்றங்களை NCERT மேற்கொண்டுள்ளது . இதில் பல்வேறு செயல்பாடுகள் , காணொலிகள் , வினாடி வினா ( Quiz ) இணைக்கப்பட்டு புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளின் அடிப்படையில் 18 பாடநெறிகள் ( courses ) வடிவமைக்கப்பட்டுள்ளன . 
 • இதில் புதிதாக COVID 19 நிகழ் சூழ்நிலையினை பள்ளி கல்வியில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை பற்றி ஒரு பாடநெறி இணைக்கப்பட்டுள்ளது . 
 • இக்கல்வியாண்டில் இணைய வழி NISHTHA பாடநெறிகளில் ( Online courses ) கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது . 
 • எனவே கடந்த கல்வியாண்டில் பயிற்சி மேற்கொண்ட 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இக்கட்டணமில்லா இணைய வழி NISHTHA பாடநெறிகளில் ( Online courses ) தங்கள் பணி மேம்பாட்டிற்காக பங்கேற்கலாம் . மேலும் கடந்த கல்வியாண்டில் பயிற்சி மேற்கொள்ளாத 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயமாக இணைய வழி NISHTHA பாடநெறிகளில் ( Online courses ) கலந்துகொள்ள வேண்டும் .
 •  Digital Infrastructure for Knowledge Sharing ( DIKSHA ) இணைய தளத்தில் இடம்பெற்றுள்ள பாடம் சார் வளங்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் DIKSHA portal மற்றும் Mobile App வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது . எனவே NISHTHA பாடநெறிகள் ( Online courses ) , DIKSHA வழியாக அளிக்கப்படவுள்ளது .
 • NISHTHA பாடநெறிகள் அனைத்து ஆசிரியர்களும் எளிதில் பங்கேற்கும் விதமாக ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது . 15 நாள்களுக்கு 3 courses என்ற அடிப்படையில் 2020 அக்டோபர் 16 முதல் 2021 சனவரி 15 வரை மூன்று மாதத்திற்கு பின்வருமாறு ஆங்கில வழி மற்றும் தமிழ் வழிக்கான கால அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post