> பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆன்லைனில் - நடத்தப்படாது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ்!! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆன்லைனில் - நடத்தப்படாது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ்!!

 ''பிளஸ் 2 பொதுத்தேர்வு வகுப்பறையில் தான் நடக்கும்.

 'ஆன்லைனில்' நடத்தப்படாது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிச்சயம் நடக்கும். வகுப்பறைக்கு வந்தே மாணவர்கள் தேர்வு எழுதுவர். ஆன்லைனில் தேர்வு நடத்தப்படாது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆகையால், மாணவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, சரியான நேரத்தில், தேர்வு குறித்த முடிவு எடுக்கப்படும்.மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளியை மட்டும் மனதில் வைத்து பேசினர். தமிழகம் சார்பில் மட்டுமே, 'ஸ்டேட் போர்டு' மாணவர்களை மனதில் வைத்து பேசி உள்ளோம்.சென்னையில் மேலும் ஒரு பள்ளி மீது புகார் வந்துள்ளதால், அந்த பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான புகார்கள் குறித்து, குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் நெறிமுறைகள் தெரிவிக்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் விசாகா கமிட்டி அமைப்பது குறித்தும், உளவியல் ரீதியாக மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.மீண்டும் 'பப்ஜி' விளையாட்டு தொடர்வது குறித்து சைபர் கிரைம் போலீசார் மூலம் விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Share:

0 Comments:

إرسال تعليق

📣 Join WhatsApp Channel