> பிளஸ்-2 தேர்வு குறித்து பெற்றோர் தெரிவித்த கருத்து பற்றி இன்று மாலை ஆலோசனை.. ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பிளஸ்-2 தேர்வு குறித்து பெற்றோர் தெரிவித்த கருத்து பற்றி இன்று மாலை ஆலோசனை..

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு குறித்து பெற்றோர் தெரிவித்த கருத்து பற்றி இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்துகிறார். 

பிளஸ் -2 பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், பள்ளிகள் சார்பில் இணையதளம் வாயிலாக கருத்துகள் கேட்கப்பட்டன. இது தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடந்த ஆலோசனையின் போது பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்துகள் கேட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை வரை கருத்துக்கள் கேட்கப்பட்டது. 

இதில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பிளஸ் -2 தேர்வை நடத்துவதுதான் மாணவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது என கூறி உள்ளனர். இது குறித்து சில ஆசிரியர்கள் கருத்து கூறுகையில், பிளஸ்-2 வகுப்பில் அனைவரும் தேர்ச்சி. ஆனால் மதிப்பெண் அதிகம் பெற விரும்பும் மாணவர்கள் தேர்வை எழுதலாம் என்கிற ஒரு முடிவை அரசு எடுத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறி உள்ளனர்.

Share:

0 Comments:

إرسال تعليق

📣 Join WhatsApp Channel