அடிக்கின்ற வெயிலுக்கு மக்கள் பலர் அதிகமாக தர்பூசணி பழத்தை சாப்பிட்டு வருகின்றன. ஆனால் அதிலும் கலப்படம் செய்வதாக சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தர்பூசணி பழம்
கோடைகாலம் தொடங்கியதுமே மோர் தயிர் தர்பூசணி சீசன் தொடங்கி விடும். வெயிலுக்கு இதமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். இது ஒரு பீஸ் இருபது ரூபாய் முதல் விற்பனை செய்வதால் ஏழை மக்கள் கூட இதை வாங்கி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் தர்பூசணி பழத்திலும் கலப்படம் கலப்பதாக சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரசாயன சாயம்
அதாவது சிவப்பு நிறமாக இருக்க வேண்டும் என்பதாக ரசாயனம் கரைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் கூறுகையில், விற்பனையாளர்கள் தர்பூசணி துண்டுகளில் கலர் பொடியை சர்க்கரை பாகுவில் கலந்து பூசுவதை பார்க்க முடிவதாக தெரிவித்தார். இயற்கையான சுவையை மாற்றி அமைக்கும் உணவில் தேவையற்ற சர்க்கரையை சேர்ப்பது உடலுக்கு தீங்கானது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
0 Comments:
إرسال تعليق