+2விடுபட்ட மாணவர்களுக்கு இன்று தேர்வு

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் விடுபட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு தேர்வு இன்று நடைபெறுகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் 24ம் தேதி நடைபெற்ற 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு, ஏற்கனவே அறிவித்தபடி இன்று மறுவாய்ப்பு தேர்வு நடைபெறுகிறது.
மாநிலம் முழுவதும் 289 தேர்வு மையங்களில் நடைபெறும் தேர்வை 743 மாணவர்கள் எழுத உள்ளதாகவும், சென்னையில் மட்டும் 20 மையங்களில் 101 மாணவர்கள் தேர்வெழுத உள்ளதாகவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அவர்களுள் பெரும்பாலானோர் தனித்தேர்வர்கள் என்றும், அந்தந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.


Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
y
Please Wail material is Loading...