> மாநில அளவில் நடைபெற்ற 'கலைத்திருவிழா' போட்டியில் பங்கேற்று 'கலையரசன்' பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக. ~ Kalvikavi

10,11,12th New Study Material 2025 - 2026

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

மாநில அளவில் நடைபெற்ற 'கலைத்திருவிழா' போட்டியில் பங்கேற்று 'கலையரசன்' பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

மாநில அளவில் நடைபெற்ற 'கலைத்திருவிழா' போட்டியில் பங்கேற்று 'கலையரசன்' பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

காந்தி தெரு,

10.06.2025

அன்புள்ள நண்பன் அமுதனுக்கு,

             வணக்கம். நான் நலமாக இருக்கின்றேன். நீ நலமாக இருக்கின்றாயா? இல்லத்தில் அனைவரும் நலமாக உள்ளார்களா என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன். உன்னிடம் இருக்கின்ற கலைத்திறமைகளை உடனிருந்து நான் பார்த்திருக்கின்றேன். பல போட்டிகளில் கலந்துகொண்டு நீ பரிசுகளைப் பெற்றுள்ளாய்.

      தமிழ்நாடு அரசு நடத்திய கலைத்திருவிழாப் போட்டிகளிலும் கலந்துகொண்டு மூன்று போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாய். இதன் காரணமாகக் 'கலையரசன்' பட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கைகளால் பெற்றுள்ளாய். உனக்குக் கிடைத்த பெருமையால் நண்பர்கள் அனைவருமே பெருமையும் ஊக்கமும் அடைகிறோம். உன்னைப் போல பட்டங்கள்பெற முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

         இதைப்போல, வரக்கூடிய பல போட்டிகளிலும் கலந்துகொண்டு இன்னும் பல பரிசுகளைப் பெற உளமார வாழ்த்துகின்றேன். கோடை விடுமுறையில் நமது கிராமத்தில் சந்திப்போம்.

இப்படிக்கு,

உன் அன்புள்ள நண்பன்,

மா. குறளரசன்.

உறைமேல் முகவரி

பெறுநர்

ஆ. தமிழ்ச்செல்வன்,

50, அன்னை இல்லம்,

கபிலர் தெரு,

கோயமுத்தூர் 641 001.

Share:

0 Comments:

إرسال تعليق

📣 Join WhatsApp Channel