முதலில் வாங்க வேண்டிய முக்கிய சான்றிதழ்கள்
✅ மதிப்பெண் சான்றிதழ்
✅ மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate – TC)
இரண்டும் பள்ளியிலிருந்து உடனே பெற்று வைத்துக் கொள்ள வேண்டும்.
📝 மற்ற கட்டாய சான்றிதழ்கள்
1️⃣ ஆதார் அட்டை
👉 இருப்பது கட்டாயம். திருத்தங்கள் இருந்தால் இ-சேவை மையத்தில் திருத்திக் கொள்ளலாம்.
2️⃣ பிறப்புச் சான்றிதழ்
👉 இல்லையெனில் தமிழக அரசு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
3️⃣ இருப்பிடச் சான்றிதழ்
👉 தமிழக அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்காக முக்கியமானது.
4️⃣ ஜாதிச்சான்றிதழ்
👉 அரசு ஒதுக்கீட்டிலும், கல்வி உதவித் தொகைகளிலும் தேவைப்படும்.
5️⃣ வருமானச் சான்றிதழ்
👉 கல்வி உதவித் தொகை, கல்விக்கடன், அரசு நலத்திட்டங்களுக்கு பயன்படும்.
🧐 முக்கிய குறிப்புகள்
வருமானச் சான்றிதழ் காலாவதியாகும். அதனால் புதியதாக எடுத்து வைத்திருக்க வேண்டும்.
பிற மாநில மாணவர்கள் (8 முதல் 12ம் வகுப்பு தமிழகத்தில் படித்தவர்கள்) இருப்பிடச் சான்றிதழ் தேவையில்லை.
🎯 மாணவர்களுக்கு சில தனிப்பட்ட ஆலோசனைகள்
நான் என் அனுபவத்தில் பார்த்தது என்னவென்றால், பல மாணவர்கள் அறிவிப்பு வந்த பிறகு தான் ஓடி ஓடி சான்றிதழ்கள் எடுக்க முயற்சிக்கிறார்கள். இது நிறைய அழுத்தத்தை ஏற்படுத்தும்.
அதனால் இப்போதே எல்லா ஆவணங்களும் தயார் செய்து வையுங்கள்.
0 Comments:
إرسال تعليق