> ஜனவரியில் பள்ளிகள் திறப்பு? ஆசிரியர்களுக்கு பயிற்சி ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ஜனவரியில் பள்ளிகள் திறப்பு? ஆசிரியர்களுக்கு பயிற்சி

நோய் தடுப்பு முறை

தற்போது, கொரோனா தொற்று குறைந்து விட்டதால், கல்லுாரிகள் திறக்கப்பட்டு, இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியுள்ளன. தனியார் பயிற்சி மையங்களும் திறக்கப்பட்டு உள்ளன. இதைத் தொடர்ந்து, ஜனவரியில் பள்ளிகளை திறக்க, முதல்வரிடம், பள்ளி கல்வித் துறை அனுமதி கோரியுள்ளது. அதற்கேற்ப, முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன.



அதாவது, பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்தால், அவர்களை தொற்றில் இருந்து பாதுகாப்பது, நோய் தடுப்பு முறைகளை பின்பற்றுவது தொடர்பான வழிமுறைகள் வழங்க, பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், இன்றும்; முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, நாளையும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மேலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 18 மற்றும், 19ம் தேதிகளிலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு, 21 மற்றும், 22ம் தேதிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இணையதளம்

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், இணையதளம் வழியாக, இந்த பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. பள்ளி வளாகத்திற்குள், கொரோனா தடுப்பு தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள்; மாணவர்களின் ஆரோக்கியம்; உளவியல் ரீதியான பயிற்சி; தொற்று குறித்த விழிப்புணர்வு ஆகியவை குறித்து, வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என, பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Share:

0 Comments:

إرسال تعليق