10th tamil 5 marks question - kaditham - katturai

  10th Tamil Important 5 Mark Questions - Reduced syllabus 2021


10 TH STD 5 MARK QUESTION &ANSWERS -பத்தாம் வகுப்பு -5 மதிப்பெண் வினாக்கள் - கடிதம் எழுதுதல் -வாழ்த்து மடல் ,உணவு தரமற்றதால் ஆணையருக்குக் கடிதம் | KATRATHUKALVI - SAMACHEER  GUIDE


        வாழ்த்து மடல் எழுதுக .

1. மாநில அளவில் நடைபெற்ற"  மரம் இயற்கையின் வரம்" எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக .


இயல் -2       ப.எண் : 48

                     வாழ்த்து மடல்

                                                                                    சேலம் ,
                                                                                    24.03.2020 .


அன்புள்ள தோழி ,
           நான் நலமாக  உள்ளேன் . நீ நலமா ? மற்றும்  உன் குடும்பத்தினரின்  நலமும்  அறிய ஆசை .
   

                       மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் " மரம் இயற்கையின் வரம் "   எனும் தலைப்பில்  கட்டுரை  எழுதி,  முதல் பரிசு பெற்றிருந்தாய் . இச்செய்தியை நாளிதழில் புகைப்படத்துடன் கண்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டேன் .
      பள்ளிகளில் நடைபெறும்  கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு  பல நல்ல கருத்துக்களை எழுதியிருப்பதை  வியந்து பாராட்டுகிறேன் .
      
              இன்றளவில்  மரங்களின் பயன் ,  மரங்கள் வளர்த்தல்.   மரங்களை அழிப்பதால் ஏற்படும் தீமைகள்   போன்ற கருத்துக்களைத் தெளிவாக எழுதி இருந்தாய் . மரங்களை அழித்துக் கொண்டே போனால்  சுவாசிப்பதற்கு காற்று  கிடைக்காது . காற்றை விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும்  என்ற செய்தியை எழுதியிருந்தாய் . இந்தக் கருத்து மிகவும்  சிந்திக்கவும் வரவேற்கத்தக்கதாகவும் அமையும் .
          மக்கள் மத்தியில்  விழிப்புணர்வை ஏற்படுத்தி 

" வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் ; மரங்களை அழிக்காதீர்கள் !" 
"மரம் வளர்ப்போம் ; மழை பெறுவோம் !"  என்று எழுதி இருந்ததைப் பாராட்டுகிறேன்.
       மேலும் மரக்கன்றுகள்  வளர்க்கும் விதம் குறித்து எழுதியிருந்தது  அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் .
      இதுபோல  நீ மேலும் பல கட்டுரைகள் எழுதி  பரிசுகள் பெற ,  மனதார வாழ்த்துகிறேன் .
                                 வாழ்த்துக்கள் .
                                                                                   

                                                                                இப்படிக்கு,
                                                                                உன் தோழி,
                                                                                 ச .ப்ரீத்.                                                                 உறை மேல் முகவரி
பெறுநர் ,
பெ. கீதா,
அண்ணா சாலை ,
திருநகர் ,
சென்னை .





-----------------------------------------------------------------------------------------
2. உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்  விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக .

இயல் -3                             ப.எண் : 68
 

                          கடிதம்


அனுப்புநர்
                  சி. கவின் ,
                  12, சுவாமி சாலை,
                  அண்ணா நகர் ,
                  சேலம் .


பெறுநர்
               உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள் ,
               உணவு பாதுகாப்பு ஆணையம் ,
               சென்னை .

ஐயா ,
             பொருள் :  உணவு தரமற்றதாக இருந்தது குறித்து நடவடிக்கை                                                         கோருதல் - சார்பாக .
             

                 வணக்கம் .  நான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ,   உணவு உண்பதற்காக என் வீட்டிற்கு அருகில் உள்ள செல்வி உணவு  விடுதிக்குச் சென்றிருந்தேன் . அங்கே பலகையில்   மட்டன் பிரியாணி ரூ.120  என  எழுதியிருந்தது.  நானும் பிரியாணியைச் சாப்பிட்டேன் . பின்  காசாளரிடம் அதற்கானத் தொகையினைச்  செலுத்தும் போது ரூ.150  செலுத்தும்படி கூறினார்.  அதிகமாக ஏன் பணம் கேட்கிறீர்கள் ? என்று நான் கேட்டதற்குப் பல விளக்கங்கள் கொடுத்து ரூ.150  பெற்றுக்கொண்டார் . 
          நான் வீட்டிற்கு வந்து ,சில மணி நேரங்களிலேயே  வாந்தி, பேதி  ஏற்பட்டு  உடல் நலமின்றி  மருத்துவமனைக்குச்  சென்று  சிகிச்சைப் பெற்றேன்.  மன உளைச்சலுக்கு ஆளானேன் .
       எனவே உணவு  தரம் அற்றதாகவும் , விலை கூடுதலாக பெற்றதாலும் அந்த உணவு விடுதியின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .
                                                 நன்றி !


சேலம்                                                         இப்படிக்கு ,
24.03.2020                                                      தங்கள் உண்மையுள்ள,
                                                                       சி .  கவின்

உறை மேல் முகவரி

பெறுநர்
     உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள் ,
     உணவு பாதுகாப்பு ஆணையம் ,
     சென்னை .

1 Comments

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post